தி.மு.க

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் : துரைமுருகன் அறிவிப்பு!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 21ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் : துரைமுருகன் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 21ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 21-01-2021, வியாழக்கிழமை, மாலை 5 மணி அளவில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.

அப்போது, மாவட்டக் கழகச் செயலாளர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் “கழக ஆக்கப் பணிகள்” குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories