தி.மு.க

உடல்நலம் தேறி வீட்டுக்குச் சென்றார் துரைமுருகன் : தலைமைக் கழகம் அறிவிப்பு!

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் உடல்நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து தனது இல்லத்துக்கு சென்றார் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 

உடல்நலம் தேறி வீட்டுக்குச் சென்றார் துரைமுருகன் : தலைமைக் கழகம் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.கழகத்தின் பொருளாளர் துரைமுருகனுக்கு, கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவ்வப்போது, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது துரைமுருகனின் உடல்நலம் தேறியுள்ளதால் இன்று காலை 10 மணியளவில் மருத்துவமனையில் இருந்து தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories