தி.மு.க

தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பால் உத்தரவை திரும்பப்பெற்றது தென்னக ரயில்வே!

ரயில்வே அதிகாரிகள் இந்தி/ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்ற உத்தரவிற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சுற்றறிக்கையை திரும்பப்பெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பால் உத்தரவை திரும்பப்பெற்றது தென்னக ரயில்வே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருக்கக்கூடாது என தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது. தென்னக ரயில்வேயின் இந்த உத்தரவிற்கு, தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற தெற்கு ரயில்வே உத்தரவை கண்டித்து மத்திய சென்னை தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, ரங்கநாதன், ரவிச்சந்திரன் என தி.மு.க.வினர் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று மனு அளித்தனர். அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற உத்தரவை தெற்கு ரயில்வே உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தி.மு.க வலியுறுத்தியது.

இதையடுத்து, சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறுதலாக வந்த அறிவிப்பு எனவும், பழைய நடைமுறையே தொடரும் என்றும் தென்னக ரயில்வே பொதுமேலாளர் அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories