தி.மு.க

‘அவைத்தலைவர்’ என்ற பெயர் வர காரணமாக இருந்தவர் மறைந்த மா.செங்குட்டுவன் - ஆர்.எஸ்.பாரதி புகழாரம்!

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுகவிற்கு பெரும்பான்மையான வாக்குகளை பெற்றுத் தந்தவர் மா.செங்குட்டுவன்.

‘அவைத்தலைவர்’ என்ற பெயர் வர காரணமாக இருந்தவர் மறைந்த மா.செங்குட்டுவன் - ஆர்.எஸ்.பாரதி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மறைந்த தி.மு.கழகத்தின் மூத்த முன்னோடி திராவிட இயக்க எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் கவிஞருமான கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் (93) அவர்களது உடலுக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

“திராவிடர் கழகத்திலிருந்து, திராவிட முன்னேற்ற கழகம் கட்சி தொடங்கிய நாளில் இருந்து உடன் பயணித்தவர் செங்குட்டுவன். திராவிட முன்னேற்ற கழகம் உருவாவதற்கு முன்னோடியாக இருந்த தலைவர்கள் இறந்த நிலையில் தற்போது மா.செங்குட்டுவன் மறைவு வருத்தமளிக்கிறது. கழகத்தினுடைய முதல் பொதுக்குழுவில் அங்கம் வகித்தவர்.

திராவிட முன்னேற்ற கழகம் சமஸ்கிருதத்திலிருந்து ஒரு சில வார்த்தைகளை நீக்கி தமிழிலேயே மிக முக்கியமான வார்த்தைகள் தொடங்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர். அவைத் தலைவர் என்று சொல் வருவதற்கு வழிவகுத்தவர் செங்குட்டுவன் என்பதை நான் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

‘அவைத்தலைவர்’ என்ற பெயர் வர காரணமாக இருந்தவர் மறைந்த மா.செங்குட்டுவன் - ஆர்.எஸ்.பாரதி புகழாரம்!

கழகத்தைத் தோற்றுவித்த தலைவர்களில் அவரவர்க்கு தனிச் சிறப்பு உண்டு அவ்வகையே இவருக்கும். அவருடன் பழகுவதற்கு 50 ஆண்டு காலம் கிடைத்திருந்தது. கழக வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றவர்தான் மா.செங்குட்டுவன் இறுதியாக இரண்டு ஆண்டுக்கு முன்னர் தி.மு.க தலைமை கழகத்தில் பேராசிரியர் விருதுக்கான விருதை வாங்குவதற்கு மேடை முன்பு தனியாக யார் உதவியுமின்றி அவரே நடந்து வந்து வாங்கியது அரங்கத்தில் அமர்ந்து இருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியரோடு நெருக்கமாக பழகியவர்.

குறிப்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.கவிற்கு பெரும்பான்மையான வாக்குகளை பெற்று தந்தவர் மா.செங்குட்டுவன். அவரின் ஆன்மா சாந்தி அடைய தி.மு.கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories