தி.மு.க

“ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை வழங்கவில்லை; கூட்டாட்சியை பலவீனப்படுத்தும் மத்திய அரசு” : தி.மு.க எம்.எல்.ஏ

கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ குற்றம்சாட்டினார்.

“ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை வழங்கவில்லை; கூட்டாட்சியை பலவீனப்படுத்தும் மத்திய அரசு” : தி.மு.க எம்.எல்.ஏ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 14- ஆம் தேதி தொடங்கியது. மூன்றாவது நாளான இன்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு, புதிய கல்வி கொள்கை, இந்தி திணிப்பு குறித்து தி.மு.க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

சட்டப்பேரவையில் பேசிய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “ஜி.எஸ்.டி மூலம் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு 12,400 கோடி ரூபாய் வராமல் நிலுவையில் உள்ளது. மாநில அரசு இதனால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இதுவரை மத்திய அரசு ஜி.எஸ்.டி நிலுவை தொகையை தமிழக அரசுக்கு வழங்கவில்லை. மாறாக மத்திய நிதி அமைச்சர் compensation fund ஈன கடனாக வாங்கிக் கொள்ளவும் எனக் கூறியுள்ளார்.

கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும் வகையில், உரிமைகளை பறிக்கும் விதமாக மத்திய அரசு தற்போது செயல்பட்டு வருகிறது. இது இயற்கை நீதிக்கு எதிராகவும் சட்டத்திற்கு எதிராகவும் இருக்கிறது.

பழைய வரியான சேல்ஸ் டாக்ஸ் முறைக்கு மாறிவிடும் நிலைக்கு தள்ளப்படும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது” எனக் குற்றம்சாட்டினார்.

banner

Related Stories

Related Stories