சினிமா

என்னதான் பிரச்சனை? தினேஷ், விசித்ராவிடம் கேள்வி எழுப்பிய கமல்.. வீட்டில் இருந்து வெளியேறினாரா விசித்ரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் வெளியேற போகும் நபர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

என்னதான் பிரச்சனை? தினேஷ், விசித்ராவிடம் கேள்வி எழுப்பிய கமல்.. வீட்டில் இருந்து வெளியேறினாரா விசித்ரா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. போனவார இறுதியில் இந்த நிகழ்ச்சியில் இருந்து ரவீனா மற்றும் நிக்சன் ஆகியோர் வெளியேறி இருந்தனர். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, விசித்ரா, விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் விஜய் ஆகியோர் இருந்து வந்தனர். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி விட்ட நிலையில் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்வோரை தேர்ந்தெடுக்க சொல்லி இருந்தார் பிக்பாஸ். இதில் ஆண்கள் அணியாக விஜய், தினேஷ், விஷ்ணு மற்றும் மணி ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல முன் வந்தனர். Interesting எந்த வீட்ல entertainment இருக்குதுனு பாத்துரலாம் என உற்சாகமூட்டிய பிக்பாஸ் அன்றாட வேலைகளை பார்க்க சொல்லி விடை பெற்றார். இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் சீசன் 7-ல் முதல் finalist ஆக தேர்வான விஷ்ணுவுக்கு chocolate அனுப்பிவைக்கப்பட்டது.

இதையடுத்து பிக்பாஸ் வீட்டின் கடைசி நாமினேஷன் குறித்து அறிவித்தார் பிக்பாஸ். நிகழ்ச்சியின் இறுதியில் கூட நாமினேஷன் பிராசஸா என போட்டியாளர்கள் அனைவருமே அதிர்ச்சி அடைய! "யாரை வேண்டுமென்றாலும் நாமினேட் செய்யலாம்”, விஷ்ணுவை தவிர என கூறி இருந்தார். மேலும் இந்த நாமினேஷன் பிராஸஸிற்காக ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் குத்துச்சண்டை போட்டி நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் போட்டியாளர்களிடம், கைகளில் gloves அணிந்துக்கொண்டு போட்டிக்கு தயாராகும்படியும் பிக்பாஸ் கூறினார். இந்தப் போட்டியின் நடுவர் விஷ்ணு என கூறியதுடன் நான்கு குழுவையும் அமைத்து வெற்றி பெற்றவர்களோடு அர்ச்சனா மோதுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

எனினும் எவ்வாறு விளையாடுவது என புரியாமல் போட்டியாளர்கள் குழப்பிக்கொண்டிருந்த தருணத்தில் , ஒரு பேனர் மெல்ல கீழே இறங்கியது அதில் அனைவரும் நாக்அவுட் என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இதன் மூலம் நிகழ்ச்சியின் கடைசி நாமினேஷனில் விஷ்ணு தவிர்த்து அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் இடம் பெற்றிருப்பது பிக்பாஸால் அறிவிக்கப்பட்டது.

என்னதான் பிரச்சனை? தினேஷ், விசித்ராவிடம் கேள்வி எழுப்பிய கமல்.. வீட்டில் இருந்து வெளியேறினாரா விசித்ரா?

விளையாட்டு அடுத்தக்கட்டத்துக்கு நகரத்தொடங்கியது. ஒரு பக்கம் பணப்பெட்டி எடுப்பது குறித்து பூர்ணிமாவும், மாயாவும் பேசிக்கொண்டிருக்க, மறுபுறம் தேவைப்பட்டால் எடுப்பேனென மணி, தினேசிடம் பேசிக்கொண்டிருந்தார். இதனிடையே பிக்பாஸ் வீடு New Year கொண்டாட்டத்தில் களைகட்டியது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்ததும் பிக்பாஸ் வீட்டில் அனைவருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த பணப்பெட்டி டாஸ்கை அறிவித்தார் பிக்பாஸ். மேலும் டெட்லைன் முடிவதற்குள் பெட்டியை எடுக்கவேண்டும் என்பதும் அறிவிப்பு. ஆரம்பத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் வைக்கப்பட்டு பின்னர் அது மூன்று லட்சமாக உயர்ந்தது. எனினும் இது ஏழாவது சீசன் ஏழு டிஜிட் வரும் வரை யாரும் எடுக்கமாட்டார்கள் என தினேஷ் கிண்டல் செய்துக்கொண்டிருந்தார்.

இதையடுத்து "பயணம்" என்ற டாஸ்கை ஆரம்பித்தார் பிக்பாஸ். இதில் முதலாவதாக பேச வந்த அர்ச்சனா, விஜயை தேர்வு செய்தார். "விஜய் வந்த புதுசுல Rugged Boy-ன்னு நெனச்சன், ஆனா Re-Entry ல வாரம் முழுக்க அமைதியா இருந்துட்டு வார இறுதியில் மட்டும்தான் பேசுறார்" என கூற, இதற்கு பூர்ணிமா தவிர்த்து அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். அடுத்ததாக வந்த பூர்ணிமா, விஷ்ணுவை தேர்ந்தெடுத்தார். "முதல் வாரத்தில் தொடங்கி, விஷ்ணு தன்னிடம் சின்ன விஷயத்துக்கு கூட சண்டை போட்டார், பொறுமையா கேட்கற பக்குவம் இல்லை, அர்ச்சனாகிட்ட சண்டை வந்தப்ப கூட தனியா கூட்டிட்டு போய் பேசினேன். ஆனா, அவர் கேப்டன் ஆன அப்புறம் எனக்கு பயம் ரொம்ப அதிகம் ஆகிருச்சு. ஒரு விஷயம் வேணும்னா மத்தவங்களை யூஸ் பண்ணிக்க தயங்க மாட்டார்" என தனது மனத்தாங்கல் முழுவதையும் கொட்டி தீர்த்தர். இதன் முடிவில் மணி, தினேஷ் தவிர்த்து அனைவரும் பூர்ணிமாவின் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர்.

என்னதான் பிரச்சனை? தினேஷ், விசித்ராவிடம் கேள்வி எழுப்பிய கமல்.. வீட்டில் இருந்து வெளியேறினாரா விசித்ரா?

இதனை தொடர்ந்து வந்த மாயா, அர்ச்சனாவை தேர்ந்தெடுத்தார். "இவங்க வந்த அப்போவே அவ்வளவுதான்னு தோணுச்சு, இவங்க அழுததெல்லாம் Fake-ஆ தெரிஞ்சது. மனப்பிரச்னைகள் எல்லாருக்குமே இருக்குது, இவங்க பண்ணது எல்லாமே கேமராக்காக பண்ணின மாதிரி இருந்தது" என பல விஷயங்களை மாயா சொல்லி முடிக்க இதை அனைவருமே ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து வந்த விசித்ரா, தினேஷை தேர்ந்தெடுத்து, "தினேஷ் கூட இருக்கறவங்க எனக்கு எதிரா இருக்குற மாதிரி தோணுது. யார் கூடயும் அட்டாச் இல்ல. பெண்கள் கிட்ட எப்படி பேசணும்னு தெரியல. முதல் கேப்டன்சி பெஸ்ட்டா இருந்தது" என கூறி முடிக்க இதற்கு அனைவருமே எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் வந்த விஷ்ணு, பூர்ணிமாவை தேர்ந்தெடுத்தார். "இவங்க ஒண்ணு முடிவு செஞ்சிட்டா அதன்படியே மத்தவங்க நடக்கணும்னு நெனப்பாங்க. கேப்டன்சி நல்லாயிருந்தது ஆனா மாயாவுக்கு Favor, நான் அவங்களை யூஸ் பண்ணது கிடையாது, மாயாவும் பூர்ணிமாவும் ஒண்ணுதான்" என பேசி முடிக்க இதனை மூன்று பேர் ஏற்றனர், மூன்று பேர் மறுத்தனர். இந்த டாஸ்கின் இறுதியில் மாயா வெற்றிபெற்றார்.

என்னதான் பிரச்சனை? தினேஷ், விசித்ராவிடம் கேள்வி எழுப்பிய கமல்.. வீட்டில் இருந்து வெளியேறினாரா விசித்ரா?

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்ட பண பேட்டியின் தொகை ஐந்து லட்சமாக அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக பிக்பாஸிடம் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது. "பணப்பெட்டியில் தொகை மேலும் ஏறலாம், இறங்கவும் செய்யலாம் யோசித்து முடிவு செய்யுங்கள், no pressure என கூறியதுடன் டெட்லைன் முடிஞ்சுன்னா பெட்டியை நான் தூக்கிடுவேன்" என்று எச்சரிக்கையும் செய்து விட்டு சென்றார். இதையடுத்து ஐந்து லட்சமாக இருந்த தொகை மூன்றரை லட்சமாக குறைந்தது.

பார்வையாளர்களின் கருத்துக் கணிப்பின்படி மாயா invisible mode-ல் இருக்கவேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. மாயா என்ன செய்தாலும் யாரும் ரியாக்ட் செய்யக்கூடாது என்பது விதி. இதனால் மாயா வீட்டில் இருப்பவர்களை தனது ரகளையால் ஒரு வழி செய்துவிட்டார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன் யார் யார் ப்ரோமோஷன் பணிகளை செய்து விட்டு வந்திருப்பர் என்பதை மற்றவர்கள் கூறவேண்டும் என ஒரு டாஸ்க். இதில் முதலில் வந்த அர்ச்சனா, விஜயை சுட்டிக்காட்ட, "அப்படிப் பண்ணியிருந்தா நான் வெளில போயே இருக்க மாட்டேனே" என விஜய் கூறினார். இதையடுத்து வந்த போட்டியாளர்களில் பலர் அர்ச்சனாவையே சுட்டிக்காட்டினர். "விம், டோமக்ஸ் டாஸ்க்ல கூட நீங்க இருக்கற டீமிற்குத்தான் பாயிண்ட்ஸ்" என்று பூர்ணிமா கூறி இருந்தார்.

இந்த டாஸ்க்கிற்கு பின்னர் திடீரென Main door திறந்தது. முகமூடி அணிந்து கொண்டு உள்ளே வந்த நபர், பணப்பெட்டியின் தொகை மதிப்பை 12 லட்சமாக உயர்த்திவிட்டு சென்றார். இதனால் போட்டியாளர்கள் உற்சாகம் அடைந்தனர். பெட்டியை எடுக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்தது. பணப்பெட்டியில் உச்ச மதிப்பாக 15 லட்சம் தொகை வைக்கப்பட்டது. இதனை கண்ட பின்னர் ஒருவேளை "பணப்பெட்டியை நீ எடுத்தா, நான் வின்னர் ஆக டிரை பண்ணுவேன்" என பூர்ணிமாவிடம் மாயா பேசி கொண்டிருந்தார்.

என்னதான் பிரச்சனை? தினேஷ், விசித்ராவிடம் கேள்வி எழுப்பிய கமல்.. வீட்டில் இருந்து வெளியேறினாரா விசித்ரா?

"பணப்பெட்டியை எடுக்க கொஞ்ச நேரமே மிதமுள்ளது. தொகை கூடவும் செய்யலாம், குறையவும் செய்யலாம். No Pressure" என்று பிக்பாஸிடம் இருந்து அறிவிப்பு ஒன்று வந்தது. பண பேட்டியின் பரிசு தொகையும் 16 லட்சமாக உயர்ந்தது. இதனை கண்டதும் பூர்ணிமா, தான் பேட்டி எடுத்து செல்வதாக முடிவெடுத்தார். அப்போது மணி எடுத்து செல்லலாம் என விஷ்ணுவும், தினேஷும் மணியிடம் எடுத்துரைக்க முயன்றனர். ஆனால் மணி அதற்கு மறுப்பு தெரிவிக்க இறுதியில் பூர்ணிமா பெட்டியை எடுத்துக்கொள்ள, 'காசு மேல காசு வந்து' பாடல் ஒழிக்கப்பட்டு மெயின் டோர் வழியாக பூர்ணமா வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதையடுத்து வார இறுதி நாளான நேற்று போட்டியாளர்களை சந்தித்த கமல், பணப்பெட்டியை எடுக்க இரண்டு பேர் மட்டுமே போட்டிபோட்டார்கள், மற்றவர்கள் ஏன் எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்க தொடங்கிய தினேஷ், வந்திருக்கும் லட்சியம்தான் முக்கியம், பணம் முக்கியமில்லை என பதிலளித்தார். அடுத்ததாக பேசிய மணி பெட்டியை கண்டிப்பாக எடுக்கவேண்டாமென தனது அம்மா சொல்லியதாக கூறினார். "டிக்கெட் டு பினாலே போயிட்டேன், முழுசா முடிக்கணும்" என்ற தனது கருத்தை கூறினார் விஷ்ணு. "தங்கச்சி சொல்லிட்டா,மீற முடியலை" என்றார் அர்ச்சனா. அதேபோல, "பெட்டி எடுக்கறதைப் பத்தி யோசிக்கக்கூட இல்லை, மக்கள்தான் என்னை அனுப்பிச்சாங்க அவங்களாதான் என்னை வெளில அனுப்பணும்" என தனது செண்டிமெண்ட் வார்த்தைகளை கூறினார் விஜய். "மக்கள் சப்போர்ட்டில் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். பணம் எப்ப வேணா சம்பாதிக்கலாம். அனுபவம்தான் முக்கியம்" என்றார் விசித்ரா. அடுத்து எழுந்த மாயா "நான்தான் எடுக்கலாம்னு இருந்தேன், பைனலிஸ்ட் ஆயிடுவேன்னு தெரியும். வின்னர் ஆவேன்னான்னு சந்தேகம்" என கூறினார்.

இதன் தொடர்ச்சியாக பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய பூர்ணிமாவை அழைத்த கமல் பெட்டி எடுத்த காரணத்தை கேட்டார், "டைட்டில் ஒருத்தருக்குத்தான் கிடைக்கும், அதை விட இங்க கத்துக்கிட்ட விஷயங்கள் முக்கியம். இத்தனை நாள் இருந்ததுக்கு நானே எனக்குகொடுத்துக்கிட்ட Gift இது" என்று கூறினார் பூர்ணிமா. மேலும் பயண வீடியோ பார்த்த பூர்ணிமா உணர்ச்சிவசப்பட்டதை காண முடிந்தது. இதையடுத்து அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்து கலந்துரையாடிய பூர்ணிமா, அனைவரிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.

என்னதான் பிரச்சனை? தினேஷ், விசித்ராவிடம் கேள்வி எழுப்பிய கமல்.. வீட்டில் இருந்து வெளியேறினாரா விசித்ரா?

“மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தவர் யார்? செய்யாதவர் யார்? என்ற தனது அடுத்த கேள்வியை போட்டியாளர்களிடம் கேட்டார் கமல், இந்த டாஸ்கில் மாயாவுக்கு ஆதரவும், விஷ்ணுவுக்கு எதிர்ப்பும் அதிகமாகவே காணப்பட்டது. இன்னமும் ஒரு வாரம்தான் இருக்கு. மக்கள் கவனத்தை பெறுவதற்கு சரியாக பயன்படுத்துங்கள் என போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறி விடைபெற்றார் கமல்.

இதையடுத்து இன்றைய நிகழ்ச்சி தொடர்பாக வெளியான ப்ரோமோவில் ”இவர் சொன்னா கேட்டுக்குவாரு, இவர்னா உடனே மோதிடுவாரு” என்ற நபர் யாராக இருக்கும் என கமல் கேள்வி எழுப்ப, அதற்கு விசித்ரா மற்றும் தினேஷ் ஆகியோர் என போட்டியாளர்கள் பதிலளித்தனர். ”என்னதான் பிரச்சனை?” என கமல் கேட்க,

”சீசனே முடிய போகுது இதுக்கு ஒரு முடிவு சொல்லுங்க” என விசித்ரா கமலிடம் கேட்கிறார்.”போய் கை குலுக்கிடுங்க தினேஷ் ஏன் கடைசி வாரத்துல” என கமல் சொல்ல தினேஷ் மற்றும் விசித்ரா இடையே சமரசம் ஏற்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், வீட்டில் இருந்து வெளியேற போகும் நபர் யாராக இருக்கும் என கமல் போட்டியாளர்களிடம் கேட்க மணி, தினேஷ் மற்றும் விசித்ரா ஆகியோரின் பெயர்களை போட்டியாளர்கள் கூறுகின்றனர். பிக்பாஸ் வீட்டில் இந்த வார இறுதியில் விசித்ராவே வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- சீ. ரம்யா

banner

Related Stories

Related Stories