தி.மு.க

கஜா புயல் நிவாரணம் என்ன ஆனது? : தி.மு.க சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம்!

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் தி.மு.க எம்.எல்.ஏ மதிவாணன்.

கஜா புயல் நிவாரணம் என்ன ஆனது? : தி.மு.க சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று மின்சாரம், மதுவிலக்கு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் என தசிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

தொடர்ந்து, தி.மு.க எம்.எல்.ஏ மதிவாணன் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப்போட்டது கஜா புயல். கஜா புயல் நிவாரணப் பணிகளில் மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எட்டு மாதங்களாகியும் இன்னும் வீடுகள் கட்டித்தரப்படவில்லை. வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ மதிவாணன் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.

மின்சாரத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி பேசும்போது அ.தி.மு.க-வினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories