தி.மு.க

“தமிழர்களுக்காக உழைக்கும் உம்மோடு தமிழகமே இருக்கிறது” - ட்விட்டரில் ட்ரெண்டாகும் #TNWithYouStalin

படைத்தலைவனாக, தி.மு.க தொண்டர்களோடு கட்சியை முன்னகர்த்திச் செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்களிலும் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

“தமிழர்களுக்காக உழைக்கும் உம்மோடு தமிழகமே இருக்கிறது” - ட்விட்டரில் ட்ரெண்டாகும் #TNWithYouStalin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளிடையே பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நீண்டகால நோக்கில் கட்சியை பலப்படுத்துவது குறித்து உரையாற்றினார்.

பகல் கொள்ளை - உளுத்துப் போன ஊழல் - எதற்கும் லஞ்சம் - எங்கும் கமிஷன் என்று, அவமானகரமான ஆட்சி ஒன்றை நடத்தி வரும் அ.தி.மு.க அரசையும் மற்றும் அது தனது அடிவருடும் ஆட்சி என்பதால், அதற்கு அனைத்து வகையிலும் பலத்த பாதுகாப்பு அளித்துவரும் மத்திய பா.ஜ.க அரசுக்கும் கண்டனம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்களும் மு.க.ஸ்டாலின் தலைமைல் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசிய மு.க.ஸ்டாலின், “எனது சக்திக்கு மீறி உழைக்கிறேன். வெற்றி சாதாரணமாகக் கிடைக்காது. எதிர்வரும் தேர்தல்களில் இன்னும் மிகக் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும்” எனத் தெரிவித்தார்.

“தமிழர்களுக்காக உழைக்கும் உம்மோடு தமிழகமே இருக்கிறது” - ட்விட்டரில் ட்ரெண்டாகும் #TNWithYouStalin

படைத்தலைவனாக, தி.மு.க தொண்டர்களோடு கட்சியை முன்னகர்த்திச் செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்களிலும் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையொட்டி, ட்விட்டரில் #TNWithYouStalin எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

சமூக வலைதளவாசிகள் பலரும் #TNWithYouStalin எனும் ஹேஷ்டேக்கில் தங்களது ஆதரவுக் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories