தி.மு.க

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு  

திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டார்.  

dmk manifesto
twitter dmk manifesto
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டார்.

பல்துறை நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களை கல்வியாளர்கள், பொதுமக்கள், என அனைவரின் கருத்துகளைக் கேட்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி , டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் பேராசிரியர் அ.இராமசாமி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்

தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழில் செயல்பட இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க சட்ட திருத்தம் கொண்டுவரப்படும்.

வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும்.

பா.ஜ.க அரசின் தவறான முடிவுகளால் சிதைந்துபோன பொருளாதாரத்தை மீட்க, வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

தனி நபர் ஆண்டு வருமானம் 86,000-லிருந்து 1,50,000 ஆக உயர்த்தப்படும்.

பெட்ரோல் டீசல், விலைநிர்ணயத்தில் பழைய முறை கடைப்பிடிக்கப்படும்.

கேஸ் தொகைக்கு வழங்கப்படும் மானியத்தொகை வங்கிகளில் செலுத்தப்படும் முறை மாற்றப்படும்.

கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலை பராமரிக்க 10 வகுப்பு படித்த 1 கோடி பேர் பணி அமர்த்தப்படுவர்.

பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரயில் பயணச் சலுகை வழங்கப்படும்.

மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்படும்.

கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடங்கப்படும்.

கஜா போன்ற கடும் புயல் நிவாரணத்துக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்.

சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் பாலியல் குற்றம் தொடர்பான வீடியோ புகைப்படம் தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

சேதுசமுத்திர திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.

மதங்களை பாதுகாக்க, நல்லுறவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழிலாளர் ஓய்வூதியம் குறைந்தபட்சம் 8ஆயிரமாக நிர்ணயிக்கப்படும்.

நெடுஞ்சாலையில் தனியாரின் சுங்கவரி வசூல் முடிந்த பின்பும், வசூலிக்கப்படும் சுங்க கட்டண வசூல் ரத்து செய்யப்படும்.

கிராமப் பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க 50 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மையில் உயர்த்தபட்ட கேபிள் டிவி கட்டணம் முந்தைய அளவுக்கு குறைக்கப்படும்.

தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுசெல்லப்பட்ட கல்வி, மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் கூலி உயர்த்தப்பட்டு, 100 நாள்கள் என்பது 150 நாள்களாக வேலைநாள்கள் அதிகரிக்கப்படும்.

கிராமப்புறங்களில் பத்தாம் வகுப்பு படித்த பெண்கள், மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து இந்தியாவில் குடியேறியுள்ள தமிழர்கள் அனைவருக்கும் தாமதமின்றி இந்தியக் குடியுரிமை அளிக்க வலியுறுத்தப்படும்.

நீர் வளத்தையும் நிலவளத்தையும் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய திட்டங்களை கைவிட வலியுறுத்தப்படும்.

மத்திய-மாநில அரசுப் பணிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.

தற்போது உயர்த்தப்பட்டுள்ள கேபிள் டி.வி கட்டணம் குறைக்கப்பட்டு, முந்தைய கட்டணமே வசூலிக்கப்படும்.

உடல் உறுப்புகள் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தலைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும்.

பட்டாசு தொழிலைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலவச மின்சாரம் வழங்கப்படும்.

banner

Related Stories

Related Stories