தி.மு.க

“ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.கவினர் தி.மு.க-வில் இணைவார்கள்” : குள்ளம்பாளையம் கே.கே.செல்வன்

அ.தி.மு.க. அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.

“ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.கவினர் தி.மு.க-வில் இணைவார்கள்” : குள்ளம்பாளையம் கே.கே.செல்வன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.கவில் ஜெயலலிதாவுக்குப் பிறகு கட்சியின் செயல்பாடுகள் முறையாக இல்லாததால் தி.மு.கவில் இணைந்ததாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு வடக்கு மாவட்டம், அ.தி.மு.க. அமைச்சர் கே.எஸ்.செங்கோட்டையன் அண்ணன் மகன் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன் (தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க செயலாளர் - அகில இந்திய மருந்து வணிகர் சங்க பொருளாளர்), கோபி கே.ஈ.கதிர்பிரகாஷ், மாவட்ட மருந்து வணிகர் சங்க தலைவர் கோபி ஆர்.துரைசாமி ஆகியோருடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

“ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.கவினர் தி.மு.க-வில் இணைவார்கள்” : குள்ளம்பாளையம் கே.கே.செல்வன்

அதுபோது, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம், கோபி நகரச் செயலாளர் என்.ஆர்.நாகராஜ், கோபி ஒன்றியச் செயலாளர் எஸ்.ஏ.முருகன், நம்பியூர் ஒன்றியப் பொறுப்பாளர் பி.செந்தில்குமார், டி.என்.பாளையம் ஒன்றியப் பொறுப்பாளர் எம்.சிவபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

தி.மு.க-வில் இணைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வன், "வரும் சட்டமன்றத் தேர்தலில் ‌தி.மு.க வெற்றிக்காக அயராது பாடுபடுவோம். ஈரோடு மாவட்டத்தில் தி.மு.கவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தருவோம்.

“ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.கவினர் தி.மு.க-வில் இணைவார்கள்” : குள்ளம்பாளையம் கே.கே.செல்வன்

அ.தி.மு.கவில் கட்சித் தொண்டர்களை கையாளுவதில் தற்போது குறைபாடுகள் எழுந்துள்ளது. விரைவில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் மாற்றுக்கட்சியினர் தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சியில் அடுத்த தமிழக முதல்வர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ள முடியாததால் அ.தி.மு.க-வில் இருந்து வெளியேறினேன். அ.தி.மு.க ஆட்சியில் இன்னும் பல சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம். ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க செயல்பாடுகள் முறையாக இல்லை.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories