தி.மு.க

ஊழல் அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்கள் குறித்த முழுமையான விபரம்...

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. முத்தமிழறிஞர் கலைஞருக்கு “மணிமகுடம்” சூட்டிய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு!

தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நம்மை மீளாத்துயரில் மிதக்க விட்டு பிரிந்திருந்தாலும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்றைக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நம்மிடையே உயிரோடு நடமாடுவது போல் - நம்மிடையே வழக்கமாக உரையாடுவது போல் - அனைத்திற்கும் மேலாக நமக்கு அறிவுரை அளித்து ஆற்றுப்படுத்துவது போன்ற உணர்வை கடந்த ஓராண்டுக் காலமாக உருவாக்கித் தந்திருக்கிறார் என்பதை, தி.மு.கழகத்தின் இந்தப் பொதுக்குழு பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.

தனது தளராத உழைப்பின் மூலம் ஒவ்வொரு செங்கல்லாகப் பார்த்துத் தேர்ந்து அழகு மிளிர்ந்திடக் கட்டிய கழகத்தின் தலைமை நிலையமாம் “அண்ணா அறிவாலயத்தில்” கழகத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்று உயர்த்திக் காட்டும் கம்பீரத்துடன் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலை அமைத்தார். “தலைமகன்” என்று தன் வாழ்நாள் முழுவதும் போற்றி வளர்த்த முரசொலி அலுவலகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை நிறுவினார்.

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!


ஓராண்டு நினைவாக “நிறைந்து வாழும் கலைஞர்” என்ற “நினைவு மலர் 2019” - வருங்காலத் தலைமுறைக்கு வரலாற்று ஆவணமாக- கழகத்தின் கருவூலமாக வெளியிடத்தக்க ஏற்பாடுகளைச் செய்தார். “குறளோவியம்” தீட்டிய கலைஞர் அவர்களுக்கு, திருவாரூர் காட்டூரில், “அருங்காட்சியகம்” அமைக்கப்படும் என்ற அறிவிப்பை; தமிழக - இந்திய அரசியலின் ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டு காலத்தின் அவரது ஆளுமையை உலகிற்கு எடுத்துச் சென்று, ஒவ்வொருவரின் உள்ளம்தோறும் செதுக்கி வைத்திடும் அடுத்த கட்ட சீரிய முயற்சியாகவே இந்தப் பொதுக்குழு கருதுகிறது.

“மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்எனும் சொல்”

என்ற அய்யன் திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்ற தனயனின் தொண்டு இந்த “அருங்காட்சியகம்” என்பதையும் மீறி, நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்க வரலாற்றின் பெரும்பகுதிக்குச் சொந்தக்காரரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு - 70 ஆண்டுகள் கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்த அவருக்கு - சிறப்புச் செய்துள்ள கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டிப் போற்றிட இந்தப் பொதுக்குழு பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. ஒரு தொண்டன் தன் தலைவனுக்கு ஆற்றியுள்ள கழகத் தலைவரின் அரும்பணிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை இந்தப் பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது. அருங்காட்சியகம் அமைந்திட, ஒல்லும் வகையிலெல்லாம் ஒத்துழைப்பு நல்கிடவும் இந்தப் பொதுக்குழு உறுதியேற்கிறது.

2. நாடாளுமன்றத் தேர்தலிலும் - சட்டமன்ற இடைத்தேர்தலில்களிலும் ஈடிலா வெற்றியினை ஈட்டித்தந்த கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு!

28.8.2018ல் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற பொதுக்குழுவில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கழகத்தினுடைய தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, குறுகிய கால இடைவெளியில் 19.4.2019இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில், 39 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவதற்கும், தமிழக வாக்காளர்களில் ஏறத்தாழ 52.67 சதவீத வாக்காளர்களின் ஆதரவினைப் பெறுவதற்கும், அதே தேர்தல் களங்களில் சட்டமன்றத் தேர்தலில் 24 தொகுதிகளில் 13 தொகுதிகளை வென்றெடுப்பதற்கும் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்ட பரப்புரைப் பயணங்களும், தேர்தல் களத்தில் அவர் ஆற்றிய அரும்பணிகளும், ஓய்வறியா உழைப்பும், அரசியல் தொலைநோக்குச் சிந்தனையோடு தேர்தல் கூட்டணி அமைத்த வியூகமும், இந்தப் பெருவெற்றிக்கு முழுமையான காரணங்கள் என இப்பொதுக்குழு கருதுகிறது.

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

இத்தகைய ஈடிலா வெற்றியினை ஈட்டித் தந்து, கழகத்திற்குப் பெருமை சேர்த்த கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, இப்பொதுக்குழு பாராட்டையும், நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

3. வாக்காளர்களுக்கும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், செயல்வீரர்களுக்கும் நன்றி!

நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், கழகத் தலைவர் எத்தகைய கருத்துகளை மக்கள் முன் வைத்து வாக்குகளைக் கேட்டாரோ, அந்தக் கருத்துகளுக்கு அங்கீகாரம் அளித்திடும் வகையில், நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில், கழகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை வழங்கியும், தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் 24 தொகுதிகளில் 13 தொகுதிகளிலும் - புதுச்சேரி சட்டப்பேரவைக்கான இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களில் இரண்டு தொகுதிகளிலும் கழக கூட்டணி வெற்றி பெறுவதற்கு மனமுவந்து வாக்களித்த தமிழகம் மற்றும் புதுச்சேரி வாக்காளப் பெருமக்களுக்கும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், செயல் வீரர்களுக்கும், மேலும் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகளில் கழகக் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கும், இப்பொதுக்குழு தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

4. பொய்களைச் சொல்லியே பொழுது போக்கி, இரட்டை வேடம் போடும் அ.தி.மு.க ஆட்சிக்குக் கண்டனம்!

“பொய்யிலே பிறந்து பொய்களிலேயே வாழ்ந்து வரும்” அதிமுக அரசு,

• “110 அறிவிப்புகள்” ,

• “402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 15.19 லட்சம் பேருக்கு வேலை”,

• “மோனோ ரெயில் திட்டம் கொண்டு வருவோம்”,

• “நீட் தேர்வுக்கு விதிவிலக்கு பெறுவோம்”

• “உதய் திட்டத்தை எதிர்ப்போம்”

• “ஜி.எஸ்.டி சட்டத்தை எதிர்ப்போம்”

• “தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை எதிர்ப்போம்”

• “இந்தி மொழியைத் திணிக்க விடமாட்டோம்”

• “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்”

• “ மாநில உரிமைகளை பறிக்கவிடமாட்டோம்”

• “புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம்”

• “ஏழைத் தொழிலாளர் நலத்திற்கு விரோதமான சட்டங்களை தடுப்போம்”

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

• “மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தை எதிர்ப்போம்”

• “முத்தலாக் மசோதாவை எதிர்ப்போம்”

• “மாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் அகில இந்திய நுழைவுத் தேர்வை எதிர்ப்போம்”

• “15 ஆவது நிதிக்குழுவில் மாநிலத்தின் நிதி தன்னாட்சி உரிமையைப் பாதுகாப்போம்”,

• “சென்னை பெரு வெள்ளம், தமிழக வறட்சி, தானே புயல், வர்தா புயல், ஒகி புயல், கஜா புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களினால் பாதிக்கப்பட்டோர்க்கு உரிய நிவாரணம் வழங்க மத்திய அரசு நிதியை பெறுவோம்”

என்றெல்லாம் வார்த்தை ஜாலம் காட்டி பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, தமிழக மக்களை முதலில் எதிர்பார்க்க வைத்து முடிவில் ஏமாற்றி, இன்றைக்கு மாநில உரிமைகளைப் பறிகொடுத்து, மாநிலத்திற்குக் கிடைக்க வேண்டிய நிதியையும் பெற முடியாமல், எதிர்ப்போம் என்று கூறிய மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம் தன்னிச்சையாக இணங்கி, ஆதரவு தெரிவித்து - “இரட்டை வேடமும் கபட வேடமும்” போட்டு அ.தி.மு.க. ஆட்சி தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வஞ்சித்து வருவதற்கு தி.மு.கழகத்தின் இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

5. ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் அ.தி.மு.க ஆட்சி!

மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டிக் கொள்ளையடித்து அரசுக் கருவூலத்தைக் காலி செய்து - “கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்” என்ற ஒரே நோக்கத்துடன் அ.தி.மு.க ஆட்சி செயல்பட்டு வருகிறது. ஊழலும், லஞ்சமும் புறையோடிப் போய், காணுமிடம் எல்லாம் ஊழலே கண் சிமிட்டுகிறது.

• அ.தி.மு.க அமைச்சரவையில் உள்ள “முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிச்சாமி மீது 3120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறை ஊழல்”, இவ்வளவு மழை பெய்தும் ஏரி, குளங்கள் நிரம்பாததற்கு காரணமான 1,300 கோடி ரூபாய் தூர்வாரும் “குடிமராமரத்துத் திட்டத்தில் ஊழல்”, “காவல்துறையில் வாக்கி டாக்கி வாங்கியதில் 88 கோடி ரூபாய் ஊழல்”,

• “துணை முதலமைச்சர் திரு ஓ.பன்னீர்செல்வம் வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவித்த ஊழல்”

• “மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் மீது 40 கோடி குட்கா ஊழல், சட்ட விரோதமாக குவாரியை வெட்டி எடுத்ததில் 250 கோடி ரூபாய் ஊழல், ஆர்.கே.நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் ஊழல்”

• “உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி மீது எட்டு பினாமி கம்பெனிகள் ஆரம்பித்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உள்ளாட்சித் துறை ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், எல்.ஈ.டி. பல்பு ஊழல், குப்பை அள்ளும் வண்டி கொள்முதலில் ஊழல், சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரிய டெண்டர் மற்றும் வேலை நியமன ஊழல்”

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

• “மின்சாரத்துறை அமைச்சர் திரு தங்கமணி மீது காற்றாலை மின்சார ஊழல். மின் வாரியப் பொறியாளர் நியமன ஊழல், மின் வாரியத்திற்கு உதிரிப் பாகங்கள் வாங்குவதில் ஊழல், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்வதில் ஊழல், “

• “தொழில்துறை அமைச்சர் திரு எம்.சி.சம்பத்தின், முதல் மற்றும் இரண்டாம் உலக முத•ட்டாளர்கள் மாநாட்டு ஊழல், ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலை விரிவாக்க ஊழல்”

• “சுற்றுலாத்துறை டெண்டர் ஊழல்”

• “உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது 400 கோடி ரூபாய் பருப்பு கொள்முதல் ஊழல்”, மற்றும் “சர்க்கரை கொள்முதல் ஊழல்”

• “உயர்கல்வித் துறை அமைச்சர் திரு கே.பி.அன்பழகன் மீது அண்ணா பல்கலைக்கழக ஊழல், துணை வேந்தர் நியமன ஊழல், மதிப்பெண் மோசடி ஊழல்”

• “போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆம்னி பஸ் வாங்கிய ஊழல்”

• “சமூகநலத் துறை அமைச்சர் திருமதி சரோஜா மீது முட்டை டெண்டர் ஊழல்”

• “மீன்வளத் துறை அமைச்சர் திரு ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல்”

• “அமைச்சர் திரு. கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு மற்றும் மாபெரும் ஆவின் ஊழல்”

• “இவை தவிர ஒவ்வொரு அமைச்சர்களின் இலாகாக்களிலும் எண்ணிலடங்கா பணி நியமனம் - பணி இடமாறுதல் ஊழல்”

என்று வகைவகையான பல்வேறு “ஊழல்களின் உறைவிடமாக” அதிமுக ஆட்சி நடைபெற்று நாட்டையும் நாட்டு மக்களையும் சுரண்டி மக்கள் நலன் மறந்து, மக்களை வாட்டி வதைத்து வருவதற்கு தி.மு.கழகத்தின் இந்தப் பொதுக்குழு மிக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

6. ஊழலில் திளைத்திடும் அ.தி.மு.க அமைச்சர்களை வருமான வரித்துறை ரெய்டு - உரிய விசாரணை நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!

அ.தி.மு.க ஆட்சியில்,

• “திருப்பூர் கன்டெய்னர் விவகாரம்”

• “கரூர் திரு அன்புநாதன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு”,

• துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நெருக்கமான “சேகர்ரெட்டி வீட்டில் வருமானவரித் துறை ரெய்டு”,

• “தலைமைச் செயலாளராக இருந்த திரு. ராம்மோகன்ராவ் வீட்டில் - தலைமைச் செயலக அலுவலகத்தில் ரெய்டு”

• “டி.ஜி.பி,யாக இருந்த திரு டி.கே.ராஜேந்திரன் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு”

• “முதலமைச்சரின் சம்பந்தியின் பார்ட்னர் செய்யாதுரை, நாகராஜன் வீட்டில் ரெய்டு”

• “அமைச்சர் திரு விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு”

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

• “அமைச்சர் திரு காமராஜின் உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு”

• “ஈரோட்டில் ஜி.எஸ்.டி. மோசடி தொடர்பான ரெய்டு மற்றும் அதிமுக அமைச்சருக்கு தொடர்பு”

• “முன்னாள் அமைச்சர் நத்தம் திரு விஸ்வநாதன், முன்னாள் மேயர் திரு சைதை துரைசாமி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டுகள்”

• “கொடநாடு ரெய்டு”

என்று அ.தி.மு.க ஆட்சியாளர்கள் மீது சரமாரியாக நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டுகளை எல்லாம், “துருப்புச்சீட்டாக” அச்சுறுத்தும் ஆயுதங்களாக வைத்துக் கொண்டு - அதிமுக அரசை “பிளாக்மெயிலுக்குட்படுத்தி” - தனது எடுபிடி அரசாக வைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் போக்கையும்; அடிமைகளாகிவிட்டதால் அதிமுக அமைச்சர்களைக் போர்த்திக் காப்பாற்றும் மத்திய பா.ஜ.க. அரசின் பிற்போக்குத்தனமான செயலையும்; சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய வருமானவரித் துறை, அமலாக்கப் பிரிவு, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளைத் தலையாட்டிப் பொம்மைகளாக்கி, அவற்றின் மீதான நம்பகத்தன்மைக்கு பேராபத்து ஏற்படுத்தியிருப்பதையும்; இந்தப் பொதுக்குழு ஆழ்ந்த வேதனையுடன் பதிவு செய்வதுடன், மத்திய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மைக்குக் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

7. மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதத் திட்டங்களுக்குத் துணை போவதற்குக் கண்டனம்!

• “மரக்காணம் முதல் இராமநாதபுரம் வரை ஹைட்ரோ கார்பன்”

• “காவிரி டெல்டா மாவட்டங்களை வளைத்து பெட்ரோலிய மண்டலம்”

• “கதிராமங்கலம் ஆயில் குழாய் பதித்தல்”,

• “தேனியில் நியூட்ரினோ”

• “மேற்கு மாவட்டங்களில் விளைநிலங்கள் வழி மின் கோபுரங்கள் அமைத்தல்”,

• “சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை”,

• “திருச்சி பாரத மிகுமின் நிறுவனம், சேலம் இரும்பாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரித் தொழிற்சாலை ஆகியவற்றைத் தனியார் மயப்படுத்துதல்”,

• “உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யாதிருத்தல்”

• “இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பது”,

• “இந்திய மீனவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கும் சட்டத்தை உருவாக்கிய இலங்கை அரசைத் தட்டிக் கேட்டுத் தடுத்து நிறுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காதது”,

• “மீன் வளத்தை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்திட முயற்சி செய்யும் மத்திய அரசை எதிர்த்துக் கேட்காதது”,

• “அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க முன்வராதது”,

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

• “ரயில்வே திட்டங்களில் தமிழகத்தைப் புறக்கணிப்பது”

• “அறிவிக்கப்பட்ட மதுரை “எய்ம்ஸ்” மருத்துமனையை நிதிஒதுக்கீடின்றி முடக்கி வைத்திருப்பது”

• “தமிழகத்தில் உள்ள முக்கிய மத்திய அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலகத்தை வேறு மாநிலங்களுக்கு மாற்றுவது”

• “இராணுவத் தொழிற்சாலை உள்ளிட்ட முக்கிய தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனை குறைப்பது”

• “காவிரி, பாலாறு உள்ளிட்ட அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழகத்தை வஞ்சிப்பது”

• “செம்மொழியாம் தமிழ் மொழிக்கு உள்ள அந்தஸ்தை மத்தியில் அளிக்க மறுப்பது” மற்றும் “சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை முடக்கி வைத்திருப்பது”,

• “பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், ரயில்வே நிலையங்கள், வங்கிகள், சென்னையில் உள்ள மத்திய அரசின் துறைகள், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உள்ளிட்ட அனைத்திலும் இந்தி மொழி திணிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பது”

• “தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறையின் அபராத ரசீதில் கூட தமிழைப் புறக்கணிப்பது”

• “அனைத்துத் தேர்வுகளையும் இந்தி மொழியில் மட்டும் எழுத அனுமதிப்பது”

• “இந்தியில் மத்திய அரசின் விளம்பரங்கள்”

• “மத்திய அரசு திட்டங்களுக்கு இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவது”

• “அலுவலகங்களில் நூற்றுக்கு நூறு சதவீதம் இந்தி மொழியில் அலுவல்களைப் பார்ப்பது”

• “சென்னை மெட்ரோ ரயில்களிலும் இந்தி”

• “தென்னக ரயில்வே ஊழியர்களிடையே இந்தியில் பேச வேண்டும்”

• “இந்தியில் மட்டுமே தபால் துறைத் தேர்வு”

• “பள்ளித் தலைமையாசிரியர்களின் தலைமைப் பண்புப் பயிற்சிக்கு தமிழ் புறக்கணிப்பு”

என மத்தியில் உள்ள பா.ஜ.க அரசின் பல்வேறு தமிழ் விரோத - தமிழர் விரோத சூழ்ச்சித் திட்டங்களுக்கு இங்குள்ள அதிமுக அரசு முனுமுனுப்பேதுன்றித் துணை போவதுடன், மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியின் மதவாத, தமிழக விரோத கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும், ஊழல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கிலும் அதிமுக ஆட்சி நடத்துவதற்கும்; தமிழை, தமிழர்களை, தமிழக நலன்களைப் புறக்கணிக்கும் பா.ஜ.க. அரசுக்கும்; தி.மு.கழகத்தின் இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

8. அ.தி.மு.க ஆட்சியில் சீரழிந்துவிட்ட சட்டம் ஒழுங்கு!

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து சந்தி சிரித்து வருவதற்கும், நாளொரு கொலையும், பொழுதொரு கொள்ளையுமாக நடைபெற்று நாட்டையே உலுக்கி வருவதற்கும் இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைகள் தமிழகத்தில் “அமைதி” எத்தகையை “ஆபத்தில்” உள்ளது என்பதைத் தெளிவாக்கியுள்ளது; இது ‘அமைதிப் பூங்கா’ அல்ல, அரவங்கள் நெளியும் புற்றாக மாறியுள்ளது என்பதைத் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக ஜனநாயக ரீதியாக போராடிய 13 அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்ற ஆட்சி தான் அதிமுக ஆட்சி. இந்நிலையில், 250-க்கும் மேற்பட்ட இளம் பெண்களைச் சீரழித்த, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் திட்டமிட்டுச் செய்த குளறுபடிகளால் விடுதலையாவதும், கொடநாடு கொலை விவகாரத்தில் முதலமைச்சர் மீது குற்றம் சுமத்தினார் என்பதற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்து குண்டர் சட்டம் போட்டதை இப்போது உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பதும், அ.தி.மு.க அரசில் காவல்துறை அரசியல் மயமாக்கப்பட்டு விட்டதை உணர்த்துகிறது என இந்தப் பொதுக்குழு கவலையுடன் பதிவு செய்கிறது.

அ.தி.மு.க. அரசின் சட்ட விரோத, சுயப் பாதுகாப்பு உத்தரவுகளில் இருந்து விலகி நின்று, தமிழகக் காவல்துறை சுதந்திரமாக, பாரபட்சமின்றி பொதுமக்கள் நலனை மட்டுமே கருதிச் செயல்பட்டு - மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிடப் பாடுபட வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

9. 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்க!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பின்னரும், தமிழக ஆளுநர், அவர்களை விடுவிப்பதில் ஏன் காலதாமதம் செய்கிறார் என்பது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது. “அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று தமிழக ஆளுநர் அவர்கள், முதலமைச்சரிடம் கூறிவிட்டதாக வெளிவந்த செய்தியையும் முதலமைச்சர் மறுக்கவில்லை.

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

ஆகவே அ.தி.மு.க அரசு உடனடியாக 7 பேர் விடுதலையை வலியுறுத்த வேண்டும் என்றும், அமைச்சரவை முடிவின்படி தமிழக ஆளுநர் அவர்கள், 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமெனவும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

10. குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை மாநகரமும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் குடிநீர் பஞ்சத்தில் சிக்கும் விதத்தில் அலங்கோல ஆட்சி நடத்தும் அதிமுக அரசுக்கு இந்த பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. காலிக்குடங்களுடன் மக்களை அலைய விட்டு - ஒரு குடம் தண்ணீர் 10 அல்லது 15 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கிட வேண்டிய நிலை ஏற்பட்டு, ஜோலார்பேட்டையிலிருந்து ரயிலில் தண்ணீர் கொண்டு வந்தும் தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுக்க முடியாத அவலமான அரசாக அதிமுக அரசு இருந்து வருகிறது.

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

மழை பெய்ததால் “தற்காலிகமாக” குடிநீர் பிரச்சினை தீர்ந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தாலும், சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய தண்ணீர் இல்லை. இந்நிலையில் குடிநீர்ப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு “மெகா குடிநீர்த் திட்டங்களையும்”, “கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களையும்” விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று இந்த பொதுக்குழு அதிமுக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

11. அழிவு சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கிடுக!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயரிய கோட்பாட்டினை உலகிற்குச் சொன்ன அய்யன் திருவள்ளுவருக்கு, “காவி” வண்ணம் பூசி கொச்சைப்படுத்திய பா.ஜ.க.வினருக்கும், தஞ்சை - பிள்ளையார்பட்டியில் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு அவதூறு ஏற்படுத்தியவர்களுக்கும் - அதன் பின்னணியில் உள்ள மதவாத சக்திகளுக்கும் இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

மேலும், அதிமுக அரசு தனது மவுனத்தைக் கலைத்து; அய்யன் திருவள்ளுவரைச் சிறுமைப்படுத்துவது, தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஏற்படுத்தப்படும் மாறாத அவமானம் என்பதை உணர வேண்டும் என்றும்; இந்த மாதிரி விபரீத விளையாட்டுகளை நடத்தி - தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கம் மற்றும் சகோதர மனப்பான்மையைச் சீரழிக்கவும், கவனத்தைத் திசைதிருப்பவும் நினைக்கும் அழிவு சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து - அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

12. உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்திடுக!

கடந்த மூன்று வருடங்களாக, பல்வேறு காரணங்களைக் கூறி, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை எல்லாம் அவமதித்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் - “பஞ்சாயத்து ராஜ்” சட்டத்தின் நோக்கத்தைச் சிதறடித்து - உள்ளாட்சி ஜனநாயகத்தை சீர்குலைத்துள்ள அதிமுக அரசுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

இனியும் நீதிமன்றங்களை ஏமாற்றி காலதாமதம் செய்யாமல், விரைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

13. கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்பின் மீதான அய்யப்பாட்டை மத்திய அரசு தெளிவுபடுத்திட வேண்டும்!

அணுமின் நிலையங்கள் ஓர் நாட்டினுடைய பாதுகாப்பிற்கு நெருக்கமான தொடர்புடையது. எனவே எந்தவொரு நாடும் அணுமின் நிலையங்கள் பற்றிய விவரங்களை தெரிவிப்பதில்லை. அந்த அணுமின் நிலையங்களுக்கு நாட்டினுடைய உச்சபட்ச பாதுகாப்பு அம்சங்கள் செயல்படுத்தப்படும். அத்தகைய தேசிய பாதுகாப்போடு தொடர்புடைய அணுமின் நிலையங்களில் உள்ள கணினிகள் சந்தேகப்படத்தக்க வகையில் ஊடுருவப்பட்டிருக்கிறது என்பது நாட்டின் பாதுகாப்பிற்கு, அந்நிய சக்திகளால் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும்.

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

எனவே மத்திய அரசு இதுகுறித்து மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், உண்மை நிலையை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும், ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள பாதுகாப்பு அம்சங்களை முழு அளவில் நிறைவேற்றிட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

14. பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுத்திடுக!

டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியிருப்பதைத் தொடர்ந்து, சென்னை மாநகரமும் காற்று மாசு தாக்கத்திற்கும், பாதிப்பிற்கும் உள்ளாகும் அபாயம் இருக்கிறது என்பதையும், கடல் மட்டம் தொடர்ந்து உயர்வதால் 2050ஆம் வருடத்தில் சென்னை மாநகரம் பாதிக்கப்படக்கூடும் என்றும் வெளிவரும் ஆய்வுச் செய்திகளையும் இந்த பொதுக்குழு மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது.

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

பருவநிலை மாற்றங்களை சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆக்கபூர்வமாக எடுத்திடவும், மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், சென்னையை காற்று மாசு பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

15. நதிநீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றிடுக!

உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பிற்கு எதிராக தன்னிச்சையாக காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு முயற்சிப்பதற்கு இந்தப் பொதுக்குழு எதிர்ப்பு தெரிவிக்கிறது. பரம்பிக்குளம் - ஆழியாறு நீர் பங்கீட்டு ஒப்பந்த மறுஆய்வு, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட கேரள அரசுடனான நதிநீர்ப் பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் கமிட்டிகளை நியமித்து காலம் தாழ்த்தக் கூடாது என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

மாநிலத்திற்குள் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நதிநீர் இணைப்புத் திட்டங்களை அதிமுக அரசு விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்றும், நாடு முழுவதும் நதிநீர் இணைப்புத் திட்டங்களை மத்திய அரசு மேலும் தாமதிக்காமல் தொடங்கி, நிறைவேற்றிட முன்வர வேண்டும் என்றும் இந்த பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

16. ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்கள் கைதுக்குக் கண்டனம்!

ஜம்மு காஷ்மீரில் மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் இன்றி, அம்மாநில மக்களின் கருத்தும் கேட்காமல், அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து - அம்மாநிலச் சட்டமன்றத்தின் ஒப்புதல் இன்றியே, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்திருப்பதற்கும், அங்கு ஜனநாயகத்திற்காகப் போராடிய பாரம்பரியம்மிக்க திரு. பரூக் அப்துல்லா போன்ற அரசியல் தலைவர்களை எல்லாம் கைது செய்து, வீட்டுக் காவலில் அடைத்து வைத்திருப்பதற்கும், அந்த மாநிலத்தை ஜனநாயகக் காற்றே வீசாத பெரிய சிறைக்கூடமாக மாற்றி மக்களை வஞ்சிப்பதற்கும், இந்தப் பொதுக்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து, மனித உரிமைகளுக்கும், காஷ்மீர் மாநில மக்களின் உணர்வுகளுக்கும், மக்களாட்சி மாண்புகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

17. மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமித்திடுக!

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 80 லட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்து சோர்வடைந்திருக்கின்ற நிலையில், மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தவருக்கு அத்தனை வேலைவாய்ப்புகளையும் வாரி வழங்கிவரும் பச்சை துரோகத்திற்கு இந்த பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், இதர மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் 90 சதவீதத்திற்குக் குறையாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றும், மத்திய பா.ஜ.க. அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

18. கீழடி அகழாய்வுப் பணியினை தொய்வின்றி மத்திய மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும்!

சிவகங்கை மாவட்டம், வைகை ஆற்றுப் படுகையின் தென் பகுதியில் அமைந்துள்ள கீழடி கிராமப் பகுதியில், இதுவரையில் நடத்தப்பட்ட தொல்லியியல் அகழ்வாய்வுகளில், ஆயிரக்கணக்கான சான்றுப் பொருள்கள் கிடைத்துள்ளன. இந்தப் பகுதி “தொன்மையான நகர நாகரீகத்தின் அடையாளங்களுடன் உள்ளது” என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தப் பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பி ஆய்வு செய்தபோது, 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தடயங்களும், சான்று பொருட்களும் கிடைத்துள்ளதாக தொல்லியியல் ஆய்வறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனுடைய தொன்மை கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தையதாக இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

வெளிநாடுகளோடு இங்கு வணிக தொடர்பு இருந்தமைக்கான தரவுகளும், சான்றுப் பொருட்களும் கிடைத்துள்ளன. இந்தப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படுமென்று தற்போது தமிழக அரசு அறிவித்த போதிலும், அந்தப் பணிகளைத் தீவிரப்படுத்தி, 6-வது கட்டப் பணிகளும் உடனே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, அருகிலே உள்ள கிராமங்களான கொந்தகை, மாரநாடு, அகரம் ஆகிய பகுதிகளிலும் அகழ்வாய்வு நடத்தப்பட வேண்டுமென்கிற தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்தின் அடிப்படையில், அங்கும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

19. மூழ்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கவனம் செலுத்திடுக!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு வரி சேவைச் சட்டம் ஆகிய “இரட்டைத் தாக்குதலால்” இந்தியப் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் மூழ்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் - மத்திய ரிசர்வ் வங்கியின் நிதியை மிரட்டி வாங்குவதில் மட்டுமே மத்திய அரசு குறியாக இருப்பதற்கு இந்த பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

தவறான பொருளாதாரக் கொள்கைகளால் - தொழில் வளர்ச்சியின் “அச்சாணியாக”( Core Sectors)த் திகழும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம், ஸ்டீல், சிமென்ட், மின்சாரம் உள்ளிட்ட எட்டு துறைகள், 14 வருடத்தில் இல்லாத அளவிற்கு வளர்ச்சி குறைந்தும், 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலை இல்லாத திண்டாட்டம் உருவாகி - கடந்த மூன்று வருடங்களில் இன்று அதிகபட்சமாக வேலை இல்லாத் திண்டாட்டம் 8.5 சதவீதமாக உயர்ந்து விட்டதும், தொடர்ந்து ஐந்தாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி இறங்குமுகத்தில் இருப்பதும், கடந்த ஆறு வருடத்தில் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி குன்றி விட்டதும் அதிர்ச்சியளிக்கிறது. இதனால் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, நாடுமுழுவதும் வேலைஇழப்புகள் தொடருகிறது.

தமிழகத்திலும் பொருளாதார வளர்ச்சியுமின்றி, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியும், தொழில் வளர்ச்சியின்றி - உலக நாடுகளுக்கு ஒட்டுமொத்த அமைச்சரவையே ‘சுற்றுலா’ எண்ணத்தோடு புறப்பட்டுச் சென்றும், புதிய அந்நிய முதலீடுகளின்றி தமிழகம் தவிக்கிறது. ஆகவே நாட்டின் பொருளாதாரத்தையும், மாநிலத்தின் பொருளதாரத்தையும் மீண்டும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் மத்திய மாநில அரசுகள் உடனே கவனம் செலுத்திட வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

20. புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தல்!

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு என்பது, இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கின்ற முயற்சியாகவும், ஆழப் புதைக்கப்பட்டுவிட்ட குலக்கல்வித் திட்டத்தைத் தோண்டியெடுத்த மீண்டும் புத்துயிர் கொடுக்கின்ற வகையிலும், அறிக்கையின் ஷரத்துக்கள் அமைந்திருக்கின்ற காரணத்தால், அந்த அறிக்கை விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டுமென கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், 10 பேர் கொண்ட ஒரு குழுவினை அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கை, கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களிடம் 26.7.2019ல் அளிக்கப்பட்டது. தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அந்த அறிக்கையினை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் கழக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி, எம்.பி., அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வழங்கியிருக்கின்றனர்.

ஊழல்  அதிமுக அரசுக்கும், மக்கள் விரோத பாஜக அரசுக்கும் கண்டனம் : தி.மு.க பொதுக்குழுவின் 20 தீர்மானங்கள்!

மேலும் புதிய தேசிய கல்விக் கொள்கை பிற்போக்குத்தனமானது; அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரானது; இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான கருத்துகளை இவ்வறிக்கை பரிந்துரைக்கவில்லை; மாநில அரசிடம் உள்ள கல்வி தொடர்பான அதிகாரங்களை முழுமையாக ஆக்கிரமித்து மத்திய அரசிற்கு மடை மாற்ற முயற்சிக்கிறது; கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு இதனால் எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே இந்த தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரையிலும் மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கையில் எந்தவிதமான மறுபரிசீலனையும் மாற்றங்களும் செய்ததாகத் தெரியவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம், இந்த வரைவு அறிக்கையை ஏற்றுக் கொள்ளாது என்று பிரகடனம் செய்வதோடு; பொதுப்பட்டியலில் உள்ள கல்விக்கான அதிகாரத்தை மாநிலப் பட்டியலுக்கு உடனடியாக மாற்றிட வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.” ஆகிய 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

banner

Related Stories

Related Stories