தி.மு.க

பழங்குடியினருக்கு நீதி கேட்டு, வங்கி அதிகாரிக்கு சமத்துவ பாடமெடுத்த தி.மு.க எம்.எல்.ஏ! (வீடியோ)

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பழங்குடியின மக்களுக்காக நீதி கேட்டு வங்கி மேலாளரை கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்ததோடு, சமத்துவப் பாடமும் எடுத்துள்ளார்.

பழங்குடியினருக்கு நீதி கேட்டு, வங்கி அதிகாரிக்கு சமத்துவ பாடமெடுத்த தி.மு.க எம்.எல்.ஏ! (வீடியோ)
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மன்னார்குடியில் தொழிற்கடன் கேட்டு விண்ணப்பித்த பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடன் வழங்காமலும், சரியாக பதிலளிக்காமலும் தொடர்ந்து ஓராண்டாக்கும் மேலாக அலைக்கழித்து வந்துள்ளார் ஒரு வங்கி மேலாளர்.

கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தால் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பலர் இன்னும் தத்தளித்து வருகின்றனர். அரசின் நிவாரண உதவி சரிவரக் கிடைக்காத நிலையில் தொழில் துவங்க வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்து ஓராண்டாகியும் அதனை பரிசீலனைக்கு ஏற்காமல் வங்கியில் அலைக்கழித்துள்ளனர்.

தொழிற்கடன் வேண்டி விண்ணப்பித்த திருமக்கோட்டை பகுதி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களை வங்கி மேலாளர் இழிவுபடுத்தி, அலைக்கழித்த தகவல், மன்னார்குடி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவின் காதுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அவர் தொலைபேசி மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தும் வங்கி மேலாளர் செவிசாய்க்கவில்லை.

பழங்குடியினருக்கு நீதி கேட்டு, வங்கி அதிகாரிக்கு சமத்துவ பாடமெடுத்த தி.மு.க எம்.எல்.ஏ! (வீடியோ)
Admin

சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பழங்குடியினத்தவர்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் உத்தரவைப் பெற்று மேலாளருக்கு அனுப்பியுள்ளார். அதன் பின்னும் வங்கிக் கடன் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டுள்ளது.

இதையறிந்த டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ, நேரடியாக களத்தில் இறங்கி வங்கி மேலாளரைச் சந்தித்து இதுகுறித்து உரிய விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த வங்கி மேலாளர் ஓய்வுபெற இன்னும் சில காலமே இருப்பதால் கையெழுத்து போட்டு சிக்கலில் மாட்ட விரும்பவில்லை என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

வங்கி மேலாளரிடம் விளக்கம் கேட்டபோது, தயங்கி நின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த வங்கி வாடிக்கையாளரை அருகே அழைத்த டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ, அவரை கட்டாயப்படுத்தி நாற்காலியில் அமரவைத்து, சமத்துவத்திற்கு செயல்முறை விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில், முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு புத்துணர்வு முகாமைத் தொடங்கிவைக்கச் சென்ற தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணிகளை கழற்றச் சொன்னது கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

தற்போது, தி.மு.க-வைச் சேர்ந்த இளம் சட்டமன்ற உறுப்பினர் பழங்குடியின மக்களுக்காக நீதி கேட்டு வங்கி மேலாளரை கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்ததோடு, சமத்துவப் பாடமும் எடுத்துள்ளார். இதுதான் திராவிட இயக்க வரலாற்றின் தனித்துவம் என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories