சினிமா

இறுதிகட்டத்தில் BIGGBOSS 7 : திக் திக் நிமிடங்கள்... டைட்டிலை வெல்ல போவது யார் ?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் டைட்டில் வெல்ல போகும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது

இறுதிகட்டத்தில் BIGGBOSS 7 : திக் திக் நிமிடங்கள்... டைட்டிலை வெல்ல போவது யார் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் முடிவுக்கு வந்து விட்டது. அர்ச்சனா, மாயா, விஜய் வர்மா, விஷ்ணு, தினேஷ் மற்றும் மணி ஆகிய 6 போட்டியாளர்கள் இறுதி வாரத்தில் டைட்டிலை எதிர் நோக்கி காத்துக்கொண்டிருந்தனர். இதில் இறுதி வாரத்தின் முதல் நாளில் மார்னிங் ஆக்டிவிட்டியை ஆரம்பித்தார் பிக்பாஸ். ஒருவர் இன்னொருவருக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதில் மணி, தினேஷிற்காக பேசினார். தினேஷ் விஷ்ணுகாகவும், விஷ்ணு மணிக்காகவும் பேசினார். அடுத்ததாக வந்த விஜய், நான் மாயாவோட fan என கூறி மாயாவுக்காக பேசி இருந்தார். மாயாவும், விஜய்க்காக பேசி இருந்தார்.

ஆனால் இறுதியாக வந்த அர்ச்சனா தனக்காக யாருமே பேசவில்லை என்பதை சுட்டிக்காட்டியவுடன், 'நீதாம்மா டைட்டில் வின்னர். உனக்கு பிரச்சாரம் தேவையில்லை' என சக போட்டியாளர்கள் அர்ச்சனாவை ஊக்குவித்தனர். இறுதியில் அர்ச்சனாவும் தினேஷுக்காக பேசி சென்றார். இந்த ஆக்டிவிட்டி முடிந்ததும், அதிக Coins வைத்திருந்த நபரான விஷ்ணுவுக்கு தனது நண்பர்களுடன் வீடியோ கால் பேசுவதற்கான வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. "தலைகுனிய வைக்கற மாதிரி நான் எதையும் பண்ணிடல்லல.. பெட்டி எடுக்காம போனது நல்ல முடிவுதானே.." என தனது நண்பர்களிடம் சந்தேகங்களை தீர்த்துக்கொண்டார் விஷ்ணு.

இறுதிகட்டத்தில் BIGGBOSS 7 : திக் திக் நிமிடங்கள்... டைட்டிலை வெல்ல போவது யார் ?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் என்பதால் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வர தொடங்கினர். இதில், முதலாவதாக வந்தவர் அனன்யா. ஸ்டோர் ரூம் வழியாக காலையிலேயே உள்ளே வந்த அவர் தூங்கிக் கொண்டிருந்த மாயா மற்றும் அர்ச்சனாவுக்கு Surprise கொடுத்தார். இதையடுத்து, முகமூடி அணிந்த இன்னொரு நபர் உள்ளே வர ஜோவிகாவா என்று போட்டியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் உள்ளே வந்தது அக்ஷ்யா. இதையடுத்து வீட்டிற்குள் வந்தது முக்கிய நபரான வினுஷாதான். இவரின் வருகையால் உள்ளே வர போகும் நிக்சன் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

போட்டியாளர்கள் அனைவரிடமும் கலந்துரையாடிய வினுஷா, அர்ச்சனாவிடம் சென்று பேச தொடங்கினார். ‘ஒரு சண்டை வரும் போது என் பெயரை சரியா யூஸ் பண்ற நீங்க முதல்லயே தட்டிக் கேட்டிருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனா உங்க சண்டைக்குத்தான் என்னைப் பயன்படுத்திக்கிட்டீங்க’ என்று நிக்சன் அர்ச்சனா இடையை தன் பெயர் பயன்படுத்தப்பட்டு பேசப்பட்ட வாக்குவாதம் குறித்து கேள்வி எழுப்பினார். அத்துடன் மக்கள் மறந்துடுவாங்க, free ஆ விடுனு சொல்லுறீங்க? மக்கள் மறந்துடுவாங்களா? என வினுஷா கேள்வி எழுப்ப... 'நிக்சன் செஞ்சது டாஸ்க்ல வந்த போது அவன் ரொம்ப பயந்துட்டான். கை, கால்லாம் உதற ஆரம்பிச்சிடுச்சு. அதனால அப்படிச் சொன்னேன். அடுத்ததடவ அவனை வம்புக்கு இழுக்கத்தான் அப்டி பண்ணேன்' என தனது தவறுகளை ஒப்புக்கொண்ட அர்ச்சனா, வினுஷாவிடம் மன்னிப்பும் கேட்டார்.

இறுதிகட்டத்தில் BIGGBOSS 7 : திக் திக் நிமிடங்கள்... டைட்டிலை வெல்ல போவது யார் ?

இதையடுத்து முகமூடி அணிந்து கொண்டு சைக்கிளில் வந்த நபர் ஒருவர் நோட்டீஸ்களை போட்டியாளர்களிடம் விநியோகித்து விட்டு சென்றார். அதில் வீட்டில் நடைபெற்ற விதிமீறல் குறித்த படம் ஒன்று வெளியாக போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அனைவரையும் ஒன்று திரட்டிய பிக்பாஸ் இந்த சீசன் முழுவதும் வீட்டில் நடைபெற்ற விதிமீறல் குறித்த படம் ஒன்றை போட்டுக்காட்டினார். இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் ஆக்ஷன் அதிரடிக் காட்சிகளும் ஒளிபரப்பானது. இந்த படத்தை பார்த்து முடித்த மாயா நானே கேமியோ தான், "விஷ்ணுதான் ஹீரோ. அர்ச்சனாதான் ஹீரோயின்" என கூறி ரகளை செய்தார்.

அதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டிற்குள் விக்ரம் மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் வந்தனர். இவர்கள் வருகையும் போட்டியாளர்களுக்கு surprise ஆகவே இருந்தது. விக்ரம் வீட்டை விட்டு வெளியேறும் பொழுது மாயா - விக்ரம் இடையை சலசலப்புகள் காணப்பட்டு வந்தது. எனினும் வெளியேறிய பின் அனைத்தையும் பார்த்து விட்டு மீண்டும் தற்போது வீட்டிற்குள் வந்த விக்ரம், மாயாவிடம் பல விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். மாயாவும் விக்ரமின் தங்கை தன்னிடம் பேசி இருந்த சில விஷயங்களை மனதை மிகவும் பாதித்ததாக பகிர்ந்துக் கொண்டார். பின்னர் விக்ரம், மாயவிடம் மன்னிப்பு கேட்டார்.

அடுத்த பாடல் ஒலிக்க பூங்கொத்துடன் உள்ளே வந்தார் பிராவோ. வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்ட பிக்பாஸ் வீட்டில் திடீரென மிட் வீக் எவிக்சனை அறிவித்தார் பிக்பாஸ். இதுவும் ஒரு டாஸ்க் போலவே நடைபெற்றது. வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் போட்டியாளர்கள் அனுப்பப்பட்டு, கதவுகள் மூடப்படும். கதவு திறந்தால் உள்ளே வரலாம், திறக்கவிட்டால் எவிக்ட் என புரிந்துக்கொள்ள வேண்டும். இதில் விஜய் வர்மா வீட்டில் இருந்து வெளியேறினார்.

இறுதிகட்டத்தில் BIGGBOSS 7 : திக் திக் நிமிடங்கள்... டைட்டிலை வெல்ல போவது யார் ?

கானா பாலாவின் பாடல் ஒலிக்க அடுத்த நபராக உள்ளே வந்தார் கானா பாலா. இவரை தொடர்ந்து, கோமாளி வேடம் அணிந்து ஒரு நபர் உள்ளே வந்து ஆடல் பாடல் என அனைவரிடமும் வித்தை காட்டினார். யார் என்று தெரியாமல் போட்டியாளர்கள் குழம்பி இருக்க, கோமாளி பல்டி எல்லாம் அடித்து வித்தை கட்ட இறுதியில் கோமாளி வேடத்தில் வந்தது பூர்ணிமா. இதனை தொடர்ந்து கிட்சனில் 'நாலு தக்காளியை எடுத்து இங்க போடுங்க' என ஒரு குரல், யார் என்று பார்த்தல் ஜோவிகா... இவர்களின் அடுத்தடுத்த வருகையால் மாயா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

நீங்க ஒரு நல்ல பிளேயர். ஆனா., என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. நீங்க தனியா விளையாடலை. எப்பப்பாரு மூணு பேரு கூட சேர்ந்து பேசிக்கிட்டே இருக்கீங்க.. என்று தினேஷை எச்சரித்தார் ஜோவிகா. You lost your Game. விஷ்ணுவா இப்ப உங்க டார்கெட்? நாம பண்ணது புல்லி இல்ல. புல்லி கேங்குன்னு என்னனென்ன சொன்னாங்க. அதுக்கு மன்னிப்பு கேட்டாங்களா..? அவங்க கூட சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க என்று மாயாவை கேள்வியால் தாக்கினார் ஜோவிகா. இதனால் சற்றே குழப்பம் அடைந்த மாயா, அர்ச்சனாவை அழைத்து பேசத்தொடங்கினார்.

நான் புல்லின்னு சொன்னீங்க. அதுல இருந்து என்னால இப்பக்கூட வெளில வர முடியல. அப்படியொரு செம அடி எனக்கு. இருந்தாலும் இப்ப உங்களை ஃபிரெண்டாதான் நெனக்கறேன். புல்லின்றது பெரிய குற்றச்சாட்டு. அதப் பத்தி கேக்கணும்னு தோணும். ஆனா ஒரு கட்டத்துல அதை விட்டுட்டேன். ரொம்ப அபத்தமா இருந்தது.. என்னால திருப்பிக் காட்ட முடியலை. உங்களுக்கு இப்ப அன்பு வேணும். உங்களை ஹர்ட் பண்ண முடியல” என கூற இடைமறித்த அர்ச்சனா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்குங்க, நானும் பாதிக்கப்பட்டேன். நீங்களும் பேச டிரை பண்ணல. நான்தான் அதையெல்லாம் உடைச்சுட்டு வந்து இப்ப பழக ஆரம்பிச்சிருக்கேன்” என்றார். கோபமே இல்ல. ஆனா நீங்க பண்ணது உள்ளே இருந்துட்டே இருக்கு. இருந்தாலும் உங்களை மன்னிச்சிட்டேன்” நான் கொடுத்த அன்புல்லாம் உண்மை. ஆனா அந்த விஷயத்தை மட்டும் மறக்க முடியலை. ஓகே விடுங்க. ரெண்டு நாள்தான் இருக்கு, ஃபன் பண்ணலாம்” என்று மாயா.

இறுதிகட்டத்தில் BIGGBOSS 7 : திக் திக் நிமிடங்கள்... டைட்டிலை வெல்ல போவது யார் ?

அடுத்ததாக உள்ளே வந்த போட்டியாளர் ரவீனா. ரவீனாவின் வருகையை அடுத்து திடீரென தினேஷை ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு அழைத்தார் பிக்பாஸ். அவருடைய பயண வீடியோ போடப்பட்டது. தினேஷை தொடர்ந்து மாயா, விஷ்ணு, அர்ச்சனா, மணி என அடுத்தடுத்து போட்டியாளர்களின் பயண வீடியோ ஒளிபரப்பப்பட்டது. போட்டியாளர்களின் வருகையில் அடுத்து வந்தது விஜய்.. என்ன போனதும் வந்துட்ட? என போட்டியாளர்கள் ஷாக் ஆனார்கள். மற்றொரு வழியா உள்ளே வந்தார் நிக்சன். மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ஒரு வருகை. நிக்சன் மற்றும் வினுஷா இடையேயான உரையாடல் தொடங்கியது. "மன்னிச்சுடுங்க. இதுக்கு மேல இதை இழுக்க வேணாம் என நிக்சன் வினுஷாவிடம் மன்னிப்பு கேட்டு சமாளிக்க, ஏன் அப்ப சமாளிச்சு பேசினே ஆமாம் தப்பு பண்ணினேன்னு சொல்லியிருக்கணும் என நிக்சனிடம் கேள்வி எழுப்பினார். அப்ப தப்புன்னு தோணல, இதை இழுத்துக்கிட்டே இருக்க வேணாம். திரும்பத் திரும்ப பதிவாகற மாதிரி இருக்கு என நிக்சன் விளக்கம் தர, இதில் பாதிக்கப்பட்டது நான். இந்த விஷயத்துல வெளிய ஆதரவும் தராங்க. ஆனா இந்தப் பொண்ணைப் பார்த்தாலே இதுதான் ஞாபகத்துக்கு வருதுன்னு சிலர் சொல்லுறாங்க என வினுஷா தனது தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகளை நிக்சனிடம் விளக்கினார். எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க என தனது தவறுக்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் நிக்சன்.

அடுத்த பாடல் ஒலிக்க வீட்டிற்குள் வந்தது விசித்ரா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வர வீடே களைகட்டியது. வார இறுதி நாளான நேற்று வெளியே சென்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் பிக்பாஸ், ஸ்மால் பாஸ் ஆகிய இருவரும் பிரியாவிடை கொடுத்து ஆடல் பாடலுடன் வழியனுப்பி வைத்தனர். இந்நிலையில் அழுகை, சிரிப்பு, சோகம், கோபம் என கலவையான உணர்வுகளுடன் நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் டைட்டில் வின்னர் யார் என்று தெரியும் நேரம் நெருங்கி விட்டது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சி தொடர்பாக வெளியான ப்ரோமோவில், "நீண்ட ஒரு பயணத்தின் இறுதி கட்டம்... வெறுப்பு, விறுப்பு, வெறுப்பு என்று வாராவாரம் மாற்றிக் காட்டிக் கொண்டிருந்தது பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் மட்டுமல்ல பார்வையாளர்களும்கூட... இதில் கற்ற சந்தோசம் அனைவருக்கும்தான்..." என கூறுகிறார் கமல். மேலும், விசித்ரா, ரவீனா, கூல் சரேஷ் ஆகியோர் finale வுக்காக நடனமாடும் காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. இந்த சூழலில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், மணி சந்திரா இரண்டாவது இடத்திற்கும், மாயா மூன்றாவது இடத்திற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

banner

Related Stories

Related Stories