தி.மு.க

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’: தி.மு.க தலைவரின் 2ஆம் கட்ட சுற்றுப்பயண விவரங்களை வெளியிட்டது தலைமைக் கழகம்!

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் இரண்டாம் கட்டச் சுற்றுப்பயண விவரங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’: தி.மு.க தலைவரின் 2ஆம் கட்ட சுற்றுப்பயண விவரங்களை வெளியிட்டது தலைமைக் கழகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பரப்புரைத் திட்டங்களின்படி,‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் இரண்டாம் கட்டச் சுற்றுப்பயண விவரங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு :

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 4-ம் தேதி 2-ம் கட்டச் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அதன்படி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் மதியம் 1 மணிக்குப் பேசுகிறார்.

மறுநாள் 5-ம் தேதி காலை 8 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம் ரோடு கலைஞர் திடலில் பேசுகிறார். மதியம் 1 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, ஸ்ரீவைகுண்டம் நட்டாச்சி ஊராட்சி, பட்டாண்டிவிளையில் நடைபெறும் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

அதேபோல 6-ம் தேதி காலை 8 மணிக்கு, கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் கூட்டத்திலும், மதியம் 1 மணிக்கு திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வீரவநல்லூர் பேரூராட்சிப் பகுதியிலும், திருநெல்வேலி மத்திய மாவட்டம் அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலையிலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறார்.

மேலும் பிப்ரவரி 7-ம் தேதி காலை 8 மணிக்கு தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட, சங்கரன்கோவில் அண்ணா திடலிலும், மதியம் 1 மணிக்கு விருதுநகர் பட்டம்புதூர் ஊராட்சியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் ஸ்டாலின் பேசுகிறார்.

2-ம் கட்டச் சுற்றுப்பயணத்தின் இறுதியாக 8-ம் தேதி மதியம் 1 மணிக்கு, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பத்தூர், கே.வைரம்பட்டி ஊராட்சியில் நடைபெறும் நிகழ்சியில் கலந்துகொண்டு தனது பிரச்சாரத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்கிறார்.

banner

Related Stories

Related Stories