சினிமா

“என்ன பண்ணுறது.. இங்க கூட Selfie எடுக்குறாங்க..” - ரசிகர்கள் குறித்து மன வருத்தமடைந்த பிரபல நடிகை !

துக்க வீட்டில் கூட ரசிகர்கள் Selfie எடுப்பதாக பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர் வேதனை தெரிவித்துள்ளார்.

“என்ன பண்ணுறது.. இங்க கூட Selfie எடுக்குறாங்க..” - ரசிகர்கள் குறித்து மன வருத்தமடைந்த பிரபல நடிகை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் நவ்யா நாயர். மலையாளத்தில் அறிமுகமான இவர், தமிழில் 2004-ம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான 'அழகிய தீயே' படத்தில் அறிமுகமானார். "விழிகளின் அருகினில் வானம்.." என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தமிழில், சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி, பாச கிளிகள், அமிர்தம், ராமன் தேடிய சீதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் மலையாளத்தில் அதிக வாய்ப்புகள் வந்ததால், அதில் மட்டுமே இவர் கவனம் செலுத்தினார். தொடர்ந்து கன்னட படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

“என்ன பண்ணுறது.. இங்க கூட Selfie எடுக்குறாங்க..” - ரசிகர்கள் குறித்து மன வருத்தமடைந்த பிரபல நடிகை !

இந்த சூழலில் கடந்த 2012-க்கு பின்னர் இவருக்கு திருமணமாகி தாயான நிலையில் மலையாளத்தில் ஒரு படம் கூட நடிக்காத இவர், சுமார் 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம்தான் 'ஜானகி ஜானே'. நீண்ட இடைவெளிக்கு பிறகு கம் பேக் கொடுத்திருக்கும் இவருக்கு ரசிகர்கள் வரவேற்பையும் அளித்துள்ளனர்.

“என்ன பண்ணுறது.. இங்க கூட Selfie எடுக்குறாங்க..” - ரசிகர்கள் குறித்து மன வருத்தமடைந்த பிரபல நடிகை !

இந்த நிலையில் இந்த படம் குறித்து அண்மையில் பேட்டி அளித்த அவர், ரசிகர்கள் குறித்து கருத்து தெரிவித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ஜானகி ஜானே படத்தின் மூலம் மலையாள சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளேன். இத்தனை ஆண்டுகள் கழித்து நடிக்கிறோம் ரசிகர்கள் ஏற்றுகொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது. ஆனால்,எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளார்கள். நிறைய கதைகள் கேட்டேன், அதில் இந்த கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்ததால் நடிக்க சம்மதித்தேன்.

“என்ன பண்ணுறது.. இங்க கூட Selfie எடுக்குறாங்க..” - ரசிகர்கள் குறித்து மன வருத்தமடைந்த பிரபல நடிகை !

சினிமாவில் பல மாற்றங்கள் வந்து இருப்பதை பார்க்க மனதிற்கு நிறைவாக இருக்கிறது. முன்னெல்லாம் ஹீரோயின், ஹீரோவுக்கு மட்டுமே கேரவன் கொடுத்த நிலையில், தற்போது அனைவருக்கும் கேரவன் கொடுப்பதை ஒரு நல்ல விஷயமாக தெரிகிறது. முன்பை விட இப்போது படப்பிடிப்பு தளத்தில் நிறைய பெண்களை பார்க்க முடிகிறது இது பாராட்டுக்குரியது." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு சிலர் கையில் இருந்த செல்போஃன், தற்போது அனைவர் கையிலும் இருப்பதால் அனைவரும் கேமரா மேன் ஆகிவிடுகிறார்கள். உடல் நலம் சரியில்லாமல், மருத்துவமனையில் இருக்கும் போதும் கூட செல்ஃபி எடுக்கிறார்கள். இறந்த வீட்டிலும் செல்ஃபி எடுக்கிறார்கள். இது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது." என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories