தி.மு.க

தூத்துக்குடி சம்பவம் குறித்து கேள்வியெழுப்பிய திருச்சி சிவா:அவையை ஒத்திவைத்த சபாநாயகர் !

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர் திருச்சி சிவா பேசிகொண்டிருந்த போது நேரம் முடிந்துவிட்டது எனக் கூறி அவையினை ஒத்தி வைத்தார்.

தூத்துக்குடி சம்பவம் குறித்து கேள்வியெழுப்பிய திருச்சி சிவா:அவையை ஒத்திவைத்த சபாநாயகர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மாநிலங்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது தி.மு.க உறுப்பினர் திருச்சி சிவா தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பினார்.

அவையில் இருந்த பிரதமர் நோக்கி இந்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கேள்வி நேரம் முடிந்துவிட்டது எனக் கூறி அவையினை ஒத்தி வைத்தார். தூத்துக்குடியில் உயிரிழந்த பதிமூன்று உயிர்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் அவையை ஒத்திவைத்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

திமுக உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவையை ஒத்திவைப்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முன், தென்சென்னை மக்களவை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் நாட்டில் முஸ்லீம் இளைஞர்கள் அடித்துக் கொலை செய்யப்படுவது குறித்து மக்களவையில் பேசிக்கொண்டிருந்த போது சபாநாயகர் ஓம் பிர்லா உணவு இடைவேளைக்குச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டு அவையைக் கலைத்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories