சினிமா

கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. இன்றைய OTT ரிலீஸ் படங்கள் என்னென்ன ? - பட்டியல் இதோ

இன்று வெளியாகவுள்ள ஓடிடி வரவுகள் பற்றிய விவரங்கள்..

கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. இன்றைய OTT ரிலீஸ் படங்கள் என்னென்ன ? - பட்டியல் இதோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இன்று வெளியாகவுள்ள ஓடிடி வரவுகள் பற்றிய விவரங்கள்..

கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. இன்றைய OTT ரிலீஸ் படங்கள் என்னென்ன ? - பட்டியல் இதோ

தமிழ் :

>> டக்கர் (Takkar) : Netflix

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் சித்தார்த், திவ்யான்ஷா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த 2019ஆம் ஆண்டே வெளியானது. சில பிரச்னை காரணமாக இந்த படம் ஒத்திவைக்கப்பட்டு கடந்த ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து இன்று Netflix ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. இன்றைய OTT ரிலீஸ் படங்கள் என்னென்ன ? - பட்டியல் இதோ

>> ஃபர்ஹானா (Farhana) : Sony Liv

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த மே 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து இன்று Sony LIV's ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. இன்றைய OTT ரிலீஸ் படங்கள் என்னென்ன ? - பட்டியல் இதோ

>> காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் (Katharbasha Endra Muthuramalingam ) - ZEE 5

முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு, கே.பாக்யராஜ், மாஸ்டர் மகேந்திரன், பி.எஸ்.அவினாஷ், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ரேணுகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த மாதம் (ஜூன்) 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து இன்று ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. இன்றைய OTT ரிலீஸ் படங்கள் என்னென்ன ? - பட்டியல் இதோ

>> ஸ்வீட் காரம் காபி (Sweet Kaaram Coffee) : Amazon Prime

லட்சுமி, மதுபாலா, சாந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த வெப் தொடரை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, சுவாதி ரகுராமன் என 3 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். Amazon Prime ஓடிடியில் நேற்று (ஜூலை 6) வெளியாகியுள்ளது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. இன்றைய OTT ரிலீஸ் படங்கள் என்னென்ன ? - பட்டியல் இதோ

இந்தி :

>> IB 71 - Disney+ Hotstar

வித்யுத் ஜம்வால், நிஹாரிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சங்கல்ப் ரெட்டி இயக்கியுள்ளார். இந்த கதை 1971-ல் நடைபெற்ற விமான ஹைஜாக்கிங் தொடர்பான கதையாகும். கடந்த மே 12-ம் தேதி வெளியான இந்த படம் இன்று Disney+ Hotstar ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. இன்றைய OTT ரிலீஸ் படங்கள் என்னென்ன ? - பட்டியல் இதோ

>> ஆதுரா (Adhura) - Amazon Prime

ரசிகா துகல், இஷ்வாக் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் அனன்யா பானர்ஜி, கெளரவ் கே.சாவ்லா இயக்கியுள்ளனர். வெப் தொடரான 'ஆதுரா' இன்று நேரடியாக Amazon Prime ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. இன்றைய OTT ரிலீஸ் படங்கள் என்னென்ன ? - பட்டியல் இதோ

>> தர்லா (Tarla) - ZEE 5

பியூஷ் குப்தா இயக்கத்தில் ஹுமா குரேஷி, ஷரீப் ஹாஷ்மி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் நேரடியாக ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

banner

Related Stories

Related Stories