தி.மு.க

8,000 சம்பளம்..15 மணி நேர வேலை..தேயிலை தோட்ட பணியாளர்களுக்காக குரல் கொடுத்த தி.மு.க எம்.பி

வால்பாறையில் போதிய அளவு ஏ.டி.எம் மையம் இல்லாததால் எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை எடுக்க முடியாமல் பாதிக்கப்படுவதாக மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

8,000 சம்பளம்..15 மணி நேர வேலை..தேயிலை தோட்ட பணியாளர்களுக்காக குரல் கொடுத்த தி.மு.க எம்.பி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வால்பாறையில் போதிய அளவு ஏ.டி.எம்.,கள் இல்லாததால், சுமார் 50 ஆயிரம் எஸ்டேட் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை எடுக்க முடியாமல் பாதிக்கப்படுவதாக மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் கோரிக்கை வைத்தார்.

வால்பாறை பகுதியில் போதிய ஏ.டி.எம். மையங்கள் இல்லாததால் அப்பகுதி விவசாய மக்கள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றார். இதனைக் கருத்தில் கொண்டு இன்று நடைபெற்ற மாநிலங்களவைக் கூட்டத்தின் போது, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, தி.மு.க ஏம் பி டி.கே.எஸ். இளங்கோவன் பூஜ்ஜிய நேரத்தில் தனது கேள்விகளை முன்வைக்கலாம் என அனுமதித்தார்.

இதையடுத்து பேசிய, எம்.பி டி.கே.எஸ். இளங்கோவன், கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் உள்ள எஸ்டேட்டில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஊதியத்தை எஸ்டேட் நிர்வாகம் வங்கிக் கணக்கில் செலுத்திவிடுகின்றனர். ஆனால் அந்த பகுதியில் மொத்தமே 3 ஏ.டி.எம் மையங்களே உள்ளது. அதனால் அவர்களின் உழைத்த பணத்தைக் கூட எளிதில் பெறமுடியாத நிலைமை உருவாகியுள்ளது.

அங்கு உள்ள மக்களுக்குக் கிடைக்கும் ஊதியமே 8 ஆயிரம்தான். அதனை எடுக்கச் சென்றால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும், அதனால் அன்று முழுவதும் பணிக்குச் செல்ல முடியாமல் ஒருநாள் ஊதியத்தை இழக்க நேரிடுகிறது.

எனவே அங்கு அதிகப்படியான ஏ.டி.எம் மையங்களை அமைத்துதர வேண்டும். மேலும், 15 ஆயிரத்திற்குக் குறைவாக வருமானம் பெறுபவர்களுக்கு உதியத் தொகையை நேரடியாக அவர்களிடம் கையில் கொடுக்க மத்திய அரசு உத்தரவு அளிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories