பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் 7 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், 8-வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதனை தொடர்ந்து, நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள 9வது சீசனையும் விஜய்சேதுபதியே தொகுத்தது வழங்குகிறார். "செட் பிரமாண்டமா இருக்கு இந்த வருஷம் ஆட்டமும் ப்ரமாண்டமா இருக்கும்னு நினைக்குறேன்..." என்று கூறியபடியே entry கொடுத்த விஜய் சேதுபதி, அடுத்ததாக my dear house get ready for me என்று கூறிய படி சீசன் 9-ன் வீட்டை பார்வையாளர்களுக்காக சுற்றிக்காட்டினார்.
இந்த முறை, எகிப்திய அரண்மனை போல, பிக்பாஸ் வீடு உருவெடுத்துள்ளது. "அழகா இருக்கு, கலர்க் கலரா இருக்கு நம்பி உள்ள போனா என்ன ஆகும் தெரியலையே..." என்று கூறியபடியே வீட்டிற்குள் சென்ற விஜய் சேதுபதி, இந்த முறை சமையலறை வீட்டின் நடுவே அமைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி gossip பேசுறது, இருட்டு கடை பிரியாணி எல்லாம் மிஸ் ஆகிடும் போலையே என்று பழைய சீசனில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தினார். அத்துடன் living room, bed room, வீட்டின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த jacuzzi, பாம்பின் வடிவில் இருந்த wash basin tap, swimming pool, jail,confession room-ல் போட்டியாளர்கள் சிறகடித்து பறக்கபோகும் தருணங்கள் போன்ற அனைத்தையும் சுற்றிக்காட்டிக்கொண்டு வலம்வந்தார். மேலும் வீட்டிற்குள் 2 bed room இருப்பதை குறிப்பிட்ட விஜய்சேதுபதி, வீட்டின் captain-க்கு என்று மேலும் வசதியாக அமைக்கப்பட்டிருந்த தனி bed room-ஐயும் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து வீட்டிற்குள் இந்த சீசனில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். இதில் முதலாவதாக வீட்டிற்குள் வந்தது, Water Melon Star என்று அறியப்படும் திவாகர். பிசியோ தெரபி மருத்துவரான இவர், தான் பள்ளி பருவங்களில் நிறைய போட்டிகளில் பங்கேற்றதாகவும், மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்று, அதன் மூலம் ஒரு பிசியோ தெரபி மருத்துவமனை அமைத்து, discount மற்றும் இலவச முறையில் மருத்துவ பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தான் விரும்புவதாகவும் பிக்பாஸ் மேடையில் தெரிவித்தார். இவரை பற்றி சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் இருந்துவரும் நிலையில், வீட்டிற்குள் சென்று என்னவெல்லாம் செய்யபோகிறாரோ என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
திவாகரை தொடர்ந்து அடுத்ததாக வீட்டிற்குள் சென்றது, அரோரா சின்க்ளர். மாடலிங் உலகில் வலம்வரும் இவரும் சமூகவலைதளங்களில் பிரபலமானவர். மேலும், பிக்பாஸ் 8வது சீசனில் பங்கேற்ற போட்டியாளர் ரியாவின் நெருங்கிய தோழி ஆவார். மூன்றாவதாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது FJ அதிசயம். beat boxer-ஆன இவர், சுழல் (சீசன் 1) வெப் சீரிஸ், அரண்மனை 4 உள்ளிட்டவற்றிலும் நடித்துள்ளார். மேலும் FJவின் முழு பெயர் என்ன என்று கேட்ட விஜய்சேதுபதியிடம், மக்களே ஒருநாள் தெரிஞ்சிக்கிட்டுமே என்று சொல்லி வீட்டிற்குள் நுழைந்தார்.
அடுத்ததாக, வந்தது VJ பார்வதி. பிரபல தொகுப்பாளராக இவர், தான் Journalism படித்துள்ளதாகவும், I am bold என்றும் கூறினார். இதையடுத்து VJ பார்வதிக்கு, bold பார்வதி என்று பெயர் வைத்து வீட்டிற்குள் வழியனுப்பி வைத்தார் விஜய்சேதுபதி.
VJ பார்வதியை தொடர்ந்து, ஐந்தாவது போட்டியாளராக வீட்டிற்குள் சென்றது, துஷார் ஜெயபிரகாஷ். உருவ அமைப்பில் பார்ப்பதற்கு North East மாநிலத்தை சேர்ந்த நபர் போல இருக்கும் இவர், நான் ஒரு புதுக்கோட்டை பையன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். மேலும், கன்டென்ட் கிரியேட்டரான இவர், சிறு வயதிலிருந்து தனது உருவத்திற்காக சந்தித்த நிராகரிப்புகளையும் நடிப்பின் மீது தான் கொண்டிருக்கும் ஆர்வம் குறித்தும் விவரித்தார்.
"பார்க்க பார்க்கதான் தெரியும் போக போகத்தான் புரியும்", என்று வீட்டை சுற்றிப்பார்க்க சென்ற விஜய்சேதுபதியிடம் பிக்பாஸ் கூறி இருந்தது உண்மைதான் போல என்றும், எண்ணும் அளவிற்கு போட்டியாளர்களின் வரவேற்பு இருந்து வந்த நிலையில், ஆறாவது நபராக வீட்டிற்குள் சென்றது கனி திரு. காரக்குழம்பு கனி என்ற பெயருடன் பிரபலமாக வலம் வரும் இவர், இந்த முறை வீட்டிற்குள் செல்ல தயாராகும் பொழுதே, பார்வையாளர்களால் title winner பட்டம் பெற்ற நபர் ஆவர். கனி வீட்டிற்குள் சென்றதும் வீட்டிற்குள் Tap open or close என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இவர் குக் வித் கோமாளி சீசன் 2-வின் ரியாலிட்டி ஷோவின் Title Winner ஆவார்.
இதனை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல தயாரானது சபரிநாதன். 'வேலைக்காரன்', 'பொன்னி' போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான இவர், சபரிநாதனாக நான் மக்களுக்கு தெரிய வேண்டும் என்று கூறி வீட்டிற்குள் சென்றார். 7 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்த நிலையில் 8வதாக வீட்டிற்குள் 'ரட்சகன்', 'ஜோடி' போன்ற படங்களை இயக்கிய பிரவீன் காந்தி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.
அடுத்ததாக, மாடலிங் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கெமி என்று அழைக்கப்படும் வைஷாலி கெம்கர், பிக்பாஸ் வீட்ற்குள் செல்ல தயாரானார். basket ball player-ஆன இவர், தான் ஒரு national player என்றும் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
இதுவரை 9 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில் 10 ஆவதாக, மாடலிங் துறை, 'காஞ்சனா 3', 'பிகில்' போன்ற படங்களில் நடித்துள்ள ஆதிரை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இவர் 'மகாநதி' தொடரில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, மைசூரில் பிறந்து தஞ்சாவூரில் வசித்து வரும் ரம்யா ஜோ பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துருகிறார். ஆதரவற்றோர் இல்லத்தில் தனது சகோதரிகளுடன் வளர்ந்த இவர், சினிமா துறையில் சாதிக்க நினைத்து ஆடலும், பாடலும் நிகழ்ச்சியில் தனது பங்களிப்பு குறித்தும், தனது வாழ்வில் சந்தித்த பல கசப்பான சம்பவங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
11 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்ற்குள் சென்றுள்ள நிலையில் அடுத்ததாக, பிக்பாஸையே கலாய்த்து பாடிய கானா பாடகர் வினோத் குமார் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். இவரை தொடர்ந்து, மாடலிங் துறையில் பிரபலமான வியானா போட்டியாளராக பங்கேற்றார்.
இதைத்தொடர்ந்து திரைப்பிரபலம் பிரவீன். நடிகர் பாடகர் என பல திறமைகளை கொண்டுள்ள இவர், தமிழில் சின்ன மருமகள், சிந்து பைரவி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். அடுத்ததாக, தூத்துக்குடியில் வசிக்கும் மீனவப்பெண் சுபிக்ஷா, தனது தந்தையுடன் தைரியமாக கடலுக்கு சென்று மீன்பிடித்து, யூடியூப்பிலும் பிரபலமாக வலம் வருபவர்.
சுபிக்ஷாவை தொடர்ந்து அடுத்ததாக வீட்டிற்குள் சென்றது அப்சரா சிஜே. திருநங்கையான இவர், பல modeling ஷோக்களில் பங்கேற்றுள்ளார். இதையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது, நந்தினி. உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இவர், திரைத்துறையில் தனது எதிர்காலத்தை எதிர்பார்த்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இவர்களை தொடர்ந்து 18 வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது விக்கல்ஸ் விக்ரம். ஸ்டாண்ட் அப் காமெடி மற்றும் திரை இசைப் பாடல்களை வைத்து காமெடி செய்து பிரபலமானவர். இவரை தொடர்ந்து 19வது போட்டியாளராக வீட்டிற்குள் சென்றது, மகாநதி தொடர்மூலம் பிரபலமான கமருதீன். இறுதியாக வீட்டிற்குள் சென்ற போட்டியாளர், கலையரசன். அகோரி என்று பலராலும் அறியப்படும் இவர், பல சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 9வது சீசனில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில், "இந்த முறை ஆட்டம் கொஞ்சம் வித்தியாசமாவும், புதுசாவும் இருக்கும்னு நினைக்குறேன். இந்த வீடும் அப்படித்தான் இருக்கு. பாப்போம்..." என்று கூறி விடைபெற்றார் விஜய் சேதுபதி.
இதனை தொடர்ந்து போட்டியாளர்களிடம் பேசிய பிக்பாஸ், "இந்த சீசன் 9-ல பங்கெடுத்துக்க போற housemates நீங்க 20 பேர்தான்" என்று கூறினார். மேலும், போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்பொழுது சிவப்பு மற்றும் நீலம் ஆகிய இரு நிறங்களில் ஒரு நிற பேட்ஜை தேர்வு செய்து இருந்தனர்.
இதில், திவாகர், FJ அதிசயம், VJ பார்வதி, கனி திரு, சபரி, கெமி, ஆதிரை, வியானா, பிரவீன், விக்கல்ஸ் விக்ரம், நந்தினி, அப்சரா, அகோரி கலையரசன் ஆகியோர் சிவப்பு நிற பேட்ஜைதேர்வு செய்திருந்த நிலையில், மற்ற போட்டியாளர்கள் நீல நிறத்தை தேர்வு செய்திருந்தனர்.
இந்த சீசனுடைய முதல் twist-ஐ சொன்ன பிக்பாஸ், பேட்ஜ் நிறங்களுக்கு ஏற்றார் போல் போட்டியாளர்களை இரு அணிகளாக பிரிந்து அமரச்சொன்னார். மேலும் ஒரு பக்கம் எப்பொழுதும் போல புதுசாக மாற்றி அமைக்கப்பட்ட பகுதி, மற்றொரு பக்கம் பிரத்தியேகமாக வடிவமைக்க பட்ட பிக்பாஸ் super deluxe பகுதி. இதில் super deluxe பகுதிக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோவில் ஒருநாள் கூத்து என்ற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இவர்கிட்ட ஒருநாளுக்கான சரக்குதான் இருக்கு, ஒருநாளுக்கு மேல இவர் இந்த ஷோல தாங்க மாட்டாரு, பண்றதுக்கு எதுவுமே இல்ல என்ற நபரை தேர்வு செய்யும்படி டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில், வியானா, திவாகர் ஆகியோரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.