சினிமா

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி... படத்தின் பெயர் என்ன தெரியுமா ? - முதல் லுக் வெளியீடு !

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், நித்யா மேனன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் First look போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி... படத்தின் பெயர் என்ன தெரியுமா ? - முதல் லுக் வெளியீடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முக்கிய பெண் இயக்குநர்கர்களில் ஒருவராக இருப்பவர்தான் கிருத்திகா உதயநிதி. இவர் கடந்த 2013-ல் வெளியான 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார் கிருத்திகா உதயநிதி.

தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'காளி' படத்தை இயக்கினார். கடந்த 2018-ல் வெளியான இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் Zee 5 ஓடிடி தளத்தில் வெளியான 'பேப்பர் ராக்கெட்' சீரிஸை இயக்கினார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி... படத்தின் பெயர் என்ன தெரியுமா ? - முதல் லுக் வெளியீடு !

காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த சீரிஸின் முதல் சீசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர், அண்மையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு ஆல்பம் பாடலான 'யார் இந்த பேய்கள்?' வீடியோ பாடலை இயக்கினார். தொடர்ந்து குறிப்பிட்ட சில படங்களிலேயே இயக்கியுள்ள கிருத்திகா தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி... படத்தின் பெயர் என்ன தெரியுமா ? - முதல் லுக் வெளியீடு !

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு 'காதலிக்க நேரமில்லை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி, நித்யா மேனன், வினய், யோகிபாபு, லால், ஜான் கொக்கன், லஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இந்த படமானது கிருத்திகா உதயநிதியின் 3-வது படமாகும். இதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாக்கும் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி, தக் லைஃப், சைரன், தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

banner

Related Stories

Related Stories