தி.மு.க

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கழகத்தில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

பல்வேறு கட்சி நிர்வாகிகள், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கழகத்தில் இணைந்தனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.கவை சேர்ந்த, உடன்குடி ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளரும், உடன்குடி ஒன்றிய பஞ்சாயத்து கூட்டமைப்புச் செயலாளரும், செட்டியாபத்து ஊராட்சிமன்றத் தலைவருமான கே.பாலமுருகன் தி.மு.கவில் இணைந்தார்.

அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கழகத்தில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவர் பி.பொன்னுதுரை தி.மு.கவில் இணைந்து, ஈரோடு மண்டலத்தை சேர்ந்த ஒரு இலட்சம் உறுப்பினர்கள் கொண்ட தனது கட்சியை தி.மு.கவில் இணைத்தார்.

அப்போது கழக துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கழகத்தில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், லோக் ஜன் கட்சியின் (LJP) முன்னாள் மாநில தலைவர் Sa-Ya-Gosh டாக்டர் எம்.மதிவாணன் தி.மு.கவில் இணைந்தார். அப்போது தருமபுரி மாவட்ட தி.மு.க செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ உடனிருந்தார்.

banner

Related Stories

Related Stories