சினிமா

“ரசிகனா எப்போதும் பெருமை படுகிறேன்..” -விஜயின் புது Office-க்கு விசிட் அடித்த விஷால்.. எதற்காக தெரியுமா?

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் டீசரை பார்த்து படக்குழுவுக்கு நடிகர் விஜய் நேரில் பாராட்டு தெரிவித்துள்ளது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

“ரசிகனா எப்போதும் பெருமை படுகிறேன்..” -விஜயின் புது Office-க்கு விசிட் அடித்த விஷால்.. எதற்காக தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் விஷால். இவர் தற்போது 'மார்க் ஆண்டனி' என்ற படத்தின் நடித்து வருகிறார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் விஷாலுக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, புஷ்பா பட வில்லன் சுனில் உள்ளிட்ட பல முக்கிய திரை நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.

“ரசிகனா எப்போதும் பெருமை படுகிறேன்..” -விஜயின் புது Office-க்கு விசிட் அடித்த விஷால்.. எதற்காக தெரியுமா?

ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் முன்னதாக விஷாலின் 'எனிமி' படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பித்தக்கது. மார்க் ஆண்டனி படத்தின் முதல் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

“ரசிகனா எப்போதும் பெருமை படுகிறேன்..” -விஜயின் புது Office-க்கு விசிட் அடித்த விஷால்.. எதற்காக தெரியுமா?

இந்த சூழலில் இந்த படத்தின் டீசர், ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இதன் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

“ரசிகனா எப்போதும் பெருமை படுகிறேன்..” -விஜயின் புது Office-க்கு விசிட் அடித்த விஷால்.. எதற்காக தெரியுமா?

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டீசரை நடிகர் விஜயிடம் போட்டுக்காட்டி படக்குழு வாழ்த்து பெற்றுள்ளது. விஷால் மற்றும் மார்க் ஆண்டனி குழு நடிகர் விஜயின் புது அலுவலகத்துக்கு சென்று அவரிடம் டீசரை போட்டுக்காட்டி வாழ்த்து பெற்றனர். அந்த டீசரை பார்த்த நடிகர் விஜய், படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்

“ரசிகனா எப்போதும் பெருமை படுகிறேன்..” -விஜயின் புது Office-க்கு விசிட் அடித்த விஷால்.. எதற்காக தெரியுமா?

இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு "என்னுடைய அன்பான அண்ணன் மற்றும் ஹீரோ விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி. என்னுடைய மார்க் ஆண்டனி பட டீசரை பார்த்ததற்கு நன்றி. எப்போதும் உங்கள் ரசிகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

“ரசிகனா எப்போதும் பெருமை படுகிறேன்..” -விஜயின் புது Office-க்கு விசிட் அடித்த விஷால்.. எதற்காக தெரியுமா?

இது தொடர்பான புகைப்படங்களை விஷால் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் பகிர்ந்து தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகிற்னர். மேலும் படக்குழுவுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

“ரசிகனா எப்போதும் பெருமை படுகிறேன்..” -விஜயின் புது Office-க்கு விசிட் அடித்த விஷால்.. எதற்காக தெரியுமா?

நடிகர் விஷாலின் 34-வது படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளார். இதன்மூலம் தாமிரபராணி, பூஜை ஆகிய 2 படங்களை தொடர்ந்து தற்போது 3-வது முறையாக கூட்டணி வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories