சினிமா

வருங்கால கணவருடன் சுற்றுலா சென்ற பிரபல நடிகை:கோர விபத்தில் சிக்கி உயிரிழப்பு -சோகத்தில் சின்னத்திரையுலகம்

சாராபாய் vs சாராபாய் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இந்தி நடிகை வைபவி உபாத்யாயா, சாலை விபத்தில் உயிரிழந்தார்.

வருங்கால கணவருடன் சுற்றுலா சென்ற பிரபல நடிகை:கோர விபத்தில் சிக்கி உயிரிழப்பு -சோகத்தில் சின்னத்திரையுலகம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தி நடிகைகளில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் வைபவி உபாத்யாய் (Vaibhavi Upadhyaya). 32 வயதாகும் இவர், கடந்த 2017-ம் ஆண்டு இந்தி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார். இந்தியில் ஒளிபரப்பான சாராபாய் vs சாராபாய் என்ற தொடரில் ஜாஸ்மின் என்ற கதாப்பாத்திரத்தில் இவர் நடித்தார். இதன் மூலம் இவர் இந்தி சின்னத்திரையுலகில் பிரபலமானார்.

பெரும் வரவேற்பை பெற்ற இந்த தொடர் மூலம் இவருக்கு அடுத்தடுத்து நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. பல பிரபலமான இந்தி தொடர்களில் நடித்த இவர், திரைப்படத்திலும் நடித்தார். தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான சபக் (Chhapaak) படத்திலும் மீனாட்சி எனும் முக்கிய கதாப்பாத்திரமாக இவர் நடித்துள்ளார்.

வருங்கால கணவருடன் சுற்றுலா சென்ற பிரபல நடிகை:கோர விபத்தில் சிக்கி உயிரிழப்பு -சோகத்தில் சின்னத்திரையுலகம்

இந்த சூழலில் வைபவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் நிச்சயமான நபருடன் வைபவி அடிக்கடி சுற்று பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இருவரும் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டனர். அப்போது அங்கே எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் இவர்கள் சென்ற கார், பள்ளத்தில் விழுந்தது.

இந்த விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த அவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது இந்த கோர விபத்தில் சிக்கிய வைபவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் அவருடன் பயணம் செய்த அவரது வருங்கால கணவர் கடும் காயங்களுடன் உயிர் தப்பினார்.

வருங்கால கணவருடன் சுற்றுலா சென்ற பிரபல நடிகை:கோர விபத்தில் சிக்கி உயிரிழப்பு -சோகத்தில் சின்னத்திரையுலகம்

இதையடுத்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரது வருங்கால கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த வைபவிக்கு திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பயணத்தின்போது நடிகை வைபவி தனது இன்ஸ்டா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அதில் “நமக்கு கிடைக்கும் அனைத்து பரிசுகளையும் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்..” என்று ஒரு நீண்ட பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராகவும் நடிகராகவும் விளங்கும் டிஜே மஜேத்தியா, “வாழ்க்கை கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. மிகவும் நல்ல நடிகையாகவும் தோழியாகவும் இருந்த சாராபாய் vs.சாராபாய் நடிகை ஜாஸ்மின் உயிரிழந்துள்ளார். அவரது ஆத்மா சாந்தி அடைக..” என கண்ணீர் பதிவை வெளியிட்டுள்ளார். பிரபல இந்தி சீரியல் நடிகை ரூபாலி கங்குலி வைபவியின் சிறந்த தோழி ஆவார். அவரும் “சீக்கிரம் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டாய்..” என குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து திரை பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருவதோடு அவரது குடும்பத்துக்கு ஆறுதல்களும் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு தற்போது இந்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories