சினிமா

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு LOCKERல் இருந்து தங்க, வைர நகைகள் மாயம்: பணிப்பெண் அதிரடி கைது -என்ன நடந்தது?

நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டின் லாக்கரில் வைத்திருந்த தங்க, வைர நகைகளை அவர் வீட்டின் பணிப்பெண்ணே திருடியுள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு LOCKERல் இருந்து தங்க, வைர நகைகள் மாயம்: பணிப்பெண் அதிரடி கைது -என்ன நடந்தது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்குக்ம் ரஜினிகாந்துக்கு இரண்டு ஐஸ்வர்யா, செளந்தர்யா என்ற மகள்கள் உள்ளனர். இதில் இருவருக்கும் திருமணமான நிலையில், மூத்த மகள் ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். தற்போது ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினிகாந்துடன் சென்னை போயஸ் கார்டன் ராகவீரா அவென்யூவில் வசித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு LOCKERல் இருந்து தங்க, வைர நகைகள் மாயம்: பணிப்பெண் அதிரடி கைது -என்ன நடந்தது?

இந்த நிலையில் ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது தனது வீட்டின் லாக்கரில் இருந்த தங்க, வைர நகைகள், நவரத்தின கற்கள் ஆகியவற்றை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில், கடந்த 2019-ம் ஆண்டு தனது தங்கை சௌந்தர்யாவின் திருமணத்திற்கு பின்பு 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள 60 சவரன் தங்க, வைர நகைகளை லாக்கரில் வைத்திருந்ததாகவும், தான் லாக்கரில் நகைகளை வைத்திருந்தது, தனது வீட்டில் வேலை பார்த்து வரும் பணிப்பெண்கள் ஈஸ்வரி, லட்சுமி மற்றும் கார் ஒட்டுநர் வெங்கட் ஆகியோருக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த லாக்கரானது இதுவரை சுமார் 3 இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 2021 வரை, செயின்ட் மேரி சாலையில் உள்ள அவரது குடியிருப்பில் இருந்த இந்த லாக்கர், பின்னர் சிஐடி காலனியில் நடிகர் தனுஷுடன் அவர் பகிர்ந்து கொண்ட குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மீண்டும் செப்டம்பர் 2021 இல் செயின்ட் மேரி சாலை அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 9, 2022 அன்று, லாக்கர் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு மாற்றப்பட்டது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு LOCKERல் இருந்து தங்க, வைர நகைகள் மாயம்: பணிப்பெண் அதிரடி கைது -என்ன நடந்தது?

இதையடுத்து தனது தந்தை வீட்டில் இருந்த லாக்கரை கடந்த மாதம் ஐஸ்வர்யா திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த நகைகள் மயமானது தெரியவந்தது. இதையடுத்து அவர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் தான் நகைகளை வைத்திருந்தது தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்கு தெரியும் என்றும், தான் இங்கே இல்லாத போது அவர்களும் அடிக்கடி அபார்ட்மெண்டிற்கு செல்வார்கள் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதலில் சந்தேகத்தின் பேரில் வீட்டு வேலையாட்களை விசாரித்தனர். அதில் ஈஸ்வரிதான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இங்கு திருடிய நகைகளை வைத்து அவருக்கு சொந்தமாக நிலம் ஒன்றை வாங்கியுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு LOCKERல் இருந்து தங்க, வைர நகைகள் மாயம்: பணிப்பெண் அதிரடி கைது -என்ன நடந்தது?

அதாவது ஈஸ்வரி பல வருடங்களாக வேலை இவர்களிடம் வேலை பார்த்து வந்துள்ளார். நடிகர் தனுஷ் வீட்டில் இருக்கும்போது வரை நன்றாக பழகி வந்துள்ளார் ஈஸ்வரி. இப்படி தொடர்ந்து ஈஸ்வரி இவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் திடிரென அவர் வேலையை விட்டு நின்றுள்ளார்.

2019-ம் முதலே லாக்கரில் இருந்த நகைகளைத் சிறுகச் சிறுக திருடி வந்த ஈஸ்வரி, அந்த மொத்த நகைகளையும் விற்று தனது கணவர் அங்கமுத்துவின் வங்கி கணக்கில் செலுத்தி வந்துள்ளார். மேலும் அந்த பணத்தை வைத்து சொந்தமாக நிலம் வாங்கியுள்ளார். அதோடு அவருக்கு என்று நகைகளை வாங்கியதோடு, கொஞ்ச பணத்தை ரொக்கமாகவும் வைத்திருந்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு LOCKERல் இருந்து தங்க, வைர நகைகள் மாயம்: பணிப்பெண் அதிரடி கைது -என்ன நடந்தது?

இவை அனைத்தும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பணி பெண் ஈஸ்வரியை கைது செய்த போலீசார், அவர் செளந்தர்யா ரஜினிகாந்த், எந்த வீட்டில் இருக்கும்போது நகைகளை திருடினர்? என்றும், அந்த நகைகளை எவ்வாறு விற்பனை செய்தனர் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து ஈஸ்வரி திருடிய நகைகளை மீட்பதற்கான பணியில் தேனாம்பேட்டை போலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் லாக்கரில் வைத்திருந்த 60 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளை வீட்டில் வேலை பார்த்து வந்த பெண்ணே, சிறுக சிறுக திருடி, அதனை விற்று சொத்து வாங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories