சினிமா

திடீரென ICU-வில் அனுமதிக்கப்பட்ட வீரம் அஜித்தின் தம்பி.. ரசிகர்கள் அதிர்ச்சி.. திரையுலகில் பரபரப்பு !

பிரபல தமிழ் நடிகர் பாலா உடல்நலக்குறைவால் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென ICU-வில் அனுமதிக்கப்பட்ட வீரம் அஜித்தின் தம்பி.. ரசிகர்கள் அதிர்ச்சி.. திரையுலகில் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அண்மைக்காலமாக திரைபிரபலங்கள் பலரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி வெளிவந்த வண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல தமிழ் நடிகர் பாலா உடல்நலக்குறைவால் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென ICU-வில் அனுமதிக்கப்பட்ட வீரம் அஜித்தின் தம்பி.. ரசிகர்கள் அதிர்ச்சி.. திரையுலகில் பரபரப்பு !

சென்னையை சேர்ந்த இவர், 2002-ல் தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார். அதன்பிறகு தமிழில் அன்பு, காதல் கிசு கிசு, கலிங்கா, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட படங்கள் நடித்தார். தொடர்ந்து அதன்பிறகு மலையாளத்தில் அதிக வாய்ப்பு கிடைக்கவே அங்கே படங்கள் தொடர்ந்து நடித்து வந்தார்.

திடீரென ICU-வில் அனுமதிக்கப்பட்ட வீரம் அஜித்தின் தம்பி.. ரசிகர்கள் அதிர்ச்சி.. திரையுலகில் பரபரப்பு !

தொடர்ந்து மலையாளத்தில் பல படங்கள் நடித்து வந்த இவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு 2014-ல் பாலாவின் அண்ணனும், இயக்குநருமான சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்தில் நடித்தார். அதில் அஜித்தின் 4 தம்பிகளில் ஒருவராக வருவார். அதன்பிறகும் மலையாளத்தில் நடித்து வந்த இவர், மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2021-ல் வெளியான 'அண்ணாத்த' படத்தில் நடித்தார்.

திடீரென ICU-வில் அனுமதிக்கப்பட்ட வீரம் அஜித்தின் தம்பி.. ரசிகர்கள் அதிர்ச்சி.. திரையுலகில் பரபரப்பு !

இதனிடையே பாடகி அம்ருதாவை 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதனை அடுத்து 2021-ஆம் ஆண்டு எலிசபெத் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது 1 குழந்தை உள்ளது.

திடீரென ICU-வில் அனுமதிக்கப்பட்ட வீரம் அஜித்தின் தம்பி.. ரசிகர்கள் அதிர்ச்சி.. திரையுலகில் பரபரப்பு !

இந்த நிலையில் நடிகர் பாலாவுக்கு அண்மைக்காலமாக உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால் அவர் கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே சோதனை மேற்கொண்டதில், அவருக்கு கல்லீரலில் சார்ந்த பிரச்னை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து தற்போது அவர் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் பாலா ஐ சி யு-வில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை அடுத்து, பாலாவின் முன்னாள் மனைவி அம்ரிதா, அவருடைய மகள், தாயார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

திடீரென ICU-வில் அனுமதிக்கப்பட்ட வீரம் அஜித்தின் தம்பி.. ரசிகர்கள் அதிர்ச்சி.. திரையுலகில் பரபரப்பு !

பிரபல நடிகர் பாலா மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வருவது தொடர்பான செய்தி வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியிலும், திரை பிரபலன்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விரைவில் குணமடைய அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories