தி.மு.க

இந்தியை திணிப்பதுதான் IRCTC-ன் பிரதான வேலையா? - தி.மு.க எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் விளாசல்!

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ரயில் டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்தி வருவது தொடர்பாக தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் வகையில் மத்திய மோடி அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளை கையாண்டு வருகிறது. ஆயினும் அவ்வாறு இந்தி திணிக்கப்படும் போதெல்லாம் பல்வேறு எதிர்ப்புகள் கண்டனங்கள் எழுந்த பிறகு அதனை சமாளித்து வருவதையும் மத்திய அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது.

இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் அதற்கான குறுஞ்செய்தி இந்தியில் வருவதற்கு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய அரசியலமைப்பில் 23 மொழிகள் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால். ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்கும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி தத்தம் மாநில மொழிகளில் டிக்கெட் உறுதிப்படுத்துதல் செய்தியை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது போன்று அனைத்து தளங்களிலும் இந்தியை திணித்து மக்களைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்திவிட்டு அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories