


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, புத்தகப்பை, வாட்டர் பாட்டில், நோட்டு புத்தகம் ஆகியவற்றை வழங்கினார்.









மூன்று பேருக்கு நான்கு சக்கர தள்ளுவண்டியும், ஐந்து பேருக்கு மீன் பாடி வண்டியும், இரண்டு பேருக்கு காது கேட்கும் இயந்திரமும் வீடு விபத்தில் பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவித் தொகையும், 73 பேருக்கு மூக்குக் கண்ணாடி மற்றும் புத்தாடைகளையும் வழங்கினார் மு.க.ஸ்டாலின்.

6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் 15 பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, புத்தகப்பை, வாட்டர் பாட்டில், நோட்டு புத்தகம், ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கினார் மு.க.ஸ்டாலின்.


கல்லூரி மாணவ மாணவிகள் 14 பேருக்கு கல்வி உதவித்தொகை, புத்தகப்பை, பேனா, வாட்டர் பாட்டில் ஆகியவற்றை வழங்கினார் மு.க.ஸ்டாலின்.

ஒருவருக்கு திருமண உதவித் தொகையும் 8 பேருக்கு மருத்துவ உதவி தொகையும் 12 பேருக்கு தையல் இயந்திரமும் வழங்கினார் ஸ்டாலின்.

டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குகிறார் ஸ்டாலின்.






