சினிமா

விறுவிறுப்பான காட்சி.. திடீர் விபத்தில் விலா எலும்பு முறிந்து தீவிர சிகிச்சை.. விக்ரமுக்கு என்னாச்சு ?

தங்கலான் படப்பிடிப்பின்போது, ஏற்பட்ட திடீர் விபத்தில் நடிகர் விக்ரமின் விலா எலும்பு முறிந்து தீவிர சிகிச்சையில் இருந்து வருவதாக அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பான காட்சி.. திடீர் விபத்தில் விலா எலும்பு முறிந்து தீவிர சிகிச்சை.. விக்ரமுக்கு என்னாச்சு ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். எந்த வித ஆக்ஷன் சீனாக இருந்தாலும் அனைவரையும் கவரும் வகையில் நடித்து விடுவார். இவரது நடிப்புக்கே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றது.

விறுவிறுப்பான காட்சி.. திடீர் விபத்தில் விலா எலும்பு முறிந்து தீவிர சிகிச்சை.. விக்ரமுக்கு என்னாச்சு ?

குறிப்பாக ஆதித்த கரிகாலன் ரோலை அவர் பக்காவாக செய்திருப்பதாக பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இதனிடையே நடிகர் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.

விறுவிறுப்பான காட்சி.. திடீர் விபத்தில் விலா எலும்பு முறிந்து தீவிர சிகிச்சை.. விக்ரமுக்கு என்னாச்சு ?

இது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், தற்போது இந்த படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கதை கோலார் தங்க வயல் பின்னணியில் நடக்கும் கதை என்று சொல்லப்படுகிறது. இதற்கான 80 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விறுவிறுப்பான காட்சி.. திடீர் விபத்தில் விலா எலும்பு முறிந்து தீவிர சிகிச்சை.. விக்ரமுக்கு என்னாச்சு ?

இந்த நிலையில் நடிகர் விக்ரம் சண்டை காட்சிகளுக்காக பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு பயங்கர காயப்பட்டு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். தற்போது அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

விறுவிறுப்பான காட்சி.. திடீர் விபத்தில் விலா எலும்பு முறிந்து தீவிர சிகிச்சை.. விக்ரமுக்கு என்னாச்சு ?

எனவே அவரால் சில நாட்களுக்கு தங்களான் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இயலாது என அவரது மேலாளர் சூர்ய நாரயணன் தெரிவித்துள்ளார். மேலும் பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலன் பெற்ற அன்பு மற்றும் பாராட்டுகளுக்கும், உலகம் முழுவதுமிலிருந்து பொன்னியின் செல்வன் 2-வுக்கு கிடைக்கும் வியக்க வைக்கும் வரவேற்புக்கு விக்ரம் தனது நன்றிகளை தெரிவித்தார் என்றும் அவர் கூறினார்.

இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு விக்ரம் விரைவில் குணமடைந்து மீண்டும் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories