சினிமா

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ஓபன் நாமினேஷன் : மாயா, நிக்சனை Target செய்யும் போட்டியாளர்கள்?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நடத்தப்பட்டு மாயா, நிக்சன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ஓபன் நாமினேஷன் : மாயா, நிக்சனை Target செய்யும் போட்டியாளர்கள்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கி 85 நாட்களை எட்டி விட்டது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் wild card போட்டியாளர்களாக மேலும் 5 போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்திருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி விட்டதால், Freeze Task நடத்தப்பட்டு வாரம் முழுவதும் போட்டியாளர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் வந்து சென்றனர்.

இதனால் ஒரு வாரம் முழுவதும் பெரிய அளவில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் பிக்பாஸ் வீடே பாச மழையில் நனைந்ததை காண முடிந்தது. Freeze Taskல் முதலாவதாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது பூர்ணிமாவின் அம்மா உஷா நந்தினி. வந்த உடனேயே விசித்திராவிடம் தனது மகள் தவறு செய்திருந்தால் மன்னித்து விடும்படி கேட்டுக்கொண்டார். அத்துடன், அர்ச்சனாவை பாசமாக கட்டி அணைத்துக்கொண்டதை பார்த்த பூர்ணிமாவுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது.

மேலும் விஷ்ணு பக்கம் சென்ற பூர்ணிமாவின் அம்மா, பூர்ணிமாவும் அவ அண்ணனும் இப்படித்தான் சண்டை போட்டுட்டே இருப்பாங்க. விஷ்ணுவைப் பார்க்கறப்ப அப்படித்தான் இருக்குது என சொல்ல, அப்போ விஷ்ணுவும், பூர்ணிமாவும் அண்ணன் தங்கச்சியா என தனது பங்கிற்கும் பேசி சென்றார் மாயா. இதனிடையே போட்டியாளர்களை பிக்பாஸ் மீண்டும் Freeze செய்ய பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது அர்ச்சனாவின் பெற்றோர் ஜெயந்தி - ரவிச்சந்திரன். நான் உங்களோட பெரிய fan என மாயாவிடம் கூறிய ரவிச்சந்திரன், எல்லாரும் Decentஆ தான் game விளையாடுறீங்க எனவும் கூறினார்.

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ஓபன் நாமினேஷன் : மாயா, நிக்சனை Target செய்யும் போட்டியாளர்கள்?

மேலும் பொம்மை டாஸ்கில் விசித்திராவிடம் அர்ச்சனா பேசிய விதத்திற்கும் விசித்திராவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். எனினும் ஒருத்தருக்கு மனிதாபிமானம் நிச்சயம் வேண்டும் என விக்ரம் பக்கம் திரும்பிய ரவிச்சந்திரன், அர்ச்சனா அழுதுட்டு இருக்கும் போது நீங்களும் அக்ஷயாவும் சேர்ந்து பின்னாடி வேடிக்கை காட்டிட்டு இருந்தீங்க ரொம்ப கஷ்டமா இருந்தது என தனது வருத்தத்தை தெரிவித்தார். அடுத்ததாக நிக்சன் பக்கம் திரும்பிய அர்ச்சனாவின் தந்தை, நிக்சன் நல்ல பையன்தான் ஆனா கோவத்தை மட்டும் குறைச்சிக்கணும் என கூறியதுடன், நானா இருந்தா குழந்தைலயே கள்ளிப்பால் ஊத்தி கொன்னுருப்பேன்னு அர்ச்சனாவை சொன்னது ரொம்ப வருத்தமா இருந்தது என தெரிவித்தார். தொடர்ந்து அர்ச்சனாவிடம் தனியாக பேசிய தந்தை, எதுவா இருந்தாலும் நேரா பேசிடனும், ஒருவர் செய்யும் உதவியை மறந்துட்ட கூடாது, எதிர்த்து பேசக்கூடாது என அறிவுரை கூறி இருந்தார்.

மீண்டும் போட்டியாளர்களை பிக்பாஸ் Freeze செய்தார். இப்போது வீட்டிற்குள் வந்தது, விக்ரமின் பெற்றோர் சரோஜினி - கதிரேசன். அனைவரிடமும் அன்பு பாராட்டிய விக்ரம் பெற்றோர், பூர்ணிமா, மாயா எல்லாம் பின்னாடி பேசுறாங்க என கூறி விக்ரமை எச்சரித்தனர். மேலும் யாராவது கூறை சொன்ன உடனே கேட்டுடனும் என விக்ரமிடம் கூறிய அவரது அம்மா, கூல் சுரேஷ் இருப்பாரு நெனச்சேன், யாரையும் Set propertyன்னு சொல்ல கூடாது என கூறினார்.

அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது விஜயின் அம்மா கிருஷ்ணவேணி. விஜயின் அம்மா அனைவரிடம் நன்றாகவே பேசி பழகினார். இதையடுத்து பெற்றோருகளுக்கு டாஸ்க் ஒன்றை அறிவித்தார் பிக்பாஸ். பெற்றோர் அனைவரும் சேர்ந்து பேசி தங்களுக்கு பிடித்த போட்டியாளர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில், தாய்க்கு தாயாக இருந்து வீட்டில் அனைவரையும் வழிநடத்தும் விசித்திராவை தேர்ந்தெடுத்தனர். விசித்ராவுக்கு ஒரு ட்ராஃபி வழங்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த விசித்ரா, 'டைட்டில் ஜெயிச்சா கூட இவ்வளவு மகிழ்ச்சி கிடைத்திருக்காது' என கூறினார்.

மீண்டும் பிக்பாஸ் freeze task ஐ ஆரம்பித்தார். இதில் வீட்டிற்குள் வந்தது தினேஷ் பெற்றோர் அம்சவேணி - கோபால்சாமி, உள்ளே வந்து அமர்ந்ததும் தினேஷின் கோபத்தை கண்டித்தனர். அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது மணியின் அம்மா சரளா. மணியின் அம்மாவை கண்டதும் ரவீனாவுக்கு சந்தோசத்துடன் கலந்த பதட்டம் நிலவியது. கேப்டனா ஆன அப்புறம் தெளிவாயிட்டான் என மணியை கூறிய அவரது தாயிடம் நான் நாமினேஷன் ல இருக்க ஓட்டு போடுவீர்களா என ரவீனா கேட்க, விக்ரம் ரவீனா இருவருக்குமே சமாக ஓட்டு போடுவோம் என மணியின் அம்மா பதிலளித்தார்.

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ஓபன் நாமினேஷன் : மாயா, நிக்சனை Target செய்யும் போட்டியாளர்கள்?

அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது அர்ச்சனாவின் தங்கை அக்ஷயா. இவரும் அனைவரிடம் நன்றாகவே கலந்துரையாடினார். அத்துடன் நீ துணிப்பெட்டியை மட்டும்தான் கையில் எடுக்கணும். வேற பெட்டியை எடுக்கவே கூடாது என அர்ச்சனாவுக்கு உபதேசம் செய்திருந்தார். பிக்பாஸ் வீட்டில் நிக்சனுக்கு ஒரு அதிர்ச்சி கலந்த ஆச்சிரியம் காத்திருந்தது. வீட்டிற்குள் அடுத்ததாக வந்தது நிக்சனின் தந்தை வேலாயுதம். இருவரும் 6 மாதத்துக்கு மேல் பேசவே இல்லை என்பது தெரிந்தது. வீட்டுல என்ன சொல்லியும் திருந்தாதவன் பிக்பாஸ் வந்து திருந்திட்டான். இங்க ஒவ்வொருத்தரும் அவனை வெச்சு செஞ்சிட்டீங்க. அடிச்சும் திருந்தாத பிள்ளையை பிக் பாஸ் கேப்டன்ஸி கொடுத்து கூடவே மணியும் வெச்சு ஆப்பு வச்சி திருத்திட்டார் என மனமகிழ்ந்தார். அத்துடன் அர்ச்சனாவிடமும் நன்றி சொன்ன வேலாயுதம் அவன் திருந்துறதுக்கு நீ வாய்ப்பு கொடுத்த என கூறினார்.

நிக்சன் தந்தையை தொடர்ந்து அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது விஷ்ணுவின் சகோதரிகள் நிவேதா மற்றும் சுகாசினி. அத்தனை வாரம் கடந்தும் வீட்டுக்குப் போகணும்னு நீ மட்டும்தான் சொல்லாம இருந்தே.. கேப்டன்சி வாரத்துல நீயும் சொல்லிட்ட என விஷ்ணுவின் தங்கைகள் சலித்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து மாயாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது மாயாவின் அம்மா கீதா. வந்ததும் விக்ரமை பார்த்து நான் உங்க பெரிய fan என கூறியதுடன், விசித்திராவிடமும் உங்கள் program-ம் பாத்துருக்கன், என்னோட அஞ்சாவது பொண்ணு பூர்ணிமா என்னவெல்லாம் மகிழ்ச்சியுடன் கூறினார். மாயாவின் அம்மாவை தொடர்ந்து அடுத்ததாக வீட்ற்குள் வந்திருந்தது மாயாவின் சகோதரி ஸ்வாகதா. இவர்களின் வரவால் பிக்பாஸ் வீடே களைகட்டியது.

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ஓபன் நாமினேஷன் : மாயா, நிக்சனை Target செய்யும் போட்டியாளர்கள்?

போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகையின் வரிசையில் அடுத்ததாக வந்தது ரவீனாவின் நண்பரின் அம்மா மற்றும் அவரது சகோதரன். தனது அம்மா வருவார் என பெரிதும் எதிர்பார்த்து இருந்த ரவீனாவுக்கு இது ஏமாற்றமாகவே இருந்தது. அத்துடன் வந்த இருவருமே அம்மாவிற்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அதன் வரலை என ரவீனாவை சமாதானம் செய்தாலும், ஃபைனல்ஸ் வரைக்கும் வருவேன்னு அம்மா கிட்ட சொல்லிட்டு வந்த? இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்க என தொடங்கி, மணியுடன் இரவில் தனியாக நீண்ட நேரம் பேசியது, டாஸ்கில் மொத்த பணத்தையும் மணிக்கு கொடுத்தது, முக்கியமாக தனது மோதிரத்தை மணியிடம் கொடுத்திருந்தது போன்ற பல விஷயங்களை கூறி ரவீனாவை வருத்தெடுத்தனர்.

அத்துடன் 'கோட் ரெட்' என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் கோபமடைந்த பிக்பாஸ், வீட்டில் உங்கள் நேரம் நிறைவடைந்தது என கூற, அதிர்ச்சி அடைந்த ரவீனா குடும்பத்தினர் பிக்பாசிடம் மன்னிப்பு கேட்டனர். வீட்டிற்குள் போட்டியாளர்கள் ஊக்குவிக்கவே குடும்பத்தினர் அனுப்பப்படுகின்றனர். வெளியுலக விஷயங்களைப் பேசினாலோ அல்லது code words பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என அறிவுரை கூறி அவர்களை இருக்க அனுமதித்தார் பிக்பாஸ்.

இதனிடையே பிக்பாஸ் வீட்டிற்குள் விக்ரம் தங்கை சூர்யா, மணியின் அண்ணன், அண்ணன் மகள் ஆகியோர் வந்து சென்றனர். இதையடுத்து விக்ரமின் தங்கை மீது கோவமாக இருந்த மாயா விக்ரமோட தங்கச்சி ரொம்ப பண்ணிட்டாங்க. இந்த வாரம் அவன் போயிட்டா என்னவாகும்? என பூர்ணிமாவிடம் தனது மன ஆதங்கத்தை கொட்டிக்கொண்டிருந்தார். Freeze Taskன் தொடர்ச்சியாக அடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் விஜயின் அண்ணன் கோகுல், நிக்சனின் நண்பர் சஞ்சய் ஆகியோர் வந்திருந்தனர். யார் யாரோ வந்து சென்றாலும் தனது குடும்பத்தினர் வரவில்லை என்று விசித்ராவுக்கு ஏக்கமாக இருந்தது. அப்போது திடீரென போட்டியாளர்களை Freeze செய்த பிக்பாஸ், விசித்ரா தவிர்த்து அனைவரையும் ரிலீஸ் செய்ய வீட்டிற்குள் விசித்ரா கணவர் ஷாஜி வந்திருந்தார்.

எனினும் தனது மகன்கள் வரவில்லை எனபது விசித்ராவின் குறையாகவே இருந்ததால் விசித்ராவின் லட்டு, குட்டு, ரோஹன் ஆகிய மூன்று மகன்களை ஸ்டோர் ரூம் வழியே வர வைத்து அடுத்தடுத்த இன்ப அதிர்ச்சிகளை கொடுத்தார் பிக்பாஸ். நாமினேஷன் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஏதாச்சும் பிரச்சினை பண்ணி நாமினேஷன்ல வந்துடுறீங்க என விசித்ராவுக்கு சுட்டி காட்டினர் அவரது மகன்கள்.

வாரம் முழுவதும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தங்களது நேரத்தை செலவழித்த போட்டியாளர்களை வார இறுதியில் சந்தித்த கமல், குடும்பத்தினர் சொன்ன எந்த அறிவுரை ஏற்புடையதாக இருந்தது என போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். எங்க அம்மா டான்ஸ் ஆடி நான் பார்த்ததில்லை. பிக்பாஸ் வீட்டில் அவங்க ஆடியது மகிழ்ச்சியா இருந்தது என தினேஷ் கூற, தெலுங்கு பேசற அம்மாவிற்கு நான்தான் தமிழ் மொழியைப் பழக்கினேன், முதன் முதலா அவங்க கூட டான்ஸ் ஆடியது மகிழ்ச்சி என மணியும் கூறினார். மேலும் வந்தவங்க சொன்ன விஷயங்களை ஏத்துக்குற என ரவீனா வீட்டார் கூறியதை சுட்டிகாட்டிய மணி அண்ணன் மகள் வந்தது ஆறுதலாக இருந்தது எனவும் கூறினார்.

தங்கச்சிகளுக்கு இதுவரைக்கும் நான்தான் அட்வைஸ் பண்ணியிருக்கேன். ஆனா அவங்க எனக்கு அட்வைஸ் பண்ணாங்க என்று விஷ்ணு கமலிடம் சொல்ல, எங்க அம்மா அட்வைஸ் பண்ணதில்லை. ஏதாவது சந்தேகம் வந்தா கேளுன்னு மட்டும்தான் சொல்வாங்க என்று கூறினார் விஜய். அடுத்ததாக கமலிடம் பேசிய மாயா தனது அம்மா இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம் என கூறினார். அடுத்ததாக பேசிய ரவீனா, கேம் தனியா ஆடுன்னு சொன்னாங்க என கூறினார். எல்லோர் வீட்ல இருந்தும் வந்தது ஜாலியா இருந்தது. அப்பா வந்தார். சஞ்சய் வந்தான், ஆறு மாசம் நானும் அப்பாவும் பேசாமலே இருந்தோம் என நிக்சன் கூறியவுடன் அதான் உங்க நம்பரையே பிளாக் பண்ணிட்டாரே என நிக்சனை கமல் கிண்டல் செய்தார்.

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ஓபன் நாமினேஷன் : மாயா, நிக்சனை Target செய்யும் போட்டியாளர்கள்?

இறுதியாக ரவீனாவை ஸ்டோர் ரூம் போய் பார்க்கும்படி கூறிவிட்டு கமல் விடை பெற்றதால் குழப்பத்துடன் ஸ்டோர் ரூம் சென்ற ரவீனாவுக்கு அங்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி எனவவோ அவரது அம்மாதான் . உடன் சென்ற மணியோ திக்குமுக்காடி போய் கூட்டத்தை விட்டு வெளியேறினார். ரவீனாவின் அம்மா மாஸ்டர் என்று மணியை அழைத்ததுடன் மிகவும் கனிவாகவே ரவீனாவிடமும் பேசி சென்றார்.

இதையடுத்து வார இறுதி நாளால நேற்று போட்டியாளர்களை மீண்டும் சந்தித்த கமல், ரவீனாவின் அம்மா வந்திருந்த அனுபவத்தை விசாரித்தார். அடுத்ததாக உங்க கோல் என்னன்னு சொல்லுங்க என்று போட்டியாளர்களிடம் கமல் கேள்வி எழுப்ப, முதலில் எழுந்த தினேஷ் ஒரு கேரக்டருக்காக ரொம்பவும் மெனக்கெடுவேன். நீங்க கூட அதைப் பாராட்டினீங்க என கூறினார். அடுத்து எழுந்த விக்ரம் ஆக்டிங்தான், உங்களைத் தாண்டி போகணும் என பணிவுடன் கூற அவரை ஊக்குவித்தார் கமல். அடுத்ததாக தமிழ் சினிமாவில் தமிழ்ப் பெண்கள் சாதிச்சிருக்காங்க. அந்த வரிசையில் நானும் வரணும் என அர்ச்சனா கூற, சின்னத்திரையிலேயே 12 வருஷம் போய்டுச்சு, வெள்ளித்திரைல வரணும் என கூறினார் விஷ்ணு.

தொடர்ந்து அடுத்ததாக எழுந்த ஒரு தரமான பாக்ஸிங் படம் எடுக்க வேண்டும் என்பது தனது கனவு என கூற, வீடியோல்லாம் நிறைய பண்ணியிருக்கேன், ஒரு குறிப்பிட்ட வட்டத்தை விட்டு வெளிய வரணும் என கூறினார் பூர்ணிமா. நூறு படங்கள் மேல பண்ணிட்டேன். ஒரே மாதிரியான கேரக்டர்தான் வருது என கூறிய விசித்ராவுக்கு ஊக்கம் தரும் விதமாக பேசினார் கமல். நிறைய கதாபாத்திரங்கள் செய்யணும் என ரவீனா கூற, ஒரு ஸ்கிரிப்ட் எழுதி லோகேஷ் கனகராஜ் கிட்ட கொடுத்துட்டு வந்திருக்கேன். இன்னொரு கதை எழுதி, இவங்க எல்லாரையும் நடிக்க வைக்கணும் என்றார் மாயா. அடுத்ததாக பேசிய நிக்சன் இதுவரைக்கும் எதுவும் fix ஆகல நல்ல தமிழ் வரிகள் கொண்ட பாடல்கள் எழுதணும், ராப் பாடல் பாடணும், நடிக்கணும்னு ஆசை இருக்கு என கூறினார்.

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ஓபன் நாமினேஷன் : மாயா, நிக்சனை Target செய்யும் போட்டியாளர்கள்?

இதையடுத்து நாமினேஷனில் இருக்கும் நபர்களில் யார் இங்கு தொடர வேண்டும் என போட்டியாளர்களிடம் கமல் கேள்வி எழுப்ப, பலரும் விக்ரமிற்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்க வேண்டும் எஎன கூறி இருந்தனர். ஆனால் இறுதியில் வெளியேறியது என்னவோ விக்ரம் தான்.

இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றுள்ளது. இதில் மாயா, நிக்சன், தினேஷ், மணி மற்றும் ரவீனா ஆகியோர் இடம்பெற்றுள்ளதை ப்ரோமோவில் காண முடிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் இறுதி நாட்களை நோக்கி நகர்வதால் இந்த வாரம் வெளியேற போவது யார், Mid Week Eviction அல்லது Double Eviction இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

- சீ. ரம்யா.

banner

Related Stories

Related Stories