தி.மு.க

ராமதாஸுக்கு உடனுக்குடன் பதிலடி தரும் தி.மு.க எம்.பி : ட்விட்டரில் பா.ம.க தொண்டர்கள் குமுறல்!

பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து வரும் டாக்டர்.செந்தில்குமார் எம்.பி-யை பா.ம.க-வினர் கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றனர்.

ராமதாஸுக்கு உடனுக்குடன் பதிலடி தரும் தி.மு.க எம்.பி : ட்விட்டரில் பா.ம.க தொண்டர்கள் குமுறல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க எம்.பி., டாக்டர்.எஸ்.செந்தில்குமார் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். அவ்வப்போது, சமூக வலைதளவாசிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வையும் மேற்கொண்டு வருகிறார் செந்தில்குமார்.

மேலும், பா.ஜ.க, அ.தி.மு.க, ஆட்சியாளர்களை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு வருவதால் அவருக்கு எதிராக அக்கட்சியினர் அவதூறு பரப்பும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி தொகுதி கைவிட்டுப்போன ஆத்திரத்தில் பா.ம.க-வினரும் டாக்டர்.செந்தில்குமார் மீது வெறுப்பைக் கக்கி வருகின்றனர்.

தொகுதி மக்களின் குறைகளை நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் கேட்டறிந்து அதன் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார் செந்தில்குமார் எம்.பி.,

சமீபத்தில், அயோத்தியாபட்டணம் முதல் பள்ளிப்பட்டு வரையில் உள்ள சாலை பழுதாகியுள்ளாதாக செந்தில்குமாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நேரடியாக களத்திற்கு சென்று, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளையும் வரவழைத்து பணி நடைபெறாதது குறித்து கேள்வி கேட்டு துளைத்தெடுத்தார்.

ட்விட்டரில் தி.மு.க-வை விமர்சித்து வரும் பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸுக்கு தக்க பதிலடியையும் கொடுத்து வருகிறார் டாக்டர்.செந்தில்குமார். இதனால், செந்தில்குமாரை பா.ம.க-வினர் கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நான் ப்ளாக் செய்வதாக குற்றம் சாட்டும் தோழர்கள், மன்னிக்கவும். உங்களுடன் விவாதிக்கும் அளவுக்கு என்னால் நேரத்தைச் செலவழிக்க இயல்லவில்லை. நேரலை சமூக ஊடக விவாதங்களுக்கு தயாராக இருக்கிறேன். ஆனால் தேவையற்ற விவாதத்தை நான் தவிர்க்க விரும்புகிறேன். உங்கள் தலைவர் ராமதாஸும் தான் பலரை ப்ளாக் செய்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories