சினிமா

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ‘நாட்டு நாட்டு’ பாடகர் ராகுல்? - வெளியான தகவலுக்கு அவர் அளித்த விளக்கம் !

RRR படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடலை பாடிய பிரபல பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச், தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ‘நாட்டு நாட்டு’ பாடகர் ராகுல்? - வெளியான தகவலுக்கு அவர் அளித்த விளக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2022-ம் ஆண்டு ராஜமெளலி இயக்கத்தில் இந்திய அளவில் வெளியாகி உலக அளவில் பெயர் பெற்ற படம்தான் RRR. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் உலக அளவு பிரபலமானது. காரணம் அதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல். இந்த பாடலுக்கு கடந்த ஆண்டு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.

இந்த பாடலை பாடி உலகளவில் பிரபலமானவர் தான் ராகுல் சிப்லிகஞ்ச் (Rahul Sipligunj). ஆரம்பத்தில் Youtube-ல் ஆல்பம் பாடல்களை பாடி பிரபலமான இவருக்கு, நாளடைவில் சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கியது. யுவன் இசையில் முதன் முறையாக திரையில் ஒலித்த இவரது குரல், அதன்பிறகு தொடர்ந்து ஒலிக்க தொடங்கியது. ராஜமெளலி இயக்கத்தில் எம்.எம்.கீரவாணி இசையில் 2012-ல் வெளியான 'ஈகா' (நான் ஈ) திரைப்படத்தின் தெலுங்கு படலானா 'ஈகா ஈகா ஈகா..' பாடலை பாடியதன் மூலம் மேலும் பிரபலமானார்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ‘நாட்டு நாட்டு’ பாடகர் ராகுல்? - வெளியான தகவலுக்கு அவர் அளித்த விளக்கம் !

அதன்பிறகும் பாடல்களை பாடி பிரபலமான இவர், தெலுங்கு பிக் பாஸ் 3-ல் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகவும் ஆனார். தொடர்ந்து தெலுங்கில் பல ஹிட் பாடல்களை கொடுத்த இவர், தமிழில் வெளியான தெலுங்கு படமான 'RRR' படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு.." பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த பாடல் தான் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் இவர் திரைத்துறையை தவிர்த்து அரசியலிலும் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கிருக்கும் கட்சிகள் தங்களை ஆயத்த படுத்தி வருகின்றனர். முக்கியமாக தெலங்கானா ஆளும் கட்சியான 'பாரத் ராஷ்டிர சமிதி' (BRS), 'தெலங்கானா சாசன சபா', காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களை தயார் செய்து வருகிறது.

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ‘நாட்டு நாட்டு’ பாடகர் ராகுல்? - வெளியான தகவலுக்கு அவர் அளித்த விளக்கம் !

இந்த நிலையில், பாடகர் ராகுல் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கோஷமஹால் (Goshamahal) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் செய்திகளில் வெளியானது. ஆனால் தான் அரசியலில் ஈடுபடவில்லை என்று இந்த தகவலுக்கு பாடகர் ராகுல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், "நிறைய குற்றச்சாட்டுகள்.. அனைவர்க்கும் வணக்கம்! நான் எந்த அரசியலிலும் ஈடுபடவில்லை, கோஷமஹால் தொகுதியில் நான் எம்.எல்.ஏ.வாக போட்டியிடுகிறேன் என்று பல வதந்திகள் வந்துள்ளன. இவை அனைத்தும் கடந்த சில நாட்களாக பரவி வரும் பொய்யான செய்திகள்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ‘நாட்டு நாட்டு’ பாடகர் ராகுல்? - வெளியான தகவலுக்கு அவர் அளித்த விளக்கம் !

அது உண்மையல்ல; நான் ஒரு கலைஞன் என்பதாலும், எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும் என்பதாலும், என் வாழ்நாள் முழுவதும் நான் மகிழ்விப்பேன் என்பதாலும், எல்லாக் கட்சித் தலைவர்களையும் நான் மதிக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் செய்தி ஏன் எல்லா செய்தி சேனல்களிலும், யூடியூப் சேனல்களிலும், இணையதளங்களிலும் பரவி வருகிறது என்று தெரியவில்லை.

நான் எனது இசை கேரியரில் மட்டுமே இருக்கிறேன், இந்தத் துறையில் எனக்கு நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. எந்த கட்சியிலிருந்தும் யாரும் என்னை அணுகவில்லை, நானும் செய்யவில்லை. எனவே தயவு செய்து இதுபோன்ற வதந்திகளை நிறுத்துங்கள் நண்பர்களே. தொடர்ந்து என்னை ஆதரிக்கவும்" என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories