சினிமா

‘விடுதலை’ படத்தின் தாக்கம்.. கோபப்பட்ட மனைவி, மகள்: தியேட்டரிலேயே அடி வாங்கிய சேத்தன் - எதனால் தெரியுமா ?

விடுதலை படத்தை தியேட்டரில் வைத்து பார்க்கும்போதே தனது மனைவியும், மகளும் தன்னை அடித்து விட்டதாக நடிகர் சேத்தன் தெரிவித்துள்ளார்.

‘விடுதலை’ படத்தின் தாக்கம்.. கோபப்பட்ட மனைவி, மகள்: தியேட்டரிலேயே அடி வாங்கிய சேத்தன் - எதனால் தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன் நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 31-ம் தேதி வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இது நடிகர் சூரி முதல் முறை கதாநாயகனாக நடிக்கும் படமாகும். சூரி இந்த படத்தில் எப்படி நடிப்பாரோ என்று ரசிகர்கள் யோசித்து வைத்திருந்த நிலையில், அவர்களுக்கு பெரிய அளவு திருப்தி அளிக்கும் வகையில் அவரது நடிப்பு இருக்கிறது.

‘விடுதலை’ படத்தின் தாக்கம்.. கோபப்பட்ட மனைவி, மகள்: தியேட்டரிலேயே அடி வாங்கிய சேத்தன் - எதனால் தெரியுமா ?

இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில், பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் சூரி தனது வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வெற்றியின் மூலமே சூரி இனி காமெடி வேடங்களில் நடிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

‘விடுதலை’ படத்தின் தாக்கம்.. கோபப்பட்ட மனைவி, மகள்: தியேட்டரிலேயே அடி வாங்கிய சேத்தன் - எதனால் தெரியுமா ?

இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் நல்ல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல்வாதிகளும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்திற்கு 'ஏ' தணிக்கை சான்றிதழ் கொடுக்க பட்டாலும், திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்த படத்தின் நடித்த நடிகர்கள் நடிகைகள் தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

‘விடுதலை’ படத்தின் தாக்கம்.. கோபப்பட்ட மனைவி, மகள்: தியேட்டரிலேயே அடி வாங்கிய சேத்தன் - எதனால் தெரியுமா ?

அந்த வகையில் அண்மையில் இதில் நடித்த நடிகர் சேத்தன் பேட்டி அளித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஓசி என்ற கதாபாத்திரத்தில் நெகட்டிவ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கர்ணன் படத்தில் நடிகர் நட்ராஜின் கதாபாத்திரத்தை ரசிகர்கள் எப்படி அவரை விமர்சித்தனரோ அதே போல், நடிகர் சேத்தனைவிமர்சித்து வருகின்றனர்.

‘விடுதலை’ படத்தின் தாக்கம்.. கோபப்பட்ட மனைவி, மகள்: தியேட்டரிலேயே அடி வாங்கிய சேத்தன் - எதனால் தெரியுமா ?

இந்த நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் தன்னை தனது மகளும், மனைவியும் சேர்ந்து அடித்ததாக மனம் திறந்துள்ளார் நடிகர் சேத்தன். இதுகுறித்து அண்மையில் பேசிய அவர், "விடுதலை படத்தை தியேட்டரில் வைத்து பார்க்கும்போதே என் மனைவி தேவதர்ஷினியும், எனது மகளும் என்னை அடித்து விட்டனர். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக என்னை திட்டினர்.

‘விடுதலை’ படத்தின் தாக்கம்.. கோபப்பட்ட மனைவி, மகள்: தியேட்டரிலேயே அடி வாங்கிய சேத்தன் - எதனால் தெரியுமா ?

மேலும் அவரது நண்பர்களும் இவர் இப்படியா இருக்கிறார் என்று என்னை குறிப்பிட்டு அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்கள் என்னை அடித்ததற்கோ அல்லது என்னை பற்றி விமர்சித்ததற்கோ நான் கவலை படவில்லை. ஏனெனில் அந்த கதாபாத்திரம் அவர்களை அப்படி பேசவைத்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியாகதான் இருக்கிறது.

‘விடுதலை’ படத்தின் தாக்கம்.. கோபப்பட்ட மனைவி, மகள்: தியேட்டரிலேயே அடி வாங்கிய சேத்தன் - எதனால் தெரியுமா ?

அடுத்து வரும் விடுதலை பார்ட் 2-லும் நான் நடிக்கும் இதே ஓசி கதாபாத்திரம் மேலும் பிரபலமாக பேசப்படும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories