தி.மு.க

உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்தினாலும் எதிர்கொள்ள தி.மு.க தயார் - துரைமுருகன் பேட்டி!

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தி.மு.க தயாராக உள்ளது என்றும் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்தினாலும் எதிர்கொள்ள தி.மு.க தயார் - துரைமுருகன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தி.மு.க பொருளாளர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''மொழி வழி மாநிலம் பிரிக்கப்பட்டதைவிட தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாளைத் தான் தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும்.

டெங்குவால் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது. கிராமங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை டெங்குவால் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை கூட அரசு வெளிப்படையாக சொல்ல தயாராக இல்லை.

புதிய கல்வி கொள்கை நாட்டுக்கு ஆபத்து. இது குறித்து சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் அல்லது பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். ஆனால் தமிழக அரசு எதுவும் செய்யவில்லை. தேசிய கல்வி கொள்கை குறித்து யாருடனும் விவாதிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக இல்லை.

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தி.மு.க தயாராக உள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றியினால் உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க வெற்றி பெறாது'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories