சினிமா

“ஹே மன்னா..” உலகளவில் Top 10.. 3 நாடுகளில் நம்பர் 1.. Netflix-ல் மாமன்னனுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்

Netflix-ல் மாமன்னன் திரைப்படம் உலகளவில் 9 நாடுகளில் டாப் 10-ல் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.

“ஹே மன்னா..” உலகளவில் Top 10.. 3 நாடுகளில் நம்பர் 1.. Netflix-ல் மாமன்னனுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம்தான் 'மாமன்னன்'. கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றிநடை போட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சாதிய பாகுபாட்டை அரசியல் கலந்து கூறும் இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் எழுந்தது.

இந்த படத்தை பார்த்த திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். தொடர்ந்து இந்த படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. உதயநிதி, வடிவேலு, பகத் என அனைவரது நடிப்பையும் மக்கள் வெகுவாக பாராட்டினர். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் இன்னமும் ஒரு சில திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

“ஹே மன்னா..” உலகளவில் Top 10.. 3 நாடுகளில் நம்பர் 1.. Netflix-ல் மாமன்னனுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்

இந்த சூழலில் கடந்த 27-ம் தேதி மாமன்னன் திரைப்படம் Netflix ஓடிடி தளத்தில் வெளியானது. அதிலும் மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. Netflix-ல் ட்ரெண்டிங் நம்பர் 1 இடத்தில் இந்த படம் இருப்பதாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இயக்குநர் மாரி செல்வராஜ் ட்வீட் செய்திருந்தார். தொடர்ந்து இந்த படம் தற்போது வரை மக்களிடம் பேசப்பட்டு வருகிறது.

“ஹே மன்னா..” உலகளவில் Top 10.. 3 நாடுகளில் நம்பர் 1.. Netflix-ல் மாமன்னனுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்

இந்த நிலையில் உலகளவில் 9 நாடுகளில் டாப் 10-ல் இந்த படம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. ஆசிய நாடுகளில் பஹ்ரைன், இந்தியா, மலேசியா, மாலதீவுகள், ஓமன், சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள் (UAE), கத்தார் என 9 நாடுகளில் டாப் 10-ல் இடம்பிடித்துள்ளது. அதில் இந்தியா, கத்தார், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய 3 நாடுகளில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. மேலும் கடந்த ஜூலை 24 முதல் 30-ம் தெதி வரை 1.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து, இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "Netflixல் உலகளவிலான பத்து படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது மாமன்னன் திரைப்படம். அதில் 3 நாடுகளில் முதலாவது இடத்தையும், 6 நாடுகளில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளது. வெளியான முதல் வாரத்திலே 1.2 மில்லியன் மக்கள் இத்திரைப்படத்தை பார்வையிட்டுள்ளனர்." என்று குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

banner

Related Stories

Related Stories