தி.மு.க

"கோர்ட்டுக்கு போக எங்களுக்கு தெரியாதா? அப்புறம் எதுக்கு RO நீங்க இருக்கீங்க?” - தருமபுரி எம்.பி வாதம்!

தருமபுரியில் தி.மு.கவின் வெற்றியை மாற்றிய தேர்தல் அதிகாரியை எதிர்த்து எம்.பி. செந்தில்குமார் காரசாரமாக வாதத்தில் ஈடுபட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

"கோர்ட்டுக்கு போக எங்களுக்கு தெரியாதா? அப்புறம் எதுக்கு RO நீங்க இருக்கீங்க?” - தருமபுரி எம்.பி வாதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏராளமான பகுதிகளிலும் தி.மு.க. வெற்றி உறுதியானாலும் அ.தி.மு.கவினரின் முறைகேடுகளால் அறிவிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி ஒன்றியம் நியூகாலனி மற்றும் பழைய தருமபுரி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க வேட்பாளர்கள் பெற்ற வெற்றியை மறைத்து அ.தி.மு.க வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு தி.மு.கதான் வெற்றி எனத் தெரிந்து வேண்டுமேன்றே அ.தி.மு.க வெற்றியடைந்ததாக கடைசி நேரத்தில் தேர்தல் அதிகாரி மாற்றி அறிவித்துள்ளார்.

இதனையறிந்த தருமபுரி மக்களவைத் தொகுதி தி.மு.க உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார், தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து தி.மு.க பெற்ற வெற்றியை மறைத்து அ.தி.மு.க வெற்றி பெற்றதாக அறிவித்தது ஏன் எனக் கேட்டு கடுமையாக வாதம் செய்துள்ளார்.

தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பியபோது, தபால் வாக்குகளின் எண்ணிக்கை மாறியதாலேயே அ.தி.மு.க வெற்றி பெற்றதாக அறிவித்ததாக கூறியுள்ளார். அதற்கு செந்தில்குமார், தபால் வாக்கு எண்ணப்படவே இல்லயென ஏஜென்ட் கூறுகிறார். ஆனால் நீங்களோ தபால் வாக்கு எண்ணிக்கையில் மாறுதல் ஏற்பட்டதால் அ.தி.மு.க வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளீர்கள். எந்த அடிப்படையில் தேர்தல் முடிவை மாற்றினீர்கள்?

அந்த ஏஜென்டையே வரவழைத்து கேட்கலாம் எது உண்மை என்று தெரிந்துவிடும். நீங்கள் சட்டப்படி இருந்திருந்தால் நான் ஏன் சார் கேட்கப்போறேன்? ஏஜென்ட்டிடம் விசாரித்த பிறகு பிறகு என் மீது தவறு இருந்தால் என்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே கூட தள்ளுங்கள் என எம்.பி செந்தில்குமார் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியானதும் அது இணையத்தில் வைரலாகி வருவதோடு செந்தில்குமாருக்கு பலரும் பாராட்டும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories