சினிமா

‘தங்கமே..’ - அர்ச்சனாவை கட்டியணைத்த பூர்ணிமாவின் அம்மா... Freeze Task-ல் உறைந்து போன போட்டியாளர்கள் !

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் freeze Task நடைபெறவுள்ள நிலையில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

‘தங்கமே..’ - அர்ச்சனாவை கட்டியணைத்த பூர்ணிமாவின் அம்மா... Freeze Task-ல் உறைந்து போன போட்டியாளர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கி 79 நாட்களை எட்டிவிட்டது. கடத்த வாரம் பிக்பாஸ் வீட்டில் Mid-Week eviction நடத்தப்பட்டு போட்டியாளர் அனன்யா வெளியேறினார். இதனை தொடர்ந்து வார இறுதி நாளில் வந்த தொகுப்பாளர்கள் கமல் கூல் சுரேஷின் eviction-ஐ அறிவித்திருந்தார். இதனால் பிக்பாஸ் வீட்டில் தினேஷ், அர்ச்சனா, விசித்ரா, பூர்ணிமா, மாயா, ரவீனா, மணி, விக்ரம், விஷ்ணு, விஜய் வர்மா, நிக்சன் ஆகிய போட்டியாளர்கள் தங்களது விளையாட்டை தொடர்ந்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய நிகழ்ச்சியில் morning activity நடைபெற்றது. இதில், ‘யாரை டைட்டில் வின்னராக கற்பனை செய்து கூட பார்க்க முடியாது’ என போட்டியாளர்கள் கூற வேண்டும். இதில் ரவீனா, விசித்ரா ஆகியோரின் பெயர் அதிகமாக கூறப்பட்டது. பிக்பாஸ் போட்டி இறுதி கட்டத்தை எட்டத்தொடங்கி விட்டதால் இந்த வாரம் No Captain என அறிவித்தார் பிக்பாஸ்.

‘தங்கமே..’ - அர்ச்சனாவை கட்டியணைத்த பூர்ணிமாவின் அம்மா... Freeze Task-ல் உறைந்து போன போட்டியாளர்கள் !

மேலும், ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டிய நபர்களை அனைவரும் கலந்து முடிவு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதில், நிக்சன், மாயா, தினேஷ், விஜய், பூர்ணிமா மற்றும் அர்ச்சனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அத்துடன் இந்த வாரம் அனைவரும் இரு வீட்டிற்குள்ளும் வளம் வரலாம் ஆனால் அவரவர் இடத்தில்தான் தூங்க வேண்டும் எனவும் பிக்பாஸால் கூறப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. இதில், ரவீனா, விக்ரம், மற்றும் விசித்ரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதையடுத்து பிக்பாஸ் வீட்டின் இன்றைய நிகழ்ச்சியில் freeze Task நடைபெறுகிறது. அத்துடன், போட்டியாளர்களின் பெற்றோர் வீட்டிற்குள் வந்துள்ளதை காண முடிகிறது. இதனால் போட்டியாளர்கள் அனைவருமே குஷி ஆக பிக்பாஸ் வீடு அன்பால் நிறைந்துள்ளது.

‘தங்கமே..’ - அர்ச்சனாவை கட்டியணைத்த பூர்ணிமாவின் அம்மா... Freeze Task-ல் உறைந்து போன போட்டியாளர்கள் !

இதில், பூர்ணிமா, விஜய் வர்மா, அர்ச்சனா மற்றும் சரவண விக்ரம் ஆகியோரின் பெற்றோர்கள் முதலாவதாக வீட்டிற்குள் வந்துள்ளதை காண முடிகிறது. பூர்ணிமாவின் அம்மா விசித்திராவிடம் மன்னிப்பு கேட்பதும், அர்ச்சனாவை அரவணைத்துக்கொள்வதும் பூர்ணிமாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திகிறது. அத்துடன், மணியின் அம்மா ரவீனாவை சுட்டிக்காட்டி உங்கள் இருவருக்குள் என்ன நடக்கிறது? என கேட்பதையும் ப்ரோமோவில் காண முடிகிறது.

பெற்றோர் வீட்டிற்குள் சென்றுள்ளதால் போட்டியாளர்கள் தங்களின் உண்மையான நிலையை அறிந்துகொள்வார்கள் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பாக்கப்டுகிறது.

banner

Related Stories

Related Stories