சினிமா

“சிகரெட் அடிப்பவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்..” - இயக்குநர் மிஷ்கின் பேச்சால் அதிர்ந்துபோன மேடை !

சிகரெட் அடிப்பவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்ற இயக்குநர் மிஷ்கின் ஒரு படத்தின் விழாவில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“சிகரெட் அடிப்பவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்..” - இயக்குநர் மிஷ்கின் பேச்சால் அதிர்ந்துபோன மேடை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அறிமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் 'டைனோசர்ஸ்'. இந்த படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

“சிகரெட் அடிப்பவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்..” - இயக்குநர் மிஷ்கின் பேச்சால் அதிர்ந்துபோன மேடை !
“சிகரெட் அடிப்பவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்..” - இயக்குநர் மிஷ்கின் பேச்சால் அதிர்ந்துபோன மேடை !

இதில் இயக்குநர்கள் மிஷ்கின், ரமணா, நடிகர்கள் விஜயகுமார், அருண் விஜய், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பல திரை கலைஞர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய இயக்குநர் மிஸ்கின், தம் அடிங்க, தண்ணி அடிங்க என்று முகம் சுழிக்கும் வகையில் பேசினார். இதனால் இவருக்கு சமூக வலைதளங்களில் சிலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

“சிகரெட் அடிப்பவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்..” - இயக்குநர் மிஷ்கின் பேச்சால் அதிர்ந்துபோன மேடை !

இது குறித்து பேசிய அவர், “இது ஒரு சினிமா நிகழ்ச்சி மாதிரி இல்லை; குடும்ப நிகழ்ச்சி மாதிரி இருக்கு. இந்த படத்தின் தயாரிப்பாளர் முதல் அனைவரும் உறுதியாக பேசினார்கள். சினிமா தொழில் என்பது கொஞ்சம் பணத்தை போட்டு கொஞ்சம் பணத்தை எடுக்கும் தொழில் கிடையாது. இந்த படத்தின் தயாரிப்பாளர் உறுதியாக பேசியதை பார்த்தால் அவர் சினிமாவில் தான் கடைசி வரை இருப்பார் என்பது நன்றாகவே தெரிகிறது.

“சிகரெட் அடிப்பவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்..” - இயக்குநர் மிஷ்கின் பேச்சால் அதிர்ந்துபோன மேடை !

நான் எனது அடுத்த படம் எழுதிக் கொண்டு இருக்கிறேன். 2 நாட்களுக்கு முன்பு ஒரு குழுவினர் வந்தார்கள். அருகில் அமர்ந்த ஒரு பையன் தான் (டைனோசர் பட இயக்குநர் மாதவன்) இயக்குநர் என்றனர்.அவர் முகத்தை பார்த்ததும் அவர் நிறைய சிகரெட் அடிப்பவர் என்று தெரிந்தது. அப்போதே எனக்கு தெரிந்து விட்டது இந்த படம் ஹிட் என்று.

“சிகரெட் அடிப்பவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்..” - இயக்குநர் மிஷ்கின் பேச்சால் அதிர்ந்துபோன மேடை !

ஏன் இதை சொல்கிறேன் என்றால், நான் முதல் படம் எடுக்கும் பொழுது ஒரு நாளைக்கு 100 சிகரெட் அடித்தேன். அஞ்சாதே படத்திற்கு எல்லாம் 120 சிகெரெட் அடித்தேன். அந்த டென்ஷன் இருந்தால் தான் இயக்குநர்.

'டைனோசர்ஸ்' ரொம்ப வித்தியாசமான தலைப்பு. அதற்கு கீழ் உள்ள சப்-டைட்டில் “Die No sirs”- என்ன அர்த்தம் என்பது எனக்கு புரியவே இல்லை. ஆனால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories