தி.மு.க

“தேசத்தந்தை மகாத்மா காந்தி விரும்பிய அனைவருக்குமான நாடு அமைக்கப் போராடுவோம்”: மு.க.ஸ்டாலின் வாழ்த்து !

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய அண்ணல் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாத்மாவின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் மற்றும் பல அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல், தமிழகத்திலும் சென்னையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பலர் மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில், காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “உலக உத்தமர் மகாத்மா காந்தி பிறந்தநாள் இன்று!

சுதந்திரக் காற்றை வீசச் செய்த தேசத்தந்தை விரும்பிய சமத்துவ சமூகம் - நல்லிணக்க சமுதாயம் - அனைவருக்குமான நாடு அமைக்கப் போராடுவோம்!

கிராமங்களே இந்தியாவின் இதயம் என்றார்; கிராமம் காக்க, விவசாயி வாழ நம்மை அர்ப்பணிப்போம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories