சினிமா

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் Double Eviction? இறுதி கட்டத்தை எட்டிய பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோவில் Double Eviction என கமல் பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளதால் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் இரண்டு போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் Double Eviction? இறுதி கட்டத்தை எட்டிய பிக்பாஸ் வீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் தொடங்கி 90 நாட்களை கடந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற eviction Process-ல் விக்ரம் வீட்டை வீட்டு வெளியேறி இருந்தார். இதையடுத்து, தினேஷ், மாயா, நிக்சன், ரவீனா, மணி, விஜய் வர்மா ஆகியோர் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் இடம்பெற்றனர். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதால் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற தொடங்கியது. "வெல்கம் டூ டிக்கெட் டூ பினாலே" என்று போட்டியாளர்களை வரவேற்றிருந்த பிக்பாஸ் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு முதல் முறையாக 10 போட்டியாளர்கள் இதில் பங்கேற்பதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் நிக்சன், பூர்ணிமா, தினேஷ் ஆகியோர் ஏற்கனவே தலா ஒரு பாயிண்ட் பெற்றிருந்தனர். அத்துடன், அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா நடுவராக களமிறக்கப்பட்டனர். இதில் வெல்வதின் மூலம் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்புவதுடன், முதல் ஃபைனலிஸ்ட் போட்டியாளாராகவும் வெற்றி பெரும் நபர் தேர்வு செய்யப்படுவார்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் Double Eviction? இறுதி கட்டத்தை எட்டிய பிக்பாஸ் வீடு!

டிக்கெட் டூ பினாலேவின் முதல் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்க முயல் தரப்பட்டு, அதற்கு கற்களால் போட்டியாளர்கள் கோட்டை கட்ட வேண்டும். இதில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்கள், ஓடிச் சென்று கோட்டையைக் கலைத்து முயலை கைப்பற்ற வேண்டும். பாஸர் டூ பாஸர் முறையில் அறிவிக்கப்பட்ட இந்த டாஸ்கில் அதிக முயல்களை கைபற்றுவோர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்த போட்டியின் இறுதியில் அதிக முயல் வைத்திருந்த விஸ்ணுவுக்கு 3 பாயிண்ட்களும், மணிக்கு 2 பாயிண்ட்களும், மாயாவுக்கு 1 பாயிண்டும் கிடைத்தது.

இதையடுத்து, டிக்கெட் டூ பினாலே இரண்டாவது டாஸ்க் அறிவிக்கப்பட்டது. ஆக்டிவிட்டி ஏரியாவில் கோடுகள் வரையப்பட்டு, போட்டியாளர்களுக்கு முயல்களும் வைக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியாளர்கள் கார்டுகளை தேர்ந்தெடுத்து அதில் உள்ளதுபோல செயல்பட வேண்டும். பச்சை நிற கார்ட் வந்தால் அதிலுள்ளதை போட்டியாளர்கள் செய்ய வேண்டும், சிவப்பு நிற கார்ட் வந்தால் மற்றவர்களை செய்ய வைக்க வேண்டும். இந்த டாஸ்கில் நிக்சனுக்கு முதல் முயல் கிடைத்ததால் 3 பாயிண்ட்டுகளும், அடுத்ததாக வந்த மாயாவுக்கு இரண்டாவது முயல் கிடைத்ததால் இரண்டு பாயிண்ட்டுகளும், பூர்ணிமாவுக்கு மூன்றாவது முயல் கிடைத்ததால் ஒரு பாயிண்ட்டும் கிடைத்தது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் Double Eviction? இறுதி கட்டத்தை எட்டிய பிக்பாஸ் வீடு!

இதன் தொடர்ச்சியாக, டிக்கெட் டூ பினாலே மூன்றாவது டாஸ்க் பிக்பாஸால் அறிவிக்கப்பட்டது. போட்டியாளர்களுக்கு Kill or Stay என்ற இரண்டு கார்டுகள் வழங்கப்பட்டு, அவரவர் தரப்பில் இந்த டாஸ்கில் தாங்கள் இருக்க வேண்டிய முக்கியத்துவத்தை பேச வேண்டும். இதில், ரவீனா - பூர்ணிமா, மணி - விஷ்ணு, மாயா - நிக்சன், விசித்ரா - தினேஷ், மாயா - விசித்ரா, விஷ்ணு - தினேஷ், மணி - ரவீனா, நிக்சனும் - விஷ்ணு, ரவீனா - விசித்ரா ஆகியோர் மாறி மாறி பேசிக்கொள்ள, இந்த டாஸ்கின் இறுதியில் விசித்ராவிற்கு 3 பாயிண்ட்டுகளும், ரவீனாவிற்கு 2 பாயிண்ட்களும், விஷ்ணுவிற்கு ஒரு பாயிண்ட்டும் கிடைத்தது.

டிக்கெட் டூ பினாலேவின் நான்காவது டாஸ்க் அறிவிக்கப்பட்டது. இதில், சதுர வடிவில் lightக்கள் வரிசைப்படுத்தப்பட்டு ஒரு patternஆக ஒளிரவிடப்பட்டது. இதனை போட்டியாளர்கள் உற்றுநோக்கி, light அணைக்கப்பட்டதும் சரியான சுவிட்சை அணைக்க வேண்டும். இந்த டாஸ்கில் விஷ்ணு முதலிடத்தையும் , பூர்ணிமா இரண்டாவது இடத்தையும், தினேஷ் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினர். அத்துடன் 7 பாயிண்ட்களை கைப்பற்றி விஷ்ணு ஸ்கோர் போர்டில் முதலிடத்தையும் பிடித்துக்கொண்டார்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் Double Eviction? இறுதி கட்டத்தை எட்டிய பிக்பாஸ் வீடு!

இதன் தொடர்ச்சியாக டிக்கெட் டூ பினாலேவின் அடுத்த டாஸ்க் அறிவிக்கப்பட்டது. இதில் 8 நபர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து டிக்கெட் டூ பினாலே என்ற போர்டை ஒரு ஸ்டாண்டில் வைத்து ஒரு கை மட்டுமே பயன்படுத்தி பிடித்துக்கொள்ள வேண்டும். கையை எடுக்கக்கூடாது. பலகை சரிந்தாலும் நிமிர்த்தாமல் அதே பொசிஷனில்தான் பிடித்திருக்க வேண்டும். இதில் விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் ரவீனா ஆகியோர் ஒரு அணியாகவும், மாயா, பூர்ணிமா, நிக்சன் மற்றும் விசித்ரா ஆகியோர் ஒரு அணியாகவும் செயல்பட்டனர் . 5 மணி நேரம் 45 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த டாஸ்கின் இறுதியில் ரவீனாவுக்கு ஐந்து பாயிண்ட், மணிக்கு நான்கு பாயிண்ட், விஷ்ணுவிற்கு மூன்று பாயிண்ட், தினேஷிற்கு இரண்டு பாயிண்ட் மற்றும் மாயாவுக்கு ஒரு பாயிண்ட் கிடைத்தது. இதனால் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் அதிக பாயிண்ட்டுகள் பெற்று விஷ்ணு முதல் Finalistஆக தேர்வு செய்யப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் Double Eviction? இறுதி கட்டத்தை எட்டிய பிக்பாஸ் வீடு!

இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் வார இறுதி நாளான நேற்று தொகுப்பாளர் கமல், மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு போட்டியாளர்களை சந்தித்தார். டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் நடுவராக செயல்பட்ட அர்ச்சனா மற்றும் விஜய் வர்மாவை பாராட்டிய கமல், வீட்டில் இருக்கும் குரூப்பிஸம் குறித்து போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து முயல் டாஸ்க் நடந்து குறித்து பேசிய கமல், "தான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்ன்னு" வீட்டில் இருப்பது யார் என்று போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

இதில் அனைவருமே பூர்ணிமாவை சுட்டிக்காட்டியதால், 'ரொம்ப நீளமா விளக்கம் கொடுக்காதனு உங்க அம்மாவே சொன்னாங்க... சுருங்கச் சொல்லுதல் ஒரு கலை... இதுலாம் சிலருக்கு ஐம்பது வயசுலதான் புரியும்... உங்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு... Constructive Criticism-ஆ இல்லைன்னா அதைப் பத்தி யோசிக்கவே யோசிக்காதீங்க" என்று பூர்ணிமாவுக்கு அறிவுரை கூறினார்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் Double Eviction? இறுதி கட்டத்தை எட்டிய பிக்பாஸ் வீடு!

இறுதியாக, நாமினேட் செய்யப்பட்ட நபர்கள் அனைவரையும் ஒன்றாக அமரச் சொன்ன கமல், 'எனக்கு ரொம்ப பசிக்குது. நாளைக்குப் பார்க்கலாம்' என்று கூறி விடை பெற்றார்.

மேலும் பிக்பாஸின் இன்றைய நிகழ்ச்சி தொடர்பாக வெளியான ப்ரோமோவில் கேமரா முன்பு அடுத்தவரின் குடும்ப விவகாரத்தை பேசிக்கொண்டிருந்தாக விசித்திராவை சுட்டி காட்டி கண்டித்துள்ளார் கமல். மேலும் டபுள் eviction... ஒரு பெட்டி... என ப்ரோமோவில் கமல் சுட்டி காட்டியுள்ளதால் இரண்டு போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறப்போவது உறுதியாகி உள்ளது. இதில் ரவீனா மற்றும் நிக்சன் போட்டியில் இருந்து வெளியேறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- சீ. ரம்யா

banner

Related Stories

Related Stories