தி.மு.க

மருத்துவ உதவி கேட்ட குழந்தைக்கு தி.மு.க 2 லட்சம் நிதிஉதவி: குழந்தையின் தாய்க்கு மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

புதுக்கோட்டையில் மருத்துவ உதவி கேட்ட குழந்தைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்று 2 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ உதவி கேட்ட குழந்தைக்கு தி.மு.க 2 லட்சம் நிதிஉதவி: குழந்தையின் தாய்க்கு மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நூதன நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்ற ஒரு தம்பதியினர் புதுக்கோட்டையில் நேற்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மருத்துவ உதவி கேட்ட நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்று அந்த தம்பதியினருக்கு வீடு தேடிச் சென்று தி.மு.க எம்.எல்.ஏ 2 லட்சம் நிதி உதவி வழங்கியதோடு, குழந்தையின் தாயிடம் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசச் செய்த நிகழ்வு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஊனையூர் கிராமத்தில் நேற்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அதைத் தான் ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள காயம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாங்கனாம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி வேலை பார்த்து வரும் செல்வராஜ் - அமுதா என்ற ஏழை தம்பதியர் தங்களது ஒன்றரை வயது மகள் ரட்ஷிதாவிற்கு கண்ணில் ஏற்பட்டுள்ள நூதன குறைபாடு நோயினால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்து வருவதாகவும், மரபணு பிரச்சனையால் தங்கள் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள கண் பாதிப்பிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தங்களிடம் பணவசதி இல்லை என்றும், அதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உதவ வேண்டும் எனவும் அவரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

மருத்துவ உதவி கேட்ட குழந்தைக்கு தி.மு.க 2 லட்சம் நிதிஉதவி: குழந்தையின் தாய்க்கு மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

அவர்களது கோரிக்கையை ஏற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அந்தக் குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க தி.மு.க சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேடையிலேயே உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் மருத்துவ செலவிற்காக இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் ரூ.2 லட்சத்தை அந்த சிறுமியின் பெற்றோரிடம் அவரது வீட்டிற்கு நேரில் சென்று இன்று வழங்கினார்.

அப்போது ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதனை தொடர்பு கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பணம் கொடுக்கப்பட்ட தகவலைத் உறுதிப்படுத்திக் கொண்டு அந்தப் குழந்தையின் தாய் அமுதாவிடம் போனை கொடுக்கச் சொல்லி, குழந்தைக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து விசாரித்து நம்பிக்கை தெரிவித்ததோடு குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தி.மு.க செய்யும் என்றும் உறுதி அளித்தார்.

மருத்துவ உதவி கேட்ட குழந்தைக்கு தி.மு.க 2 லட்சம் நிதிஉதவி: குழந்தையின் தாய்க்கு மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

நேற்று தங்கள் குழந்தைக்கு மருத்துவ உதவி வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செல்வராஜ் - அமுதா தம்பதியினர் கோரிக்கை மனு கொடுத்து இருந்த நிலையில், இன்று தி.மு.க எம்.எல்.ஏ மூலம் வீடு தேடி வந்து நிதி கொடுக்கப்பட்ட நிகழ்வு அந்த பெற்றோரை மட்டுமன்றி அந்த கிராம மக்களையே நெகிழச் செய்துள்ளது.

உடனடியாக குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் நிதி வழங்கிய தி.முக எம்எல்ஏ மெய்யநாதனுக்கும், செல்வராஜ் - அமுதா தம்பதியர் மற்றும் அக்கிராம மக்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories