சினிமா

Kalki 2898 AD: “அவர் ஒரு சூப்பர் ஸ்டார்.. அவரது பாத்திரம் மிகவும் முக்கியம்” - தீபிகாவை புகழ்ந்த பிரபாஸ்!

தீபிகா ஒரு பெரிய சூப்பர் ஸ்டார் என நடிகர் பிரபாஸ் புகழ்ந்துள்ளார்.

Kalki 2898 AD: “அவர் ஒரு சூப்பர் ஸ்டார்.. அவரது பாத்திரம் மிகவும் முக்கியம்” - தீபிகாவை புகழ்ந்த பிரபாஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் 'Project K'. நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு 'கல்கி 2898 AD' (Kalki 2898 AD). சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் கமல் ஹாசன், அமிதாப் பச்சான், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். Science Fiction படமாக உருவாகும் இந்த படத்தில் கமல் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Kalki 2898 AD: “அவர் ஒரு சூப்பர் ஸ்டார்.. அவரது பாத்திரம் மிகவும் முக்கியம்” - தீபிகாவை புகழ்ந்த பிரபாஸ்!

இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில், இதன் கிளிம்ப்ஸ் வீடியோ கலிபோர்னியா சான் டியாகோவில் நடைபெற்ற 'San Diego Comic-Con International' நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Kalki 2898 AD: “அவர் ஒரு சூப்பர் ஸ்டார்.. அவரது பாத்திரம் மிகவும் முக்கியம்” - தீபிகாவை புகழ்ந்த பிரபாஸ்!

இந்த நிலையில் தீபிகா படுகோனே பற்றி நடிகர் பிரபாஸ் பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. தீபிகா குறித்து பிரபாஸ் பேசியதாவது, "தீபிகா படுகோனே ஒரு சிறந்த சூப்பர் ஸ்டார். மிக அழகான பெண். அவர் ஏற்கனவே உலகளவில் பிரபலமானவர். அவர் லூயிஸ் உய்ட்டன், TAM AdEX மற்றும் மிகப்பெரிய சர்வதேச விளம்பரங்களைச் செய்கிறார் என்று நினைக்கிறேன். அவர் செட்டுக்குள் வரும்போது மிகவும் துடிப்பாக இருப்பார். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவருடன் பணியாற்ற வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். இது தான் அவருடன் எனக்கு முதல் படம்" என்றார்.

மேலும் தீபிகா குறித்து பேசிய இயக்குநர் நாக் அஸ்வின், "தீபிகாவின் கதாபாத்திரத்தை நாம் இன்னும் முழுமையாகப் பார்க்க வேண்டும், அப்போதுதான் அவரை நடிக்க வைத்ததற்கான காரணம் புரியும். ஏனென்றால் அது ஒரு முக்கியமான கதாபாத்திரம்." என்றார்.

banner

Related Stories

Related Stories