அரசியல்

தெலங்கானா தேர்தல் : சீட் கொடுக்க மறுப்பு.. தொண்டர்கள் முன் கீழே விழுந்து அழுத முன்னாள் முதல்வர் !

தேர்தலில் வேட்பாளராக ஆளுங்கட்சி தனக்கு சீட் கொடுக்கவில்லை என்பதால், ஆதாரவாளர்கள் முன் தெலங்கானா முன்னாள் முதல்வர் தட்டிகொண்ட ராஜய்யா கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா தேர்தல் : சீட் கொடுக்க மறுப்பு.. தொண்டர்கள் முன் கீழே விழுந்து அழுத முன்னாள் முதல்வர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கிருக்கும் கட்சிகள் தங்களை ஆயத்த படுத்தி வருகின்றனர். முக்கியமாக தெலங்கானா ஆளும் கட்சியான 'பாரத் ராஷ்டிர சமிதி' (BRS), 'தெலங்கானா சாசன சபா', காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதற்காக தயாராகி வருகின்றனர்.

அந்த வகையில் தெலங்கானாவில் அமைந்துள்ள 119 சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளாரை அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் விரைவில் அறிவிக்க இருந்தார். அதன்படி 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். இவர் அறிவித்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 7 பேர் புதிதாக போட்டியிருக்கின்றனர்.

தெலங்கானா தேர்தல் : சீட் கொடுக்க மறுப்பு.. தொண்டர்கள் முன் கீழே விழுந்து அழுத முன்னாள் முதல்வர் !

இதனால் 7 பழைய வேட்பாளர்கள் தங்களுக்கு போட்டியிட சீட் கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள நிலையில், அதில் முன்னாள் முதலமைச்சரும், தற்போதய எம்.எல்.ஏ-வுமான தட்டிகொண்ட ராஜய்யா (Thatikonda Rajaiah) தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் கதறி அழுதுள்ளது. இதனால் தற்போது அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது/

தெலங்கானாவில் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர்தான் தட்டிகொண்ட ராஜய்யா. ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்த இவர், 2009-ம் ஆண்டு தேர்தலில் கான்பூர் நிலையம் (Ghanpur Station) சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வானார். அப்போதே காங்கிரஸில் இருந்து விலகி பாரத் ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்தார்.

தெலங்கானா தேர்தல் : சீட் கொடுக்க மறுப்பு.. தொண்டர்கள் முன் கீழே விழுந்து அழுத முன்னாள் முதல்வர் !

அங்கிருந்து 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், 2018-ல் நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார். 20214-ல் துணை முதலமைச்சராகவும் இருந்தார். இந்த சூழலில் தற்போது இவரது கான்பூர் நிலையம் தொகுதியில், இவருக்கு சீட் வழங்காமல் மற்றொரு மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கடியம் ஸ்ரீஹரி (Kadiyam Srihari) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த தட்டிகொண்ட ராஜய்யா, கட்சியில் தனக்கு சீட் மறுக்கப்பட்டதன் காரணமாக, ஜங்கவுனில் தன் ஆதரவாளர்கள் முன்பு கீழே விழுந்து அழுதார். இதனால் அவரது ஆதரவாளர்கள், அவரை உற்சாகமூட்டும் விதமாக 'ஜெய் ராஜய்யா..', 'ஜெய் தெலங்கானா' என கோஷமிட்டநார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தட்டிகொண்ட ராஜய்யா மீது அவரது கட்சியை சேர்ந்த கிராம தலைவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை வைத்ததாலே மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அவருக்கு சீட் வழங்கப்படாதது, அவரது ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தேர்தல் அறிக்கை அக்டோபர் 16-ம் தேதி வெளியிடப்படும் என்பது கூடுதல் தகவல்.

banner

Related Stories

Related Stories