சினிமா

“என்னை இவங்க கொன்னுட்டாங்க..” - சாமி பட வில்லன் நடிகர் Video வெளியிட்டு உருக்கம்.. என்ன நடந்தது ?

பிரபல தெலுங்கு நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் தான் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திக்கு வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“என்னை இவங்க கொன்னுட்டாங்க..” - சாமி பட வில்லன் நடிகர் Video வெளியிட்டு உருக்கம்.. என்ன நடந்தது ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆந்திராவை சேர்ந்தவர் பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசன். 1978-ல் திரையில் அறிமுகமான இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக இந்தி படத்தில் நடித்த இவர், தமிழில் ஹரி இயக்கத்தில் கடந்த 2003-ல் விக்ரம் நடிப்பில் வெளியான 'சாமி' படத்தில் நடித்தார். அதில் பிச்சை பெருமாள் கதாபாத்திரத்தில் நடித்த இவர், வெகுவாக பாராட்டப்பட்டார்.

“என்னை இவங்க கொன்னுட்டாங்க..” - சாமி பட வில்லன் நடிகர் Video வெளியிட்டு உருக்கம்.. என்ன நடந்தது ?

தெலுங்கு ரசிகர்களை தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். அதன்பிறகு தமிழில் குத்து, ஏய், உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் விஜயின் திருப்பாச்சி படத்தில் 'சனியன் சகடன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமானார். பின்னர் தொடர்ச்சியாக தாண்டவம், சகுனி, கோ என படங்களில் சீரியஸாக நடித்து, 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தில் காமெடி ரோலில் நடித்தார்.

“என்னை இவங்க கொன்னுட்டாங்க..” - சாமி பட வில்லன் நடிகர் Video வெளியிட்டு உருக்கம்.. என்ன நடந்தது ?

அதில் கார்த்தி, சந்தானத்துக்கு விளம்பரம் கொடுக்கும் நபராக காமெடியில் அசத்தியிருப்பார். இப்படி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த இவர், 2015-ல் இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான 'பத்ம ஸ்ரீ' விருதை பெற்றார். தற்போது 75 வயதாகும் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

“என்னை இவங்க கொன்னுட்டாங்க..” - சாமி பட வில்லன் நடிகர் Video வெளியிட்டு உருக்கம்.. என்ன நடந்தது ?

இந்த நிலையில் இவர் உயிரிழந்துவிட்டதாக இணையத்தில் செய்தி பரவத் தொடங்கியுள்ளது. இதனை மறுத்து கோட்டோ ஸ்ரீனிவாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, "சமூக வலைதளங்கள் என்னை கொன்றுவிட்டன. மக்கள் யாரும் அந்த வதந்தியை நம்ப வேண்டாம். பொய்ச் செய்திகளை, வதந்திகளை பரப்புவோருக்கு மக்கள் தக்க பாடத்தை கற்பிக்க வேண்டும். நான் இறந்துவிட்டதாக வந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

நாளை தெலுங்கு வருட பிறப்பான உகாதி பண்டிகையை கொண்டாடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த வேளையில்தான் இதுப்போன்ற வதந்திகள் பரப்பப்பட்டிருக்கிறது. ஏராளமானோர் என்னை தொடர்புகொண்டு கேட்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது. என் இடத்தில் வேறு எந்த முதியவராக இருந்தால் அவருக்கு இதயமே வெடித்திருக்கும்.

“என்னை இவங்க கொன்னுட்டாங்க..” - சாமி பட வில்லன் நடிகர் Video வெளியிட்டு உருக்கம்.. என்ன நடந்தது ?

இந்த வதந்திகள் பரவியதால் என் வீட்டிற்கு தற்போது 10 காவல்துறையினர் பாதுகாப்பு நிற்கிறார்கள். பெயர், புகழை ஈட்ட எக்கச்சக்கமான வழிகள் இருக்கின்றன. ஆனால் வதந்திகளை பரப்புவதன் மூலம் அல்ல.' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

banner

Related Stories

Related Stories