தி.மு.க

“இந்தியை திணிப்பதை தொடர்ந்து முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” - கனிமொழி எச்சரிக்கை!

மத்திய அரசு இந்தியை புகுத்துவதை தொடர்ந்து முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தி.மு.க. கனிமொழி கூறியுள்ளார்.

kanimozhi m.p
twitter kanimozhi m.p
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை விமான நிலையத்தில் தி.மு.க மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

“மத்திய அரசு தொடர்ந்து மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளாமல் அவர்களுக்கு புரியாத மொழியில் தொடர்பு கொள்ள வேண்டிய சூழலை கட்டாயமாகுகிறது. இந்தி தெரியவில்லை என்றால் அரசிடமிருந்து எந்த பதிலையும் தொடர்பையும் பெற முடியவில்லை.

கடிதங்கள் கூட இந்தியில் தான் அனுப்ப கூடிய சூழல் மத்திய அரசிடம் இருக்கிறது. மக்களிடம் எல்லா வகையிலும் இந்தியை திணிக்க கூடிய சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி கொண்டு இருக்கிறது. மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

ரெயில்வே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்தால் வரும் குறுந்தகவலை கூட மக்களால் படிக்க முடியாது. குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் இந்தியை புகுத்துவதையே தொடர்ந்து செய்வது மோசமான விளைவுகளை உருவாக்கும்.

ஹத்ராஸ் நடந்து சம்பவத்தை மூடி மறைக்க தான் அரசு முயற்சி செய்து கொண்டு இருந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வரவிடாமல் இறுதி சடங்குகளையும் போலீசாரே நடத்தி உள்ளனர். இதை வெளிப்படுத்தி பத்திரிக்கையாளரை பாடுபடுத்தி உள்ளனர்.

குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்காமல் மூடி மறைக்கவும் அங்கு செல்ல கூடியவர்களை தடுப்பது அரசியல் கட்சி தலைவர்களை தாக்குவது என்று தான் செயல்படுகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி தாக்கப்பட்டு உள்ளார். மூடி மறைக்க தான் அரசு செயல்படுகிறது. நியாயம் கிடைக்க செயல்படவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories