சினிமா

நடிகர் அஜித் உடல் நிலை எப்படி இருக்கிறது? : முழு விவரம் இங்கே!

நடிகர் அஜித் குமாருக்குக் காதுக்கு அருகில் மூளைக்குச் செல்லக்கூடிய நரம்பு பகுதியில் வீக்கம் இருந்ததால் அதற்காகச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் உடல் நிலை எப்படி இருக்கிறது? : முழு விவரம் இங்கே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். கடந்த ஆண்டு வெளியான இவரது துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து சிறிய ஓய்வுக்குப் பிறகு விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். மேலும் நடிகர் திரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கான 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்று திடீரென நடிகர் அஜித் குமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது வழக்கமான மருத்துவச் சிகிச்சை என்று தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அஜித் குமாருக்கு முழு உடல் பரிசோதனை செய்தபோது, காதுக்குக் கீழே உள்பகுதியில் மூளைக்குச் செல்லக் கூடிய இடத்தில் நரம்பு பகுதியில் வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து உடனே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று இரவே அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நரம்பு வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இன்று அல்லது நாளை அஜித் குமார் வீடு திரும்புவார் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories