தி.மு.க

அடிமை அராஜக கூட்டணியை கதறவிடும் தி.மு.கவினர்- இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டீவீட்!

அடிமைகள் அள்ளிவிடும் அவதூறுகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மையை உரக்கச் சொல்கிறது ’பொய் பெட்டி’ நிகழ்ச்சி

அடிமை அராஜக கூட்டணியை கதறவிடும் தி.மு.கவினர்- இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டீவீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அடிமை, அராஜக கூட்டணியை தி.மு.கவினர் களத்தில் கதற விடுவதாக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அடிமை, அராஜக கூட்டணியை களத்தில் தி.மு.க. தோழர்கள் கதறவிடுகிறார்கள். ‘பொய் பெட்டி’ நிகழ்ச்சி மூலம் சமூக வலைதளங்களிலும் தி.மு.க இளைஞரணியினர் அந்த பணியை தொடர்கின்றனர்.

கமிஷன், கரப்ஷன், கலெச்ஷனில் உச்சம் தொட்டுள்ளது இந்த அடிமை அ.தி.மு.க அரசு. இதனைக் கவிழ விடாமல் முட்டுக்கொடுக்கிறது பாசிச பா.ஜ.க அரசு. இவற்றுக்கான நம் எதிர்வினைகளைத் திசைதிருப்ப, அவதூறுகளை அள்ளி வீசி வருகிறது இந்த அடிமை அராஜக கூட்டணி.

குடியுரிமை சட்டம் தொடர்பாகவும், அதற்கான மசோதாவுக்கு தி.முக.வினர் வாக்களிக்காமல் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்புச் செய்வதாகவும் அ.தி.மு.கவினர் அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றனர். இவர்களை களத்தில் கதறவிடும் நம் தோழர்கள், சமூக வலைதளங்களிலும் இந்த பணியை தொடர்கின்றனர்.

அதன் ஒரு பகுதியே ‘பொய் பெட்டி’ நிகழ்ச்சி. அடிமைகள் அள்ளிவிடும் அவதூறுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மையை உரக்கச் சொல்வதே இதன் நோக்கம்.

‘பொய் பெட்டி’யின் முதல் நிகழ்ச்சிக்கான சிறப்பு அழைப்பாளராக பத்திரிகையாளர் கோவி.லெனின் பங்கேற்கிறார். அவரிடம் கேட்க விரும்பும் உங்களின் கேள்வி மற்றும் சந்தேகங்களை இன்று (டிச.,22) மதியம் 2 மணிக்குள் கமென்டில் பதியவும்.” என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories