சினிமா

கிருத்திகா உதயநிதியின் விழிப்புணர்வு ஆல்பம் பாடல் வெளியீடு.. “யார் இந்த பேய்கள்” கூறும் கருத்து என்ன ?

இளையராஜா இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை விழிப்புணர்வு குறித்த “யார் இந்த பேய்கள்” ஆல்பம் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

கிருத்திகா உதயநிதியின் விழிப்புணர்வு ஆல்பம் பாடல் வெளியீடு.. “யார் இந்த பேய்கள்” கூறும் கருத்து என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திரைத்துறையில் உள்ள மிகப்பெரும் ஆளுமைகள் இணைந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, “யார் இந்த பேய்கள்” எனும் ஒரு மியூசிக் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் குழந்தைகள் மீதான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்காக அரசு தீவிரமாக விழிப்புணர்வும், சட்டங்களும் இயக்கி வருகிறது.

கிருத்திகா உதயநிதியின் விழிப்புணர்வு ஆல்பம் பாடல் வெளியீடு.. “யார் இந்த பேய்கள்” கூறும் கருத்து என்ன ?

இருப்பினும் குற்றங்கள் பெரிதாக குறையவில்லை. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகாமாக தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமே பாலியல் வன்கொடுமை நடைபெறுவதாக ஒரு கணக்கெடுப்பு உள்ளது. இதனாலே பள்ளியில் 'GOOD TOUCH, BAD TOUCH' சொல்லிக்கொடுக்கப்படுகிறது.

கிருத்திகா உதயநிதியின் விழிப்புணர்வு ஆல்பம் பாடல் வெளியீடு.. “யார் இந்த பேய்கள்” கூறும் கருத்து என்ன ?

மேலும் குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்த நிகழ்வை பெற்றோரிடம் தெரிவிக்கும்போது அதனை சில பெற்றோர்கள் காதுக்கொடுத்து கேட்பது கூட இல்லை. இதனாலே குழந்தைகள் மீதான வன்முறைகள் நடக்கிறது. இதற்காக பலரும் விழிப்புணர்வு படங்கள், குறும்படங்கள் என வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இதுகுறித்து மேலும் ஒரு ஆல்பம் வீடியோ வெளியாகியுள்ளது.

கிருத்திகா உதயநிதியின் விழிப்புணர்வு ஆல்பம் பாடல் வெளியீடு.. “யார் இந்த பேய்கள்” கூறும் கருத்து என்ன ?

“யார் இந்த பேய்கள்” என்ற பெயர்கொண்ட அந்த ஆல்பம் வீடியோவுக்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். பா. விஜயின் பாடல் வரிகளில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோ பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்பாடலை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார்; லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார், சக்தி வெங்கராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

கிருத்திகா உதயநிதியின் விழிப்புணர்வு ஆல்பம் பாடல் வெளியீடு.. “யார் இந்த பேய்கள்” கூறும் கருத்து என்ன ?

“யார் இந்த பேய்கள்” பாடல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இடையே பயனுள்ள தகவல் தொடர்பு தேவை என்பதை வலியுறுத்துகிறது. சமூகத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான ஒரு குழந்தையிடம் பெற்றோர் மனம் விட்டு பேசவும், ஆதரிக்கவும் தவறினால், அது தரும் மனச்சோர்வு குழந்தையை கடுமையாக துன்புறுத்தும்.

வன்முறைக்கு ஆளான குழந்தைகளின் கஷ்டங்களும் வேதனைகளும் பொழுதுபோக்குத் துறையில் உள்ள பிரபலங்களை பாதித்தன் விளைவாகவே இந்த விழிப்புணர்வு மியூசிக் வீடியோ வெளிவந்துள்ளது. நம் நாட்டில் பாலியல் பேசுவது ஒரு தடைசெய்யப்பட்ட விஷயமாக இருப்பதால், குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட மக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டே இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

கிருத்திகா உதயநிதியின் விழிப்புணர்வு ஆல்பம் பாடல் வெளியீடு.. “யார் இந்த பேய்கள்” கூறும் கருத்து என்ன ?

இக்குழந்தைகளின் துயரங்கள் தீர்க்கப்படாவிட்டால், அவர்கள் மீண்டும் மீண்டும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவார்கள், இதனால் அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள்.

கிருத்திகா உதயநிதியின் விழிப்புணர்வு ஆல்பம் பாடல் வெளியீடு.. “யார் இந்த பேய்கள்” கூறும் கருத்து என்ன ?

சோனி மியூசிக் வெளியிட்ட இந்தப் பாடலின் நோக்கம் விழிப்புணர்வை பரப்புவது மட்டுமல்லாமல், மக்களை பயிற்றுவிப்பதும் ஆகும். ஒரு குழந்தையின் அப்பாவித்தனம் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் பாலியல் குற்றவாளிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே இதன் மையக் கருத்து.

மேலும் அந்த வீடியோவில் குழந்தைகள் Child Helpline - 1098; Helpline for Student - 14417 என்ற எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதோடு அந்த வீடியோ முடியும்போது "உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் 1098-ஐ அழைக்கவும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories