தி.மு.க

எடப்பாடி பழனிசாமி ‘விவசாயி’க்கு மட்டும் எப்படி வேளாண் மசோதா ஆதரவாக தெரிகிறது? - மா.சுப்பிரமணியன் கேள்வி!

விவசாயிகள் மசோதா விவசாயிகள் எல்லோருக்கும் எதிராக இருக்கும்போது முதல்வர் எடப்பாடிக்கு மட்டும் எப்படி ஆதரவாக தெரிகிறது என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா. சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி ‘விவசாயி’க்கு மட்டும் எப்படி வேளாண் மசோதா ஆதரவாக தெரிகிறது? - மா.சுப்பிரமணியன் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி ‘எல்லோரும் நம்முடன்’ என்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. இன்று சென்னை தெற்கு மாவட்டத்தில் நடைபெற்ற இணையவழி தி.மு.க உறுப்பினர் சேர்க்கை முகாமை தெற்கு மாவட்ட செயலாளரும், சைதை சட்டமன்ற உறுப்பினருமான மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.கவில் சேர வேண்டும் என அனைவரும் தங்களைஇ ஆர்வமுடன் உறுப்பினராக இணைத்து கொள்கின்றனர். 45 நாட்களில் 25 லட்ச புதிய உறுப்பினர்களை இணைய வழியில் இணைக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகப்படுத்தி வைத்ததை அடுத்து, இதுவரை 1 லட்சாத்து 70 ஆயிரத்து 738 பேர் ஆன்லைன் மூலம் உறுப்பினராக இணைந்துள்ளனர் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இணையதளம் மூலம் தி.மு.கவில் இணைந்ததவர்கள் எண்ணிக்கை விளம்பரத்திற்காக என்று கூறிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கருத்திற்கு ‘எல்லோரும் நம்முடன்’ என்ற இணையதளம் மூலம் புதிய உறுப்பினர்கள் எண்ணிக்கைகளை உண்மையானது என சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து வேளாண் மசோதா குறித்து பேசிய அவர், “இந்தியா முழுவதும் அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய மசோதா எதிர்ப்பு தெரிவிக்கும்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிக்கு மட்டும் இந்த மசோதா எப்படி ஆதரவாக தெரிகிறது? மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள போது, தமிழக முதல்வருக்கு எப்படி ஆதரவாக தெரிகிறது குற்றம் சாட்டினார்.

banner

Related Stories

Related Stories