சினிமா

“10 நிமிடம் அட்ஜெஸ்ட்மன்ட்.. நீதான் லேடி சூப்பர் ஸ்டாருக்கு மகள்..” - இளம் நடிகை மாளவிகா பரபர புகார் !

தான் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக வளர்ந்து வரும் பிரபல மலையாள நடிகை மாளவிகா ஸ்ரீநாத் அண்மையில் பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“10 நிமிடம் அட்ஜெஸ்ட்மன்ட்.. நீதான் லேடி சூப்பர் ஸ்டாருக்கு மகள்..” - இளம் நடிகை மாளவிகா பரபர புகார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் மாளவிகா ஸ்ரீநாத். இவர், கடந்த 2021-ல் மதுரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு 2022-ல் நிவின் பாலி நடிப்பில் வெளியான Saturday Night என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் பிரபலமான இவர், அதன்பிறகு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த சூழலில் தான் திரையுலகில் இருக்கும் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அது எந்த படத்தின்போது, யாரால் என்பது குறித்த தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை. அண்மையில் youtube சேனல் ஒன்றுக்கு இது பற்றி பேட்டி அளித்திருந்தார்.

“10 நிமிடம் அட்ஜெஸ்ட்மன்ட்.. நீதான் லேடி சூப்பர் ஸ்டாருக்கு மகள்..” - இளம் நடிகை மாளவிகா பரபர புகார் !

இதுகுறித்து பேசிய அவர், “திரையுலகில் Casting couch என்பது இருக்கிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவர். இதற்கு முன்பு நான் இதைப் பற்றி பேசியதில்லை. இப்போது, தொழில்துறையில் எனக்கு ஒரு இடம் இருப்பதால் இதைப் பற்றி நான் பேசுகிறேன்.

சுமார் மூன்று வருடங்களுக்கு முன், நடிகை மஞ்சு வாரியர் படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். மஞ்சு வாரியரின் மகள் வேடத்திற்காக ஆடிஷன் நடந்தது. மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியருடன் ஒரு முறையாவது நடிக்க வேண்டும் என்பது பலரது கனவாகவே உள்ளது. நானும் இதற்காக ஆசையாக ஆடிஷனில் கலந்துகொண்டேன்.

“10 நிமிடம் அட்ஜெஸ்ட்மன்ட்.. நீதான் லேடி சூப்பர் ஸ்டாருக்கு மகள்..” - இளம் நடிகை மாளவிகா பரபர புகார் !

ஆனால் என்னை ஆடிஷன் செய்தவர்கள் படத்தில் நடிக்கவில்லை என்று பிறகுதான் தெரிந்தது. மஞ்சு வாரியருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். சினிமா துறையில் எனக்கு பெரிதாக முன் அனுபவம் இல்லை என்பதால் என் அம்மா, நான் மற்றும் தங்கையுடன் இன்னோவாவில் ஆடிஷனுக்கு அழைத்துச் சென்றேன்.

அங்கே ஒரு தனி அறையில் வைத்து ஆடிஷன் நடைபெற்றது. அப்போது ஆடிஷன் முடிந்ததும் அப்போது அங்கிருந்த நபர் என் தலைமுடி சரியாக இல்லை என்றும், பக்கத்து அறைக்கு சென்று அதை சரிசெய்துவிட்டு வருமாறும் கூறினார். எனவே நான் அங்கே சென்றபோது அந்த நபர் என்னை பின்னால் இருந்து கட்டியணைத்தார். நான் அவரை தள்ளிவிட்டேன்.

“10 நிமிடம் அட்ஜெஸ்ட்மன்ட்.. நீதான் லேடி சூப்பர் ஸ்டாருக்கு மகள்..” - இளம் நடிகை மாளவிகா பரபர புகார் !

பின்னர் என்னிடம் 'நீ 10 நிமிஷம் மட்டும் அட்ஜஸ்மெண்ட் செய்தால் போதும், மஞ்சு வாரியரின் மகளாக நடிக்கலாம்' என்றார். அப்போது அவரது கையில் கேமராவும் இருந்தது. இதனால் நான் அழ ஆரம்பித்து அவருடைய கேமராவைத் தட்டிவிட்டேன். அப்போது அவருடைய கவனம் சிதறவே, நான் அங்கிருந்து தப்பித்துவிட்டேன். நான் அழுதுகொண்டே வெளியில் வந்ததால் என் குடும்பத்தாருக்கு ஒன்றும் புரியவில்லை. இப்போ நினைச்சாலும் அது பயங்கரமான அனுபவமாக இருக்கிறது. இது போன்று நான் 3 முறை எதிர்கொண்டேன்." என்றார்.

முன்னதாக இதே போல் மலையாளத்தில் சில நடிகையால் Casting couch பற்றி வெளிப்படையாக பேசி வந்த நிலையில், தற்போது வளர்ந்து வரும் நடிகையான மாளவிகா ஸ்ரீநாத் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories