சினிமா

திரையுலகில் மேலும் ஒரு சோகம்... பிரபல பாடகி பவதாரிணி காலமானார்... பிரபலங்கள் இரங்கல் !

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி (47) புற்றுநோய் காரணமாக காலமானார்.

திரையுலகில் மேலும் ஒரு சோகம்... பிரபல பாடகி பவதாரிணி காலமானார்... பிரபலங்கள் இரங்கல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பவதாரிணி என்ற மகள் உள்ளார். பின்னணி பாடகியான இவர் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக பிரண்ட்ஸ் படத்தில் "தென்றல் வரும்...", எம்.குமரன் படத்தில் "அய்யோ.. அய்யோ...", தென்றல் படத்தில் "ஒளியிலே தெரிவது...", அனேகன் படத்தில் "ஆத்தாடி... ஆத்தாடி..", காதலுக்கு மரியாதை படத்தில் "என்னை தாலாட்ட வருவாளா..", மாநாடு படத்தில் "மெஹரசைலா..." உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

மேலும் 'பாரதி' படத்தில் இடம்பெற்ற "மயில் போல பொண்ணு ஒன்னு..." பாடலை பாடியதற்கு தேசிய விருதையும் பெற்றுள்ளார். இவர் பின்னணி பாடகி மட்டுமல்லாமல் இசையமைப்பில் ஆர்வம் கொண்டதால், ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் அவை வெளியாகாமல் இருந்துள்ளது. இந்த சூழலில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது பவதாரிணி மூன்று திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்.

திரையுலகில் மேலும் ஒரு சோகம்... பிரபல பாடகி பவதாரிணி காலமானார்... பிரபலங்கள் இரங்கல் !

இந்த நிலையில் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டது. இறுதி கட்டத்தில் வெகு தாமதமாக புற்றுநோய் கண்டறியப்பட்டதால், அவரை காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் இலங்கைக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவருக்கு சிகிச்சை பலனளிக்காமல் இலங்கையிலேயே இன்று காலமானார்.

வரும் சனிக்கிழமை மாலை இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இலங்கையில் நடைபெறவுள்ளதால், தற்போது இளையராஜாவும் இலங்கையில்தான் இருக்கிறார். பாடகி பவதாரிணி உயிரிழந்த சம்பவம் திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories